One Airtel தான் பெஸ்ட் திட்டம் - 200 Mbps டேட்டா, மொபைல், பிராட்பேண்ட் & பைபர் எல்லாம் ஒரே பில்!

|

மொபைல், பிராட்பேண்ட் மற்றும் டைரக்ட்-டு-ஹோம் (டி.டி.எச்) இணைப்புகள் உள்ளிட்ட பல சேவைகளை ஒரே திட்டத்தின் கீழ் இணைக்கும் புதிய 'ஒன் ஏர்டெல்' திட்டங்களை பாரதி ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. நான்கு ஒன் ஏர்டெல் திட்டங்களை நிறுவனம் வழங்கிவருகிறது, இதில் ஒன் ஏர்டெல் 1349 திட்டத்தைப் புதுப்பித்துள்ளது, அதே நேரத்தில் ஒன் ஏர்டெல் 1399 திட்டம் மற்றும் உயர்மட்ட ஒன் ஏர்டெல் 1899 திட்டங்களின் விலைகள் ரூ .100 உயர்த்தப்பட்டுள்ளது.

100 Mbps முதல் 200 Mbps வரை வேகம்

100 Mbps முதல் 200 Mbps வரை வேகம்

இத்துடன் ஏர்டெல் நிறுவனம், கூடுதலாக ஒன் ஏர்டெல் திட்டங்களில் பிராட்பேண்ட் வேகத்தை 100 Mbps முதல் 200 Mbps வரை மேம்படுத்தியுள்ளது. ஒன் ஏர்டெல் திட்டங்களின் கீழ் நான்கு சேவைகளை ஏர்டெல் வழங்குகிறது. அதன்படி, ஒன் ஏர்டெல் 899 திட்டம், ஒன் ஏர்டெல் 1349 திட்டம், ஒன் ஏர்டெல் 1499 திட்டம் மற்றும் ஒன் ஏர்டெல் 1999 என்ற நான்கு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளை இப்பொழுது பார்க்கலாம்.

ஒன் ஏர்டெல் 899 திட்டம்

ஒன் ஏர்டெல் 899 திட்டம்

பாரதி ஏர்டெல் பயனர்கள் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் மற்றும் டி.டி.எச் சேவைகளை ஒரே திட்டத்தின் கீழ் 75 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்பு நன்மை வழங்கப்படுகிறது. போஸ்ட்பெய்ட் மொபைல் சேவையுடன், பேஸ் பேக்கின் கீழ் நிறுவனம் ஒரு வழக்கமான சிம் மற்றும் ஒரு கூடுதல் சேர்க்கையை ஆட்-ஆன் செய்கிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனர்கள் ரூ. 350 மதிப்புள்ள டிவி சேனல் நன்மை கிடைக்கிறது. இத்துடன் ஒரு வருட அமேசான் பிரைம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தாவும் கிடைக்கிறது.

வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!

ஒன் ஏர்டெல் 1349 திட்டம்

ஒன் ஏர்டெல் 1349 திட்டம்

ஏர்டெல் பயனர்களுக்கு ஒரு வழக்கமான சிம் மற்றும் மூன்று கூடுதல் சிம் உள்ளிட்ட நான்கு போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகளை ஆட்-ஆன் செய்துகொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுடன் 150 ஜிபி வரை டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. டி.டி.எச் சேவை மற்றும் அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தா உள்ளிட்ட பிற சலுகைகள் ஒன் ஏர்டெல் 899 திட்டத்திற்கு ஒற்றனாவை.

ஒன் ஏர்டெல் 1499 திட்டம்

ஒன் ஏர்டெல் 1499 திட்டம்

ஃபைபர்-டு-ஹோம் பிராட்பேண்ட் சேவைகள் மற்றும் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகளை ஒரே திட்டத்தின் கீழ் ஏர்டெல் ஒருங்கிணைத்துள்ளது. பயனர்கள் ஒரு வழக்கமான சிம் மற்றும் ஒன் ஏர்டெல் 899 திட்டத்திற்கு ஒத்த ஒரு கூடுதல் உள்ளிட்ட இரண்டு போஸ்ட்பெய்ட் இணைப்புகளை ஆட்-ஆன் செய்துகொள்ள முடியும். டி.டி.எச் சேவை, 300 ஜிபி வரை 200 எம்.பி.பி.எஸ் வேகத்தில் டேட்டா, FTTH சேவையுடன் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள லேண்ட்லைன் சேவையும் இதில் கிடைக்கிறது. அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தாவும் உள்ளது.

