Home
News

இப்படியொரு ஏர்டெல் திட்டமா.? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு, கூடுதல் போட்டியை உண்டாக்கும் முனைப்பின்கீழ் பார்தி ஏர்டெல் நிறுவனம், ஒரு இரகசிய மூலோபாய திட்டத்தை சத்தமின்றி அறிவித்துள்ளது.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு, கூடுதல் போட்டியை உண்டாக்கும் முனைப்பின்கீழ் பார்தி ஏர்டெல் நிறுவனம், ஒரு இரகசிய மூலோபாய திட்டத்தை சத்தமின்றி அறிவித்துள்ளது.

இப்படியொரு ஏர்டெல் திட்டமா.? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே.!

அதாவது, ரூ49/- மற்றும் ரூ.193/- போன்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள ஆட்-ஆன் திட்டத்தை, பஞ்சாப்பில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தில்லி மற்றும் நிறுவனத்தின் இதர பிரபலமான வட்டாரங்களிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன.? இது எப்படி ஜியோவுடன் போட்டியிடுகிறது என்பதை விரிவாக காண்போம்.

டேட்டா ஆட்-ஆன் பேக்ஸ்.!

டேட்டா ஆட்-ஆன் பேக்ஸ்.!

அறிமுகமாகியுள்ள ரூ.193/- பேக் உடன் சேர்த்து ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு நுழைவு நிலை அளவிலான டேட்டா ஆட்-ஆன் பேக் ஆன ரூ.49/- திட்டமும் அறிமுகம் ஆகியுள்ளது. விலைகளில் மற்றும் டேட்டா நன்மைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் ஜியோவின் ஆட்-ஆன் திட்டங்களும், ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்-அந்த திட்டங்களும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை தான் கொண்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

செல்லுபடியாகும் காலம்.?

செல்லுபடியாகும் காலம்.?

ரிலையன்ஸ் ஜியோ, ரூ.11/- முதல் ரூ.101/- வரையிலான ஆட்-ஆன் திட்டங்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, ரூ.101/- ஜியோ ஆட்-ஆன் பேக் ஆனது 6 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். கிடைக்கும் கூடுதல் டேட்டாவின் செல்லுபடியானது, ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ள பிரதான காம்போ திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை நீடிக்கும்.

ரூ.193/-ன் நன்மைகள்.!

ரூ.193/-ன் நன்மைகள்.!

உதாரணமாக, நீங்கள் ரூ.198/- ஜியோ ரீசார்ஜை நிகழ்த்தி இருந்தால், கூடுதலாக ரூ.101/- ஆட்-ஆன் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ரூ.198/-ன் செல்லுபடியாகும் காலம் வரை கூடுதல் டேட்டாவும் நீடிக்கும். ஜியோவின் அதே ஆட்-ஆன் பாணியை பின்பற்றும் ஏர்டெல், நம்பமுடியாத டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது அதன் ரூ.193/- ஆட்-ஆன் பேக் ஆனது வரம்பற்ற காம்போ திட்டத்தின் மேல் ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலா டேட்டா என்கிற நன்மையை வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 2.4 ஜிபி டேட்டா.!

ஒரு நாளைக்கு 2.4 ஜிபி டேட்டா.!

உதாரணமாக, ஏர்டெல் நிறுவனத்தின் ர்.509 ப்ரீபெயிட் வரம்பற்ற காம்போ திட்டத்தின் கீழ், நீங்கள் 90 நாட்களுக்கும், ஒரு நாளைக்கு 1.4 ஜிபி என்கிற டேட்டாவை பெறுவீர்கள். கூடுதலாக ரூ.193-ஐ ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் எந்த விதமான கூடுதல் கட்டணம் வசூலிக்கபடாமல், 90 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 2.4 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்.

அனைத்திற்கும் பொருந்தும்.!

அனைத்திற்கும் பொருந்தும்.!

இந்த அட்டகாசமான வாய்ப்பானது ஏர்டெல் நிறுவனத்தின் வரம்பிற்குட்பட்ட ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களுக்கான ரூ.199, ரூ.349, ரூ.399, ரூ.448, முதலியன அனைத்திற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தேதி வரை, பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து சிறந்த சலுகையாக இது திகழ்கிறது. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இப்படியொரு பிளான் இருக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
ரூ.49/-ன் நன்மைகள்.!

ரூ.49/-ன் நன்மைகள்.!

நாள் ஒன்றிற்கு கூடுதலாக 1ஜிபி வழங்கும் ரூ.193/- உடன் வெளியான ரூ.49/- ஆனது, காம்போ திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் சேர்த்து 1 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். உதாரணமாக ரூ.509/- திட்டத்திற்கு மேல் இந்த ரூ.49/- ஐ ரீசார்ஜ் செய்தால், தினசரி கிடைக்கும் 1.4ஜிபி உடன் சேர்த்து செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் கூடுதலாக ஒரு ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த இரண்டு திட்டங்களின் விளைவாக, ஜியோவும் இதேபோன்ற ஆட்-ஆன் திட்டங்களை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bharti Airtel Silently Rolls Out Data Add-On Packs to Counter Jio. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X