ஏர்டெல் அதிரடி: வெறும் ரூ.1/-க்கு புதிய திட்டம்.!
ஒரு நிலையான இடத்தை அடைந்த பின்னர், பார்தி ஏர்டெல் ஆனது தனக்கே உரிய பாணியிலான காம்போ வாய்ப்புகளை/ சலுகைகளை போட்டித்தன்மைமிக்க விலையில் அறிமுகம் செய்ய தொடங்கியது.
ஆரம்பத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால் உருக்குலைந்த "இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான" பார்தி ஏர்டெல் ஆனது மெல்ல மெல்ல மீண்டு, ஜியோவின் காம்போ (அதாவது மலிவான விலையின் கீழ் அதிவேக டேட்டா உடன் வரம்பற்ற வாய்ஸ் நன்மைகள்) பாணியை பின்பற்றி மேலே எழுந்தது.

ஒரு நிலையான இடத்தை அடைந்த பின்னர், பார்தி ஏர்டெல் ஆனது தனக்கே உரிய பாணியிலான காம்போ வாய்ப்புகளை/ சலுகைகளை போட்டித்தன்மைமிக்க விலையில் அறிமுகம் செய்ய தொடங்கியது.
அது ஜியோவைவே பின்னடைய செய்யும் வண்ணம் இருந்தது மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை புதிய ஆபர்களை வழங்க தூண்டியது என்றும் கூட கூறலாம். அம்மாதிரியான தூண்டலின் உச்சக்கட்டம் தான் இந்த ரூ.1/- திட்டம்.!

வெறும் ரூ.1/- என்கிற விலை.!
ஆம். மிக விரைவில் ஒரு புதுமையான வாய்ப்பை ஏர்டெல் அறிமுகப்படுத்த உள்ளது. முன்னர் குறிப்பிட்டபடி இந்த திட்டமானது வெறும் ரூ.1/- என்கிற விலையை கொண்டிருக்கும்.

ரீபில் (Refill) செய்ய அனுமதிக்கும்.!
இதன் மூலம் பயனர்கள் தங்கள் தற்போதைய வரம்பற்ற காம்போ திட்டத்தை ரீபில் (Refill) செய்ய அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த ஏர்டெல் வாய்ப்பானது எப்போது உருட்டப்படும் என்பது சார்ந்த தெளிவான வார்தைகள் ஏதுமில்லை.

ஏர்டெல் ரூ.1/- எப்படி வேலை செய்யும்.?
உதாரணமாக, உங்களின் தற்போதைய வரம்பற்ற காம்போ திட்டம் காலாவதியாகி, நீங்கள் ரீசார்ஜ் செய்வதை நிலுவையில் வைத்திருக்கும் தருணத்தில் ஏர்டெல்-ன் ரூ.1/- ரீபில் வாய்ப்பு அணுக கிடைக்கும்.

ரீபில் செய்தபின்னர்.?
மிகவும் சிறப்பான விடயம் என்னவெனில் ரூ.1/- ரீபில் செய்தபின்னர் உங்களுக்கு கிடைக்கும் வழக்கமான நன்மைகள் அனைத்துமே கிடைக்கும் என்பது தான். எடுத்துக்காட்டிற்கு, 1 ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் பத்து நாட்களுக்கு 100எஸ்எம்எஸ்/நாள் (சிலருக்கு 28 நாட்கள்) ஆகிய நன்மைகளை வழங்கும் ஏர்டெல் ரூ.93/- திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்திருந்தால், அது காலாவதியாகும் போது ரூ.1/- ரீபில் வாய்ப்பு அணுக கிடைக்கும்

நீண்டகால செல்லுபடியாகும் திட்டங்களை நிரப்ப உதவுமா.?
மேலும் இந்த ரூ.1/- ஆனது, ஏர்டெல் வாடிக்கையாளர்களின் நீண்டகால செல்லுபடியாகும் திட்டங்களை நிரப்ப உதவுமா அல்லது ஒரு மாத காலம் என்கிற குறுகிய கால திட்டங்களை மட்டுமே கட்டுப்படுத்த அனுமதிக்கிறதா என்பதும் தெரியவில்லை.

முற்றிலும் கையேறாக (மேனுவல்) இருக்கும்.!
இருப்பினும், இந்த (ரீபில்) மறு நிரப்புதல் செயல்முறையானது முற்றிலும் கையேறாக (மேனுவல்) இருக்கும். அதாவது ஒரு பயனர் தனது தற்போதைய திட்டத்தின் காலாவதியாகும் தேதியன்று, ஏர்டெல் பயன்பாடு அல்லது இணையதளத்தில் புதுப்பித்தல் பெற வேண்டியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம். இன்னொரு வார்த்தையில் கூறினால் ஏர்டெல் நிறுவனம் உங்களை ரூ.1/- ரீபில் தேவையா என்று கேட்காது.

