ஏர்டெல் சைலண்ட் சம்பவம்.. மலிவு விலையில் 20ஜிபி டேட்டா.. நொந்துபோன ஜியோ..
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அற்புதமான சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் கம்மி விலையில் அதிக டேட்டா தரும் டேட்டா பேக் ஒன்றை வைத்துள்ளது. இப்போது இது குறித்து தகவல்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ நிறுவனம் ரூ.61 விலையில் (jio rs 61 plan) ஒரு டேட்டா பேக் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டத்தில் ரீசாரஜ் செய்தால் 6ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்திற்கு வேலிடிட்டி கிடையாது. அதேசமயம் ரூ.61 திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்வதற்கு உங்களிடம் ஒரு ஆக்டிவ் ப்ரீபெய்ட் பிளான் (Active Prepaid Plan) இருக்க வேண்டும்.
குறிப்பாக ரூ.61 திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற எந்த நன்மைகளும் வழங்கப்படாது. அதாவது இது வெறும் டேட்டா பேக் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜியோவின் ரூ.61 டேட்டா பேக் திட்டத்திற்குப் போட்டியாக ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக் திட்டத்தை வைத்துள்ளது. இப்போது இந்த ஏர்டெல் டேட்டா பேக்-இன் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல்லின் ரூ.49 டேட்டா பேக் (Airtel Rs 49 Plan) ஆனது முன்பு 6ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கி வந்தது. அதேபோல் இதன் வேலிடிட்டி 1 நாள் ஆகும். ஆனால் நேற்று இந்த ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக் திட்டத்தின் நன்மைகள் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி இப்போது ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 20ஜிபி டேட்டா கிடைக்கும்.
இப்போதும் கூட ஏர்டெல் ரூ.49 திட்டம் ஒரு நாள் வேலிடிட்டி தான் வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 20ஜிபி டேட்டா முடிந்த பிறகு இணைய வேகம் 64 kbps ஆக குறையும். குறிப்பாக இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதுவும் வெறும் டேட்டா பேக் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஜியோ நிறுவனத்தை விட மலிவு விலையில் அதிக டேட்டாவை வழங்குகிறது ஏர்டெல். ஜியோவின் ரூ.61 திட்டத்தை தேர்வு செய்வதை விட ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.49 திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. மேலும் ஏர்டெல் நிறுவனம் கம்மி விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 499 plan) தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம். பின்பு ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டம் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்கும்.
அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் வழங்கும் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 869 plan) திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மையை வழங்கும்.
அதேபோல் ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் RewardsMini சந்தா வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications