தினமும் 3ஜிபி டேட்டாவுடன் கூடுதல் நன்மை வேண்டுமா? அப்போ இந்த 'Airtel' திட்டம் தான் சரி..

|

இந்தியாவின் முன்னணி சேவை வழங்குனர்களில் ஒன்றான பாரதி ஏர்டெல், தொடர்ந்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நலன்களுக்காகப் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. 4G டேட்டா வேகத்தை வழங்குவதில் சமீபத்திய TRAI அறிக்கைகளின்படி, ரிலையன்ஸ் ஜியோவுடனான இடைவெளிகளை ஏர்டெல் நிறுவனம் மூடியுள்ளது. அக்டோபர் 2021 இல் பாரதி ஏர்டெல் அதன் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்று TRAI கூறியுள்ளது. இப்போது நிறுவனம் குறைந்த விலையில் வழங்கக்கூடிய அன்லிமிடெட் திட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

தினசரி தரவு 3ஜிபி கிடைத்துக் கூடுதல் நன்மையும் கிடைக்க வேண்டுமா?

தினசரி தரவு 3ஜிபி கிடைத்துக் கூடுதல் நன்மையும் கிடைக்க வேண்டுமா?

டெலிகாம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அற்புதமான சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கினாலும், இந்தக் கட்டுரையில், அதன் 3ஜிபி டேட்டா திட்டங்களில் கவனம் செலுத்துவோம். குறிப்பாக நிறுவனம் வழங்கும் அன்லிமிடெட் திட்டங்களைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம். குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய அன்லிமிடெட் திட்டம் முதல் துவங்கி, நிறுவனம் வழங்கும் அதிகப்படியான நன்மைகள் வரை அனைத்தையும் முழுமையாகப் பார்க்கலாம். உங்களுக்குத் தினசரி தரவு 3ஜிபி கிடைத்தால் போதும் என்பவர்கள் இந்த திட்டங்களைக் கருத்தில் கொள்ளலாம்.

பாரதி ஏர்டெல் வழங்கும் 3ஜிபி திட்டங்கள்

பாரதி ஏர்டெல் வழங்கும் 3ஜிபி திட்டங்கள்

3ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் ஏர்டெல்லின் மலிவான அன்லிமிடெட் திட்டம் என்றால் அது ரூ. 398 விலையில் வருகிறது. இது 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது அதன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 SMS நன்மை கிடைக்கும் நன்மையுடன் வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு இத்துடன் வின்க் மியூசிக் உட்பட நான்கு கூடுதல் சந்தாக்களுடன் அப்பல்லோ 24/7 சர்க்கிளுடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலின் ஓவர்-தி-டாப் (OTT) இயங்குதளத்தின் இலவச சோதனைக்கான அணுகலைப் பெறுகின்றனர்.

Jio, Airtel, Vi இன் 5ஜி சேவை இந்தியாவில் எப்போது அறிமுகம்? எதிர்பார்ப்பு இன்னும் தள்ளி போகிறதா?Jio, Airtel, Vi இன் 5ஜி சேவை இந்தியாவில் எப்போது அறிமுகம்? எதிர்பார்ப்பு இன்னும் தள்ளி போகிறதா?

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 499 விலை திட்டம்

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 499 விலை திட்டம்

3ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் ஏர்டெல்லின் இரண்டாவது திட்டம் ரூ. 499 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டமும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்திற்கும் ரூ. 398 திட்டத்திற்கும் உள்ள வித்தியாசம், இது ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபியின் கூடுதல் நன்மையை வழங்குகிறது. பயனர்கள் மொபைல் பதிப்பான Amazon Prime வீடியோ மற்றும் மேலும் ஐந்து பயன்பாடுகளின் இலவச சோதனையைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்திலும் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 558 விலை திட்டம்

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 558 விலை திட்டம்

கடைசியாக, ஏர்டெல் வழங்கும் ரூ. 558 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் பயனர்களுக்குத் தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் நீண்ட நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. பயனர்கள் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு மற்றும் Wynk மியூசிக் இலவச சோதனை போன்ற கூடுதல் சலுகைகளைப் பெறுகிறார்கள், மேலும் சில பயன்பாடுகளுடன், ஏர்டெல் நிறுவனத்தின் கூடுதல் நன்மைகளான ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் கிடைக்கிறது.

LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?

நீண்ட நாள் வேலிடிட்டி திட்டங்கள் எதுவும் ஏர்டெல்லில் உள்ளதா?

நீண்ட நாள் வேலிடிட்டி திட்டங்கள் எதுவும் ஏர்டெல்லில் உள்ளதா?

துரதிர்ஷ்டவசமாக, ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து 3ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரவில்லை. சாத்தியமான வாடிக்கையாளர்கள் சிறந்த செல்லுபடியாகும் அதிக டேட்டா திட்டங்களைத் தேடுவதால் இது ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அத்தகைய பயனர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ அதன் பட்டியலில் ரூ. 999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மூலம் ஒரு திட்டத்தை வழங்குகிறது.

ரீசார்ஜ் செய்து மகிழ்த்திடுங்கள்

ரீசார்ஜ் செய்து மகிழ்த்திடுங்கள்

சேவையின் அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர்கள், எதிர்காலத்தில் சேவை வழங்குநரிடமிருந்து மேம்படுத்தப்பட்ட செல்லுபடியாகும் மற்றும் கூடுதல் சலுகைகள் கொண்ட திட்டத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதே உண்மை. இந்த திட்டங்களில் ஏதேனும் திட்டம் உங்களுக்கு பயனளிக்கும் விதத்தில் இருந்தால், அவற்றை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து மகிழ்த்திடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bharti Airtel Prepaid Plans With 3GB FUP Data And Extra Benefits : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X