ஒன் ஏர்டெல் 1999 திட்டம்

ஒன் ஏர்டெல் 1999 திட்டம்

மொபைல், டி.டி.எச், ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்பு உள்ளிட்ட நான்கு சேவைகளை ஒரே திட்டத்தின் கீழ் இத்திட்டம் வழங்குகிறது. ஏர்டெல் பயனர்களுக்கு மொபைல் சேவைகளுக்கு மூன்று இணைப்புகளை ஒரு வழக்கமான சிம் மற்றும் இரண்டு கூடுதல் சிம் இணைப்புகளை ஆட்-ஆன் செய்ய அனுமதிக்கிறது. இதில் 75 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்பு நன்மை, ரூ. 444 மதிப்புள்ள டி.டி.எச் டிவி சேனல்கள், FTTH சேவைகள் மற்றும் அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தாவும் வழங்கப்படுகிறது.

நேருக்கு நேர்: ஜியோ vs ஏர்டெல்., ஒரே விலை திட்டம் எது சிறந்தது?நேருக்கு நேர்: ஜியோ vs ஏர்டெல்., ஒரே விலை திட்டம் எது சிறந்தது?

20% வரை சேமிப்பு

20% வரை சேமிப்பு

ஏர்டெல் பயனர்கள் ஒன் ஏர்டெல் சேவைகளுடன் 20% வரை சேமிக்க முடியும், ஒன் ஏர்டெல் 899 திட்டத்தின் மூலம், பயனர்கள் போஸ்ட்பெய்ட் இணைப்புகளில் ரூ .149 சேமிக்க முடியும் என்றும், மொபைல் மற்றும் டி.டி.எச் சேவைகளின் வாடகை தொகை ரூ .698 என்பதையும் ஏர்டெல் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

ஒன் ஏர்டெல் 1499 திட்டத்தின் கீழ் எவ்வளவு சேமிப்பு?

ஒன் ஏர்டெல் 1499 திட்டத்தின் கீழ் எவ்வளவு சேமிப்பு?

இதேபோல், ஒன் ஏர்டெல் 1499 திட்டத்தின் கீழ் பயனர்கள் ரூ .999 வாடகை தொகையைக் கொண்ட பிராட்பேண்ட் திட்டத்தில் ரூ .117 தள்ளுபடி பெறுவார்கள். இத்துடன், ஒன் ஏர்டெல் 1499 திட்டத்தில் போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகளுக்கு ரூ .897 வாடகை தொகை வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்களுக்கு மாதத்திற்கு ரூ .81 தனியாகச் சேமிக்க முடியும்.

ஒன் ஏர்டெல் 1999 திட்டத்தின் மூலம் எவ்வளவு சேமிக்கலாம்?

ஒன் ஏர்டெல் 1999 திட்டத்தின் மூலம் எவ்வளவு சேமிக்கலாம்?

ஒன் ஏர்டெல் 1999 திட்டத்தின் மூலம், சாதாரண வாடகை தொகையான ரூ .999 விலை கொண்ட பிராட்பேண்ட் திட்டத்தில் பயனர்கள் ரூ .169 சேமிக்க முடியும். ஒன் ஏர்டெல் 1999 திட்டத்தின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ .152 என்ற விலையை நிறுவனம் தள்ளுபடி செய்துள்ளது. டி.டி.எச் மற்றும் மொபைல் சேவைகள் இரண்டிற்கும் சேர்த்து ரூ .897 வாடகை தொகையாகும்.

ரூ .3999 மதிப்புள்ள இலவச எக்ஸ்ட்ரீம் பாக்ஸ்

ரூ .3999 மதிப்புள்ள இலவச எக்ஸ்ட்ரீம் பாக்ஸ்

ஒன் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ .3999 மதிப்புள்ள இலவச எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் சாதனத்தை நிறுவனம் வழங்கி வருகிறது, அதே நேரத்தில் செட்-டாப் பாக்ஸ் (எஸ்.டி.பி) செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு இலவச சர்வீஸ் சேவை வழங்கப்படும். ஏர்டெல் நிறுவனம் ஒன் ஏர்டெல் பயனர்களுக்கு இலவச நிறுவலுடன் ஒரு டூயல் பேண்ட் வைஃபை ரூட்டரையும் வழங்குகிறது.

இது மட்டும் முடியாது

இது மட்டும் முடியாது

முக்கியமாக, ஒன் ஏர்டெல் திட்டத்தில் தனிப்பட்ட இணைப்புகளின் வாடகை தொகையைப் பயனர்கள் திட்டத்தில் சேர்க்கும்போது மாற்ற முடியாது என்று ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது. ஒன் ஏர்டெல் திட்டத்தின் கீழ் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேவைகளை இணைப்பதன் மூலம் பயனர்களுக்கு நிச்சயம் 20% சேமிப்பு கிடைக்கும் என்று நிறுவனம் அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel's New One Airtel Plan Includes Mobile, Broadband And DTH Under One Bill : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X