ஜியோவும் ரூ.1-க்கு திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு.?
எது எப்படியாகினும், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த தூண்டலால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவும் இதே மாதிரியான ஒரு திட்டத்தை அறிவிக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் தற்போது டெலிகாம் துறையின் நிலைப்பாடே - தொழில்ரீதியிலான சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது தான்.

நீண்ட கால திட்டமொன்றை அறிமுகம் செய்தது
இதற்கு முன்னதாக ஏர்டெல் நிறுவனமானது அதன் புதிய நீண்ட கால திட்டமொன்றை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த திட்டத்தின் மதிப்பு ரூ.995/- ஆகும். ஏர்டெல் ரூ.995/- ஆனது 180 நாட்களுக்கு செல்லுபடியாகும், அதாவது 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும். நன்மைகளை பொறுத்தமட்டில் ரூ.995/- வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை தேசிய ரோமிங் அழைப்பு நன்மைகளுடன் சேர்த்தே வழங்குகிறது.

அனைத்து கைபேசிகளுக்கும் பொருந்தும்
ஏர்டெல் வலைத்தளத்தின்படி, இதன் அழைப்பி நன்மைகளுக்கு எந்த தினசரி அல்லது வாராந்திர வரம்பும் இல்லை. ஆக ஏர்டெல் ரூ.995/- ஆனது உண்மையிலேயே வரம்பற்றது. மேலும் இந்த திட்டமானது அனைத்து கைபேசிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளது.

மொத்தம் 18000 எஸ்எம்எஸ்கள்
வாய்ஸ் நன்மைகள் மட்டுமின்றி இந்த திட்டத்துடன் மாதம் 1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி தரவு பயன்படும் கிடைக்கும். உடன் இந்த ரீசார்ஜ் பேக்கின்கீழ் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் கிடைக்கும். அதாவது ரூ.995/- செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 18000 எஸ்எம்எஸ்கள் கிடைக்குமென்று அர்த்தம்.

தமிழ்நாடு வட்டத்தில்
டெலிகாம்இன்ஃபோ.காம் வலைத்தளத்தின்படி, முதலில் இந்த வாய்ப்பானது தமிழ்நாடு வட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு செல்லுபடியாகிறது. பின்னர் தெலுங்கானா, தில்லி என்சிஆர் மற்றும் கர்நாடகாவிலும் கிடைக்கின்றது. வட்டத்திற்கு ஏற்றப்படி செல்லுபடியாகும் காலத்தில் சில மாற்றங்கள் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாள் ஒன்றிற்கு 1ஜிபி
உங்களுக்கு நீண்டகால குரல் அழைப்பு தேவைப்படும் அதே சமயத்தில் அதிக டேட்டா தேவையில்லை என்றால் ரூ.995/- ஒரு சிறந்த திட்டமாகும். ஒருவேளை டேட்டா தேவைப்பட்டால் செல்லுபடியாகும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ரூ.193/- என்கிற டேட்டா ஆட்-ஆன் திட்டத்தை ரூ.995/- உடன் நீங்கள் சேர்க்கலாம்.

வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்
மறுபுறம் நீங்கள் தினசரி அளவில் டேட்டா வழங்கும் தரவுத் திட்டத்தை தேடுகிறீர்களானால், ஏர்டெல் ரூ.999/- ஒரு தர்க்கரீதியான தேர்வாகும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சேர்த்து 60ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

ஒரே நாளில் கூட பயன்படுத்தலாம்
இருப்பினும், இந்த திட்டம் 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ரூ.995/- போல 180 நாட்களுக்கு செல்லுபடியை கொண்டிருக்கவில்லை. ரூ.999/-ல் டேட்டா பயன்பாடு வரம்பு இல்லை என்பதால், மொத்தமாக கிடைக்கும் 60ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 90 நாட்களுக்கும் பயன்படுத்தலாம் அல்லது ஒரே நாளில் கூட பயன்படுத்தலாம்.

உள்ளூர், எஸ்டிடி மற்றும் வெளிச்செல்லும் தேசிய ரோமிங்
உடன் இந்த ரூ.999/- ஆனது உள்ளூர், எஸ்டிடி மற்றும் வெளிச்செல்லும் தேசிய ரோமிங் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. அதாவது ரூ.999/- செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 9000 எஸ்எம்எஸ்கள் கிடைக்குமென்று அர்த்தம்.

மூலம்: டெலிகாம்டால்க். இன்ஃபோ


Click it and Unblock the Notifications