Home
News

பாரதி ஏர்டெல்லின் ரூ.319 திட்டம் ஏன் ஜியோவின் திட்டத்தை விட சிறந்தது? இனி 30 நாளுக்கு கவலையில்லை..

பாரதி ஏர்டெல் சமீபத்தில் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டங்களில் ஒன்று ரூ. 319 திட்டமாகும். இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இது பயனர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மை உடன் வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவும் சமீபத்தில் புதிதாக ஒரு 30 நாள் செல்லுபடியாகும் திட்டத்தை அறிமுகம் செய்தது என்பது கவனிக்கத்தக்கது. ஏர்டெல்லின் ரூ. 319 திட்டத்தைப் போலவே அதே திட்டத்தை வழங்குகிறது. ஆனால், ஜியோ வழங்கும் 30 நாள் செல்லுபடியாகும் திட்டம் வேற விலை வரம்பில் வேறு விதமான நன்மைகளுடன் வருகிறது.

ஏர்டெல் vs ஜியோ திட்டங்கள்

ஏர்டெல் vs ஜியோ திட்டங்கள்

பாரதி ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்துடன் நாம் ஜியோவின் ரீசார்ஜ் திட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றால், இதே விலை வரம்பில், இதற்கு நிகரான நன்மைகளை வழங்க கூடிய திட்டத்தைத் தான் நாம் பார்க்க வேண்டும். அபப்டி, பார்க்கும் போது ஜியோவின் திட்டமானது இதே விலை வரம்பிற்கு மிக அருகில் வெறும் ரூ.299 விலையில் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. இது ஏர்டெல் வழங்குவது போல் 30 நாட்கள் அல்ல. ஏர்டெல்லின் திட்டம் ஏன் சிறந்தது என்பதைப் பார்ப்போம்.

பாரதி ஏர்டெல் ரூ 319 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ 319 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல்லின் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டமானது 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இதன் பொருள், இந்த திட்டத்தால் வழங்கப்படும் மொத்த டேட்டா ஒரு மாதத்தில் 60 ஜிபி ஆகும். இது ஒரு சராசரி பயனருக்கு ஏற்ற போதுமான டேட்டா பலனை வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் Wynk Music, Shaw Academy, Apollo 24|7 Circle மற்றும் பல போன்ற கூடுதல் Airtel தேங்க்ஸ் நன்மைகளையும் வழங்குகிறது.

இப்போது ஜியோ என்ன வழங்குகிறது என்று பார்க்கலாமா?

இப்போது ஜியோ என்ன வழங்குகிறது என்று பார்க்கலாமா?

ரிலையன்ஸ் ஜியோ ரூ 299 ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ. 300 விலை வரம்பு திட்டங்களின் கீழ் வழங்குகிறது. இந்த
ஜியோவின் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல்லின் ரூ. 319 திட்டத்தை விட ரூ.20 மட்டுமே மலிவானது. ஜியோவின் திட்டத்திலும், பயனர்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால், இது 28 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா 56 ஜிபி ஆகும். இந்த ஜியோவின் திட்டத்துடன் ஒப்பிடுகையில், ஏர்டெல் 4 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

வெறும் ரூ.20 கூடுதலில் எக்ஸ்ட்ரா நன்மையா?

வெறும் ரூ.20 கூடுதலில் எக்ஸ்ட்ரா நன்மையா?

மேலும் 2 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியுடன் கூடுதலாக வெறும் ரூ.20 செலவில் அதன் அப்பயனர்களுக்கு வழங்குகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஜியோவின் திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள கூடுதல் நன்மைகள் ஜியோ சந்தாக்கள் ஆகும். இந்த திட்டத்தின் FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) தரவின் நுகர்வுக்குப் பிறகு, ஏர்டெல் மற்றும் ஜியோவின் திட்டங்களின் வேகம் 64 Kbps ஆகக் குறையும்.

ஏர்டெல்லின் திட்டம் ஏன் சிறந்த விருப்பமாகப் பார்க்கப்படுகிறது?

ஏர்டெல்லின் திட்டம் ஏன் சிறந்த விருப்பமாகப் பார்க்கப்படுகிறது?

ஏர்டெல்லின் திட்டம் இங்கே ஒரு சிறந்த விருப்பமாகத் திகழ்கிறது. ஏனெனில் இது பயனர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க ஒப்பந்தத்தை வழங்குகிறது. மேலும், இது 30 நாட்கள் திட்டமாக இருப்பதால், பயனர்கள் வசதியாக ரீசார்ஜ் செய்யலாம். மேலும் தங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்வதற்கு இன்னும் ஒரு மாதம் கவலைப்பட வேண்டாம். ஜியோ சமீபத்தில் வழங்கிய 30 நாள் திட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதும் உங்களுக்குப் பயனளிக்கும். ஜியோ அதன் 30 நாள் செல்லுபடியாகும் திட்டத்தை வெறும் ரூ.259 விலையில் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ. 259 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ. 259 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ. 259 ப்ரீபெய்ட் திட்டத்தை 30 நாட்கள் சேவை செல்லுபடியுடன் வழங்குகிறது. இதுவே இந்தத் திட்டத்தின் தனித்துவமான அம்சமாகும். இது சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது நான்கு ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நாள் ஆகியவற்றை வழங்குகிறது. நியாயமான பயன்பாட்டு-கொள்கை (FUP) தரவு நுகர்வுக்குப் பின், இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 265 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 265 ப்ரீபெய்ட் திட்டம்

இதற்கு ஒத்த திட்டமாக ஏர்டெல் நிறுவனம் இப்போது ரூ. 265 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஏர்டெல் என்ன நன்மையை வழங்குகிறது என்பதைப் பார்ப்போம். பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 265 ப்ரீபெய்ட் திட்டமானது ஜியோவின் ரூ. 259 திட்டத்தை விட சற்று அதிகம்.

28 நாட்கள் சேவை

28 நாட்கள் சேவை

ஏர்டெல் வழங்கும் இந்த திட்டத்தில், பயனர்கள் 28 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் தினசரி 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. FUP தரவைப் பயன்படுத்தியவுடன், இந்தத் திட்டத்தில் இணையத்தின் வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Rs 319 Plan Is a Better Option Than New Jio Rs 299 and Rs 259 Prepaid Recharge Plan : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X