ஏர்டெல்லே சொல்லிருச்சு: அமோக வரவேற்பு இதுதான் சிறந்த திட்டம்

|

ஏர்டெல் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் ஏணைய கவர்ச்சிகரமான திட்டங்களை நிறுவனம் வழங்குகிறது. இதில் உள்ள பெஸ்ட் செல்லர் திட்டத்தை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஏர்டெல். குறிப்பாக பிராட்பேண்ட் திட்டத்தில் ஏர்டெல் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. ஏர்டெல் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களில் ஏணைய கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்குகிறது.

தொலைத்தொடர்பு நிறுவன திட்டங்கள்

தொலைத்தொடர்பு நிறுவன திட்டங்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ அறிமுகம் செய்த குறுகிய காலத்திலேயே இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. ஜியோவுக்கு இணையாக பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் திட்டங்களில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

பெஸ்ட் செல்லர் திட்டம்

பெஸ்ட் செல்லர் திட்டம்

இந்த நிலைியல் பாரதி ஏர்டெல் தனது அதிகாரப்பூர்வ இணையதளபக்கத்தில் பெஸ்ட் செல்லர் (அதிகம் ரீசார்ஜ் செய்யப்படும் திட்டம்) எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்தை அறிவித்துள்ளது. அது பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ.999 ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமாகும்.

ரூ.499, ரூ.799, ரூ.999, ரூ.1499 மற்றும் ரூ.3999

ரூ.499, ரூ.799, ரூ.999, ரூ.1499 மற்றும் ரூ.3999

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ஐந்து திட்டங்கள் கிடைக்கிறது. இதன் விலை குறித்து பார்க்கையில் ரூ.499, ரூ.799, ரூ.999, ரூ.1499 மற்றும் ரூ.3999 ஆகும். ஆரம்ப விலை திட்டமாக ரூ.499-க்கு கிடைக்கிறது. இருப்பினும் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தில் ரூ.999 பலரால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

Whatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள்..

3300 ஜிபி டேட்டா

3300 ஜிபி டேட்டா

ரூ.999 திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கையில் 200 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை வழங்குகிறது. இதில் 3.3டிபி அதாவது 3300 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்குகிறது. இதில் வரம்பற்ற குரலழைப்பு நன்மைகளும் கிடைக்கிறது.

இலவசமாக எக்ஸ்ட்ரீம் பாக்ஸ்

இலவசமாக எக்ஸ்ட்ரீம் பாக்ஸ்

இந்த திட்டத்தை ஆரம்பமாக தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல் டிஜிட்டல் டிவி எச்டி பேக், ரூ.999 மதிப்பில் கிடைக்கும் ஜீ5 ப்ரீமியம் சந்தா, அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி அணுகல் கிடைக்கிறது.

ப்ரீமியம் பிராட்பேண்ட் திட்டங்கள்

ப்ரீமியம் பிராட்பேண்ட் திட்டங்கள்

ரூ.999-க்கு கீழ் கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டங்களில் ஓடிடி சந்தா அணுகல் மற்றும் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் வழங்கவில்லை. ஏர்டெல் இரண்டு ப்ரீமியம் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. அதன் விலை ரூ.1,499 மற்றும் ரூ.3,999 ஆகும். இதில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் ஓடிடி அணுகலை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bharti Airtel Official Announcement: Rs.999 is the Best Seller Airtel Xstream Fiber broadband plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X