ஏர்டெல் மீண்டும் அதிரடி: டேட்டாவை டபுள் ஆக்கும் ரூ.193/- அறிமுகம்.!

|

நேற்று தான் பார்தி ஏர்டெல் அதன் ஆண்டு திட்டமான ரூ.995/-என்கிற ஆண்டு திட்டத்தை அறிமுகம் செய்தது என்பதும், அந்த திட்டம் - டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய - மூன்று நன்மைகளையும் வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டத்திற்கு எதிரான எந்த அறிவிப்பையும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அறிவிக்காத நிலைப்பாட்டில் ஏர்டெல் மீண்டும் இரண்டு திட்டங்களை சத்தமின்றி அறிவித்துள்ளது.

ரூ.193/- மற்றும் ரூ.49

ரூ.193/- மற்றும் ரூ.49

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் மலிவான கட்டணத் திட்டங்களை எதிர்கொள்ளும் முனைப்பின்கீழ், பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் ரூ.193/- மற்றும் ரூ.49/- என்கிற திட்டத்தை அறிவித்துள்ளது.

பிரபலமான ஏர்டெல் வட்டாரங்களில்

பிரபலமான ஏர்டெல் வட்டாரங்களில்

இந்த இரண்டு ஆட்-ஆன் திட்டங்களும், ஆரம்பத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. ஆனால் தற்போது, கடந்த சில தினங்களாகவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தில்லி மற்றும் பல பிரபலமான ஏர்டெல் வட்டாரங்களில் இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது.

6ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா

6ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா

முதலில், ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா ஆட்-ஆன் திட்டங்களானது ரிலையன்ஸ் ஜியோவின் ஆட்-ஆன் திட்டங்களில் இருந்து வேறுபடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரிலையன்ஸ் ஜியோவானது ரூ.11/- முதல் ரூ.101/- வரையிலான கூடுதல் டேட்டா தொகுப்புகளை கொண்டுள்ளதுடன், ஒரு நிலையான அளவு தரவை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஜியோவின் ரூ.101/- ஆட்-ஆன் ஆனது 6ஜிபி அளவிலான கூடுதல் தரவை கொடுக்கிறது.

ஆட்-ஆன் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்

ஆட்-ஆன் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால்

ஆனால் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றின் ஆட்-ஆன் பொதிகளின் செயல்பாடு ஒன்றுதான். அதாவது இவைகள் நிறுவனத்தின் வரம்பற்ற காம்போ திட்டங்களுடன் செல்லுபடியாகும். உதாரணமாக, நீங்கள் ஜியோ ரூ.198/- திட்டத்தில் இருந்துகொண்டு ரூ.101/- ஆட்-ஆன் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு கூடுதலாக 6 ஜிபி கிடைக்கும் மற்றும் அது ரூ.198 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை நீடிக்கும்.

ஒரு நாளைக்கு 2.4 ஜிபி

ஒரு நாளைக்கு 2.4 ஜிபி

மறுகையில் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ள ரூ.193/- திட்டமானது பிரதான ரீசார்ஜ் திட்டத்தின் டேட்டா நன்மையுடன் கூடுதலாக நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. எடுத்துக்காட்டிற்கு, 90 நாட்களுக்கும் நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி தரவு நன்மையை வழங்கும் ரூ.509- என்கிற ஏர்டெல் ப்ரீபெய்ட் காம்போ திட்டத்தில் நீங்கள் உள்ளீர்கள் என்றால் உங்களுக்கு 90 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 2.4 ஜிபி தரவு கிடைக்கும்.

ப்ரீபெய்ட் காம்போ

ப்ரீபெய்ட் காம்போ

இதே போன்று ஏர்டெல் நிறுவனத்தின் வரம்பிற்குட்பட்ட ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களான ரூ.199, ரூ.349, ரூ.399/- மற்றும் ரூ.448/- ஆகிய அனைத்திற்கும் இது ஆட்-ஆன் திட்டங்கள் பொருந்தும். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்ரா ரூ.193/- ஆட்-ஆன் பார்க்கப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)
ஏர்டெல் ரூ.49/- டேட்டா ஆட் ஆன்-பேக் விவரங்கள்

ஏர்டெல் ரூ.49/- டேட்டா ஆட் ஆன்-பேக் விவரங்கள்

இந்த கூடுதல் தரவு வழங்கும் திட்டமானது, ரூ.193/- ஐ போல் நாள் ஒன்றிற்கு கூடுதலாக 1ஜிபி டேட்டாவை
வழங்காமல், பிரதான ரீசார்ஜ் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 1ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel’s Rs 193 and Rs 49 Prepaid Data Add-On Packs Explained. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X