Home
News

ரூ.129, ரூ.219, ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.349/- என வரிசைக்கட்டும் ஏர்டெல் திட்டங்கள்; எது பெஸ்ட்.?

சமீபத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் ரூ.219/- என்கிற புதிய ப்ரீபெய்ட் கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்தது.

By Muthuraj

ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த 'ஹலோ ட்யூன்ஸ்' மீதான ஆர்வத்தை மீண்டும் கிளப்பும் வண்ணம், ஏர்டெல் அதன் ரூ.219/- திட்டத்தை அறிமுகம் செய்த கையோடு தற்போது ரூ.129/- என்கிற ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ரூ.129/- ஆனது இலவச வரம்பற்ற குரல் அழைப்புகள், 1 ஜிபி அளவிலா டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் இன்னும் முக்கியமாக ஹலோ ட்யூன்ஸ் பேக் உடன் இணைந்து வருகிறது.

நன்மைகளை பற்றி இன்னும் விரிவாக பேச வேண்டுமெனில், முற்றிலும் புதிய ரூ.129 ப்ரீபெய்ட் ஆனது எந்த வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகள் அனைத்து நெட்வார்க் உடனான இலவச வாய்ஸ், 100 எஸ்எம்எஸ், செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் ஏர்டெல் ஹலோ ட்யூன்ஸ் சந்தா ஆகிய நன்மைகளை வழங்கும். மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.129/-ன் இதே நன்மைகளை வழங்கும் ரூ.99/- திட்டமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திறந்தவெளி சந்தை திட்டம்.!

திறந்தவெளி சந்தை திட்டம்.!

ஏர்டெல் ரூ.99/-ஐ பொறுத்தவரை, எந்த வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகள் அனைத்து நெட்வர்க் உடனான இலவச வாய்ஸ், 100 எஸ்எம்எஸ்கள் சந்தா ஆகிய நன்மைகளை வழங்கும், அதாவது ரூ.129-ல் கிடைக்கும் ஹலோ ட்யூன்ஸ் சந்தாவை தவிர்த்து இதர அனைத்து நன்மைகளையும் வழங்கும். சமீபத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் ரூ.219/- என்கிற புதிய ப்ரீபெய்ட் கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டமானது ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் திறந்தவெளி சந்தை திட்டமான ரூ.199/- ப்ரீபெய்ட்டின் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டா

1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டா

அதாவது, ஏர்டெல் ரூ.199/-ன் அதே டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளுடன் சேர்த்து, கூடுதலாக இந்த ரூ.219/-ன் கீழ் வரம்பற்ற ஹலோ ட்யூன்ஸ் சலுகையும் கிடைக்கும். இதனை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு ஹலோ டியூன் அமைக்க முடியும். ஒட்டுமொத்த நன்மைகளை பொறுத்தவரை, ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அனைத்து புதிய ரூ.219/- ப்ரீபெய்ட் திட்டமானது, ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற வாய்ஸ் நன்மைகளை மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்குகிறது.

மொத்தம் 39.2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.!

மொத்தம் 39.2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.!

காம்போ நன்மைகளை தவிர்த்து (டேட்டா மற்றும் வாய்ஸ்) இந்த ரூ.219/- ஆனது தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மேற்குறிப்பிட்டப்படி ஏர்டெல் ஹலோ ட்யூன் சந்தாவையும் வழங்கும். செல்லுபடியாகும் மொத்தம் காலமான 28 நாட்களில் இந்த திட்டத்தின் வழியாக 39.2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது.!

இரண்டு ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது.!

ஏர்டெல் நிறுவனம் அதன் ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களை தனித்தனியாகவும் வழங்கி வருகிறது. ஏர்டெல் தற்போது ரூ.36/- மற்றும் ரூ.146/- ஆகிய இரண்டு ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது. ரூ.36/- திட்டமானது, 28 நாட்கள் ஹலோ டியூன் சந்தாவை வழங்குகிறது. இதை ரீசார்ஜ் செய்ய ஏர்டெல் பயனர்கள் எந்தவொரு ஏர்டெல் ரீசார்ஜ் போர்ட்டிற்கும் செல்லலாம்.

ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம்.!

ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம்.!

தற்போது ரூ.219/- வழியாக ஏர்டெல் அதன் ஹலோ ட்யூன் சந்தா திட்டத்தை வரம்பற்ற காம்போ திட்டத்தினுள் இணைத்துள்ளது. ஹலோ ட்யூன் சந்தா தேவை இல்லை என்று கூறும் ஏர்டெல் பயனாளர்கள், ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம். இது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பிற்குட்பட்ட குரல் அழைப்புகளையும், நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.!

3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.!

முன்னதாக ஏர்டெல் அதன் ரூ.49/- திட்டத்தை அறிமுகம் செய்து இருந்தது. மொத்தம் 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் இந்த திட்டமானது ஒரு நாள் மட்டுமே என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்மையானது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்பதும், மற்ற பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

'மைஏர்டெல்' ஆப் அல்லது ஏர்டெல் வெப்சைட்.!

'மைஏர்டெல்' ஆப் அல்லது ஏர்டெல் வெப்சைட்.!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஏர்டெல் சந்தாதாரர்கள் 'மைஏர்டெல்' பயன்பாடு அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்நுழைந்து, திட்டத்தின் செல்லுபடியை சரிபார்க்க மொபைல் எண்ணை உள்ளிடவும். உங்கள் எண் தகுதியானதாக இருக்கும் பட்சத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.

ஜியோவின் ரூ.49/-ன் நன்மைகள்.!

ஜியோவின் ரூ.49/-ன் நன்மைகள்.!

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.49/- ஆனது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.49/- திட்டத்திற்கு கடுமையான போராட்டத்தை வழங்குவதாக உள்ளது. ரிலைன்ஸ் ஜியோவின் ரூ.49/- என்கிற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, வெறும் 1ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஆனால் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. மற்றும் இந்த திட்டமானது ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

56 ஜிபி அளவிலான டேட்டா.!

56 ஜிபி அளவிலான டேட்டா.!

டேட்டா நன்மைகளை மட்டுமின்றி, ரிலைன்ஸ் ஜியோவின் ரூ.49/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல்அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது. ரூ.49/-ல் மட்டுமின்றி ஜியோவை எதிர்க்கும் முனைப்பின் கீழ், பார்தி ஏர்டெல் ரூ.249, ரூ.349 போன்ற பல திட்டங்களை சந்தைப்படுத்தி உள்ளது. ஏர்டெல் ரூ.249/-ஐ பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா என, 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா.!

நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா.!

ஏர்டெல் ரூ.249/- ப்ரீபெய்ட் பேக் உடன், வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் பெறலாம். மறுகையில் உள்ள ஏர்டெல் ரூ.349/- ப்ரீபெய்ட் ஆனது, நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி / ரோமிங் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
84 ஜிபி மற்றும் 105 ஜிபி.!

84 ஜிபி மற்றும் 105 ஜிபி.!

போட்டியாளரான ஜியோ உடனான ஒப்பீட்டில், ஜியோ ரூ.299/- ப்ரீபெய்ட் பேக் ஆனது மொத்தம் 84 ஜிபி அளவிலான டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்க, மறுகையில் உள்ள ஜியோ ரூ.349/- திட்டமானது, மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் 105 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel's Rs.129, Rs.219, Rs.49, Rs.249, Rs.299, Rs.349 Expalined, Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X