ஜிஎஸ்டி ஃபைலிங் செய்ய வேண்டுமா? இதோ உதவுகிறது ஏர்டெல்

ஜிஎஸ்டி வரிமுறையை ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ் மூலம் சிறுதொழில் புரிபவர்கள் இலவசமாக ஜிஎஸ்டி பைலிங் செய்து கொள்ளலாம்.

By Siva
|

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தற்போது ஜிஎஸ்டி ஃபைலிங் செய்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ் என்பதன் மூலம் மிக எளிதான ஜிஎஸ்டி ரிட்டர் செய்ய உதவுகிறது.

ஜிஎஸ்டி ஃபைலிங் செய்ய வேண்டுமா? இதோ உதவுகிறது ஏர்டெல்

ஏர்டெல் பிசினஸ் பிரிவின் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ அசோக் கணபதி இதுகுறித்து கூறியபோது, 'இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றத்தில் கொண்டு செல்லும் ஜிஎஸ்டி வரிமுறையை ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ் மூலம் சிறுதொழில் புரிபவர்கள் இலவசமாக ஜிஎஸ்டி பைலிங் செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பான முறையில் ஜிஎஸ்டி ஃபைலிங் செய்து தர ஏர்டெல் ஜிஎஸ்டிஎன் என்ற அமைப்புடன் பார்ட்னராக இணைந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஏர்டெல் நிறுவனம் க்ளியர் டாக்ஸ் ஜிஎஸ்டி நிறுவனத்துடனும் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளது. இந்த நிறுவனம் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி ரிட்டன் செய்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளியர் டாக்ஸ் மற்றும் ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ் ஆகியவை இணைந்து வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே ஜிஎஸ்டி ரிட்டர் செய்து தருகிறது.

அதுமட்டுமின்றி க்ளியர் ஜிஎஸ்டி சாப்ட்வேர் ஒன்றையும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செய்து தருகிறது. இந்த இலவச சேவையை கிளியர் டாக்ஸ் நிறுவனம் வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் 31 வரை செய்து கொடுக்க முன்வந்துள்ளது.

"இந்தியாடா.. கெத்துடா"னு இனிமே எவனாச்சும் சொல்லுங்க, அப்புறம் இருக்கு.!

மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபைல்களை அப்லோடு செய்ய இலவசமாக டேட்டாவையும் வழங்குகிறது. எனவே ஏர்டெல் ஜிஎஸ்டி அட்வாண்டேஜ் தரும் இந்த இலவச டேட்டாக்களை ஃபைல் ரிட்டர் செய்பவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

இதுகுறித்து கிளியர் டேக்ஸ் சி.இ.ஓ ஆர்ச்சிட் குப்தா கூறுகையில், 'ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த முறையில் ஜிஎஸ்டி ரிட்டர் தாக்கல் செய்து சேவை செய்கிறொம்.

தற்போது ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் எங்களால் மிக அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் கிளியர் டேக்ஸ் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கு தேவையான டூல்ஸ் மற்றும் ரிட்டர் பைலிங் செய்ய அனைத்து உதவிகளையும் செய்து தருகிறது. இந்த அரிய வாய்ப்பினை அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று மேலும் கூறினார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel GST Advantage will also enable customers to upload their returns without worrying about bandwidth charges.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X