ஏர்டெல், ஜியோ,Vi: 2021-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான புகார்கள்:எந்த நிறுவனம் முதல் இடம்

|

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. குறிப்பாக 20 சதவிகிதம் வரை இந்நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2021-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான புகார்களைப் பெற்ற டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ட்ராய் அமைப்பு.

 2021-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம்

குறிப்பாக 2021-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான புகார்களை பெற்ற டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் முதல் இடத்தில் இருப்பதாக ட்ராய் அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனே வாங்கலாம்: தள்ளுபடினா அது இதுதான்- வெறும் ரூ.9,990-ல் கிடைக்கும் நோக்கியா ஜி20: கலக்கல் அம்சங்கள் பாஸ்!உடனே வாங்கலாம்: தள்ளுபடினா அது இதுதான்- வெறும் ரூ.9,990-ல் கிடைக்கும் நோக்கியா ஜி20: கலக்கல் அம்சங்கள் பாஸ்!

நாடாளுமன்றத்தில் ட்ராய் வெளியிட்ட

அதாவது நாடாளுமன்றத்தில் ட்ராய் வெளியிட்ட அறிக்கையை தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியது என்னவென்றால், ட்ராய் கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் 2021-ம் ஆண்டு முழுவதுமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகமான புகார்களை பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. அதுவும் ஏர்டெல் நிறுவனத்தின் மீது மட்டும் சுமார் 16,111 புகார்கள் 2021-ம் ஆண்டில் பெறப்பட்டுள்ளதாக கூறினார்.

'ஓ மை காட்' உலகமே பயன்படுத்தும் இந்த 15 விஷயங்களை இந்தியர்களா கண்டுபிடித்தார்கள்? சத்தியமா நம்ப மாட்டீங்க..'ஓ மை காட்' உலகமே பயன்படுத்தும் இந்த 15 விஷயங்களை இந்தியர்களா கண்டுபிடித்தார்கள்? சத்தியமா நம்ப மாட்டீங்க..

பட்டியலில் இரண்டாவது இடத்தை

அடுத்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனமாகும். அதாவது வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு எதிராக சுமார் 14,487 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போவுடன் ஒப்பந்தம் செய்த ஒப்போவுடன் ஒப்பந்தம் செய்த "இஸ்ரோ"- இனி கடலிலேயே இருந்தாலும் பிரச்சனை இல்ல: புதுவித அனுபவத்துக்கு தயாரா?

மூன்றாவது இடத்தை

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். அதாவது இந்த ஆண்டில்ஜியோ நிறுவனத்திற்கு எதிராக 7341 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் எம்டிஎன்எல் (MTNL) மீது732 புகார்களும், பிஎஸ்என்எல் மீது 2913 புகார்களும் வாடிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ட்ராய்அமைப்பு தெரிவித்துள்ளது.

Google இல் இப்படி கூட சர்ச் செய்யலாமா? டாப் 10 டிப்ஸ்.. ஃபாஸ்டான சர்ச்சுக்கு இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..Google இல் இப்படி கூட சர்ச் செய்யலாமா? டாப் 10 டிப்ஸ்.. ஃபாஸ்டான சர்ச்சுக்கு இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

புகார்கள் ட்ராய் சரி செய்வது

குறிப்பாக இவை அனைத்தும் ட்ராய் அமைப்பிடம் நேரடியாக வந்த புகார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக
விதிப்படி தனி நபர்களின் புகார்கள் ட்ராய் சரி செய்வது இல்லை என்றாலும் 2021-ம் ஆண்டில் வந்த தனி நபர்களிடமிருந்து வந்த புகார்கள் அனைத்தும் உரிய டெலிகாம் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

12ஜிபி ரேம், 50எம்பி கேமரா என உயர்ரக அம்சம்: வருகிறது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4-எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்12ஜிபி ரேம், 50எம்பி கேமரா என உயர்ரக அம்சம்: வருகிறது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4-எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்

 நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர்

மேலும் நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலின்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் டெலிகாம் நிறுவனம் குறித்து புகார்களை நிச்சயமாக ட்ராய் அமைப்பிடம் பதிவு செய்யலாம். அதன்பின்பு புகார்களுக்கு உரிய டெலிகாம் நிறுவனங்கள் புகார்கள் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் ட்ராய் இடமே மேல்முறையீடும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ஜிபி ரேம், 50எம்பி கேமரா என உயர்ரக அம்சம்: வருகிறது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4-எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்12ஜிபி ரேம், 50எம்பி கேமரா என உயர்ரக அம்சம்: வருகிறது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்4-எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்

வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர்

அதேபோல் வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 4ஜி சேவையை முழு வீச்சில் அறிகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்தால் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel receives maximum consumer complaints: TRAI : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X