இனி ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளான்களில் 21, 24 நாட்கள் வேலிடிட்டி! டேட்டாவும் தடாலடியாக மாற்றம்!
இந்தியாவில் ஜியோ (Jio) நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் ஏர்டெல் (Airtel) நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டியில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. 21 நாட்கள், 24 நாட்கள் மற்றும் 28 நாட்கள் என்று திட்டங்கள் இருக்கின்றன. இதுகுறித்த விவரம் இதோ.
டெலிகாம் (Telecom) நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அடிக்கடி திட்டங்களை மாற்றி வருகின்றன. ஆரம்பத்தில் 30 நாட்கள் வழங்கப்பட்ட வேலிடிட்டி 28 நாட்களாக குறைக்கப்பட்டது. இப்போது, வெறும் 21 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களும் வந்துவிட்டன. இதற்கு ஏர்டெல் நிறுவனமும் விதிவிலக்கல்ல.

ஜியோவுக்கு நிகராக போட்டிப் போட்டுக்கொண்டு திட்டங்களை அறிவிக்கும் ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது, குறைந்த வேலிடிட்டி மற்றும் டேட்டா திட்டங்களை கையில் எடுக்கிறது. அந்த வரிசையில், ஏர்டெல் ரூ.209 திட்டம் (Airtel Rs 209 Plan), ஏர்டெல் ரூ.155 திட்டம் (Airtel Rs 155 Plan) மற்றும் ஏர்டெல் ரூ.179 திட்டம் (Airtel Rs 179 Plan) ஆகியவற்றில் மலிவான விலைக்கு ஏற்பட வேலிடிட்டி மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் 21 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டம் (Airtel 21 Days Prepaid Plan): இந்த திட்டம் ரூ.209 மதிப்புள்ள திட்டமாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 21 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ், 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதோடு ஹாலோடியூன்ஸ் (Hellotunes) மற்றும் வின்க் மியூசிக் (Wynk Music) பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஏர்டெல் 24 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டம் (Airtel 24 Days Prepaid Plan): இந்த திட்டம் ரூ.155 மதிப்புள்ள திட்டமாகும். இந்த நாட்களில், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எம்எம்எஸ் சலுகை கிடைக்கும். அதோடு ஹாலோடியூன்ஸ் (Hellotunes) மற்றும் வின்க் மியூசிக் (Wynk Music) இலவசமாக கிடைக்கும்.
ஏர்டெல் 28 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டம் (Airtel 28 Days Prepaid Plan): இந்த திட்டம் ரூ.179 மதிப்புள்ள சலுகைகளை வழங்குகிறது. இந்த 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ் செய்துகொள்ள முடியும். அதேபோல, ஹாலோடியூன்ஸ் (Hellotunes) மற்றும் வின்க் மியூசிக் (Wynk Music) பயன்படுத்தலாம்.
இந்த திட்டங்களோடு 5ஜி சலுகையை பெற முடியாது. உங்களுக்கு 5ஜி சேவை வேண்டும் என்றால், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.239 திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








