Home
News

சத்தமில்லாமல் சைலெண்டாக அறிமுகமான ரூ,49 திட்டம்! இது என்ன நன்மையை வழங்குகிறது?

ஏர்டெல் நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல விதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 49 விலையில் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

எந்த அறிவிப்பும் இல்லாமல், ஏர்டெல் நிறுவனம் சைலெண்டாக புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம், ரூ.49 விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டமாக சேர்த்துள்ளது. ஏர்டெல் வழங்கும் இந்த திட்டம் உண்மையில் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் அல்ல என்பதை கவனித்துக்கொள்ளுங்கள். ஆனால், இது ஒரு டேட்டா பூஸ்டர் திட்டமாகும்.

சத்தமில்லாமல் சைலெண்டாக அறிமுகமான ரூ,49 திட்டம்!

டேட்டா பூஸ்டர்கள் அல்லது டேட்டா வவுச்சர்கள் என்பது ஏற்கனவே செயலில் உள்ள அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான திட்டங்களாகும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த புதிய தற்போதைய திட்டமானது, ஏற்கனவே வழங்குவதை விட கூடுதல் டேட்டாவை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உகந்தது. ஏர்டெல் வழங்கும் ரூ.49 திட்டமானது, தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்ய ஒரு நாளுக்கு கூடுதல் டேட்டாவை விரும்பும் சில பயனர்களுக்கு சேவை வழங்கும் திட்டமாகும்.

இந்த திட்டம் என்ன-என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்ப்போம். பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்காக ரூ.49 ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுவனம் இப்போது கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில், பயனர்களுக்கு ஒரு நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட டேட்டா 6 ஜிபி ஆகும். இது ஒரே நாளில் பயன்படுத்தக்கூடிய கூடுதல் டேட்டாவாகும்.

இருப்பினும், Wi-Fi நெட்வொர்க்குகள் இல்லாத பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. பாரதி ஏர்டெல் இப்போது இந்தியாவின் 3000-க்கும் மேற்பட்ட நகரங்களில் 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்குகிறது. இந்த டேட்டா வவுச்சரை 4ஜி டேட்டா டாப்-அப் வவுச்சராகப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் ஏர்டெல் ஒரு பயனருக்கு அதன் சராசரி வருவாயை (ARPU) எந்த சந்தேகமும் இல்லாமல் அதிகரிக்க உதவும்.

சத்தமில்லாமல் சைலெண்டாக அறிமுகமான ரூ,49 திட்டம்!

ஆனால் இது அனைத்தும் நுகர்வோரின் அடிப்படை திட்டத்தைப் பொறுத்தது. ஏர்டெல் ARPU மற்றும் வருவாய் வரம்புகளை மேம்படுத்த விரும்புகிறது. எனவே சரியான கட்டண உயர்வுகள் அறிமுகப்படுத்தப்படும் வரை, தற்போதைய திட்டங்களில் எப்படியாவது அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. சரி, எது எப்படியாக இருந்தாலும், ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்த ரூ.49 திட்டமானது பயனர்களுக்கு தேவைப்படும் டேட்டா நன்மையை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Rs 49 Prepaid Plan Data Voucher Benefits and Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X