போச்சு-போச்சு.. Airtel அமேசான் பிரைம் நன்மை நீக்கப்பட்டது.. இனி இவர்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா?

|

பாரதி ஏர்டெல் அதன் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வழங்கும் Amazon Prime Video மொபைல் எடிஷன் சோதனையின் பலனை நீக்கியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையின் கீழ் டெல்கோ இந்த அட்டகாச பலன்களை வழங்கத் தொடங்கியது. பயனர்கள், ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தபோது அமேசான் பிரைம் வீடியோவிற்கான ஒரு மாத சோதனை மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால், தற்போது இந்த நன்மை சில திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை நீக்கியதா ஏர்டெல்

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை நீக்கியதா ஏர்டெல்

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு பயனர்கள் ஸ்மார்ட்போன் வழியாக மட்டுமே உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. இது லேப்டாப், ஸ்மார்ட் டிவி போன்ற சாதங்களில் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரிய திரைகளை ஆதரிக்கவில்லை என்றாலும் கூட, இது ஒரு நல்ல பலனாக இருந்தது, இதைப் பயன்படுத்த ஏர்டெல் பயனர்களும் அதிகளவில் ஆர்வம் காட்டி வந்தனர். குறிப்பாக இது ஒரு சோதனை திட்டம் என்பதால், பயனர்களுக்கு இது ஒரு முறை மட்டுமே இலவசமாகக் கிடைக்கும்.

எந்த திட்டங்களுடன் இப்போது Amazon Prime Video Mobile Edition கிடைக்கிறது?

எந்த திட்டங்களுடன் இப்போது Amazon Prime Video Mobile Edition கிடைக்கிறது?

ஏர்டெல் தகவலில் குறிப்பிட்டுள்ளபடி, பல ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து பலன் அகற்றப்பட்டது. ஆனால், எல்லா திட்டங்களிலும் இருந்து நீக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சரி, இப்போது ஏர்டெல்லின் எந்த திட்டங்கள் எல்லாம் இந்த அமேசான் பிரைம் வீடியோ நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். இப்போது, ஏர்டெல் நிறுவனம் இந்த இரண்டு ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் மட்டுமே அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை பயனர்களுக்கு வழங்குகின்றன. இந்த திட்டங்களின் விலை ரூ.359 மற்றும் ரூ.108 ஆகும்.

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

ஏர்டெல் வழங்கும் ரூ.359 திட்டம் மற்றும் ரூ.108 திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.359 திட்டம் மற்றும் ரூ.108 திட்டம்

ரூ.359 வவுச்சர் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டமாகும். ரூ.108 வவுச்சர் 4ஜி டேட்டா மட்டும் திட்டமாகும். இது தொடர்பாக ஏர்டெல் எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு திட்டங்களும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை நேரடியாக ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையின் கீழ் பயனர்களுக்கு வழங்குகின்றன. ஏர்டெல் வழங்கும் ரூ. 359 ப்ரீபெய்ட் திட்டம், பயனர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அதேபோல், ரூ.108 திட்டம் 30 நாட்களுக்கு வழங்குகிறது.

ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..

ஏர்டெல் வழங்கும் ரூ.359 திட்டத்தின் நன்மைகள்

ஏர்டெல் வழங்கும் ரூ.359 திட்டத்தின் நன்மைகள்

ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டா ஆகியவற்றைப் பெறுகிறார்கள். இந்த திட்டம் மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இத்துடன் பயனர்களுக்கு இந்த திட்டம், Airtel Xstream Premium, Apollo 24 நன்மை போன்ற Airtel தேங்க்ஸ் நன்மைகளையும் பெறுகிறார்கள் மூன்று மாதங்களுக்கு 7 சர்க்கிள் சந்தா, Wynk Music, FASTagல் ரூ.100 கேஷ்பேக் மற்றும் இலவச Hellotunes உடன் வருகிறது.

நான்கு ஏலியன் நாகரிகங்களால் பூமிக்கு 'தீங்கா'? பூமி தாக்கப்படுமா? ஷாக் கொடுத்த ஆய்வின் ரகசியம்..நான்கு ஏலியன் நாகரிகங்களால் பூமிக்கு 'தீங்கா'? பூமி தாக்கப்படுமா? ஷாக் கொடுத்த ஆய்வின் ரகசியம்..

ஏர்டெல் வழங்கும் ரூ.108 திட்டத்தின் நன்மைகள்

ஏர்டெல் வழங்கும் ரூ.108 திட்டத்தின் நன்மைகள்

ரூ.108 திட்டமானது பயனர்களுக்கு மொத்தம் 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது டேட்டா பூஸ்டராக இருப்பதால், இந்தத் திட்டத்தில் பயனர்கள் SMS அல்லது குரல் அழைப்பு பலன்கள் என்று எதையும் பெறுவதில்லை. அதன் செல்லுபடியாகும் காலம், பயனரின் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தைப் போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் அடிப்படை திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் நிறைவடையும் வரை இதன் நன்மைகள் உங்களுக்கு அப்படியே கிடைக்கும்.

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

Best Mobiles in India

English summary
Bharti Airtel Removes Amazon Prime Video Mobile Edition Trial With Selected Prepaid Plans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X