பார்தி ஏர்டெல்: ரூ.549/- மற்றும் ரூ.799/- ரீசார்ஜ் நன்மைகள்.!
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக பல புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் ரூ.549/- மற்றும் ரூ.799/- ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்த டேட்டா நன்மைகள் மற்றும் கால் அழைப்பு போன்ற சலுகைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனம் இப்போது ரூ.49-கட்டணத் திட்டத்தில் அதிரடி திருத்தம் கொண்டு வந்துள்ளது, அதன்படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.49-க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஒரு நாள் வேலிடிட்டி கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல்-ன் ரூ.549/- மற்றும் ரூ.799/- ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை பார்ப்போம்.

ரூ.549/- ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது, மொத்தமாக 98ஜிபி வரை டேட்டாவை இந்த திட்டத்தின் கீழ் பெறமுடியும். மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது என ஏர்டெல் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.799/- ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.799/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது, மொத்தமாக 112ஜிபி வரை டேட்டாவை இந்த திட்டத்தின் கீழ் பெறமுடியும். மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது என ஏர்டெல் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.249/- திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ.249/-திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் ரூ.249/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. அடுத்து ரூ.199/- திட்டத்தில் பயனர்களுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.349/- திட்டம்:
ஏர்டெல் ரூ.349/- திட்டமானது தற்போது முந்தைய 70ஜிபி அளவிலான டேட்டாவில் இருந்து 84 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமாக மாறியுள்ளது. இந்த திட்டமும் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் ரூ.349/-ன் இதர நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ போன்றே ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது.

ஓப்பன்சிக்னல்:
ஏர்டெல் அறிவித்துள்ள ரூ.65 திட்டத்தில் 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என ஏர்டெல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஸ்பீட் டெஸ்டில் அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ, வெறும் 5.13 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானதோ 9.31 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது. இது ஜியோவை விட சரியாக 4 Mbps அதிகமாகும்


Click it and Unblock the Notifications