Jio, Vi, BSNL வழங்காத நன்மையை வழங்கும் Airtel.. அப்படி என்ன தனித்துவமான நன்மை இது?

|

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi), ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) உட்பட மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதுவும் செய்யாத பலனை அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் தொகுக்கிறது. நான் பேசும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு, ஜியோ, விஐ மற்றும் BSNL நிறுவனங்கள் வழங்காத அப்படிப்பட்ட என்ன நன்மைகளை ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது என்று பார்க்கலாம். உண்மையில் மற்ற நிறுவனத்தின் திட்டங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இரண்டு திட்டங்களுக்கு மட்டும் கிடைக்கும் தனித்துவமான நன்மை

இரண்டு திட்டங்களுக்கு மட்டும் கிடைக்கும் தனித்துவமான நன்மை

பார்தி ஏர்டெல் வழங்கும் இரண்டு திட்டங்கள் மட்டுமே இந்த தனித்துவமான நன்மையுடன் வருகின்றன. இரண்டு திட்டங்களும் விலையுயர்ந்த வகையின் ஸ்பெக்ட்ரமில் அடங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதை பட்ஜெட் விலை திட்டங்கள் என்று நாம் பிரித்திட முடியாது. மேலும், இந்த திட்டங்கள் எந்தவொரு பயனருக்கும் தேவையான அதிக அளவிலான டேட்டாவைப் பெறுகின்றனர். இந்த திட்டங்களின் விலை ரூ. 699 மற்றும் ரூ.999 ஆகும். சரி, இந்த திட்டம் என்ன நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது என்று பார்க்கலாம்.

பார்தி ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

பார்தி ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

பார்தி ஏர்டெல் அதன் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அதன் பயனர்களுக்குத் தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இது ஒரு குறுகிய கால திட்டமோ அல்லது நடுத்தர கால திட்டமோ அல்ல என்பது கவனிக்கத்தக்கது. பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ. 699 திட்டத்தில், பயனர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்தத் திட்டம் வழங்கும் தனித்துவமான பலனைப் பற்றி நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியதுள்ளது. அதற்கு, தொடர்ந்து படியுங்கள்.

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பது சட்டவிரோதமானது.. ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த நீதிபதி.. புகார் செய்தால் இழப்பீடு..சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பது சட்டவிரோதமானது.. ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த நீதிபதி.. புகார் செய்தால் இழப்பீடு..

699 ப்ரீபெய்ட் திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் நன்மை

699 ப்ரீபெய்ட் திட்டத்துடன் கிடைக்கும் கூடுதல் நன்மை

பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டமானது பயனர்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் பலன்களை வழங்குகிறது. இதில் குறிப்பாக, இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு Airtel Xstream Mobile Pack, Hellotunes, FASTag cashback, Shaw Academy மற்றும் பல தளங்களுக்கு இலவச சந்தாக்கள் அடங்கும். இத்துடன், இந்த ரூ.699 திட்டமானது அமேசான் பிரைம் சந்தாவுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. அடுத்து, பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்திற்குச் செல்லலாம்.

பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டம்

பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டம்

பார்தி ஏர்டெல்லின் ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர கால திட்டமாகும். இந்தத் திட்டத்திலும், பயனர்கள் அதே ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளைப் பெறுகின்றனர் என்பது குறிபிடித்தக்கது.

கொரோனா: மோசமான நிலையை உலகம் இதுவரை எதிர்கொள்ளவில்லை: பில்கேட்ஸ் தகவல்..!கொரோனா: மோசமான நிலையை உலகம் இதுவரை எதிர்கொள்ளவில்லை: பில்கேட்ஸ் தகவல்..!

எந்த நிறுவனமும் வழங்காத தனித்துவமான நன்மை என்ன?

எந்த நிறுவனமும் வழங்காத தனித்துவமான நன்மை என்ன?

ஜியோவோ, வோடபோன் ஐடியாவோ அல்லது பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்காத தனித்துவமான நன்மை என்ன என்பதை இப்போது பார்க்கலாம். ஏர்டெல் , அதன் பயனர்களுக்கு அமேசான் பிரைம் உறுப்பினரின் தனித்துவமான நன்மையை வழங்குகிறது. ஆம், இந்த இரண்டு திட்டங்களும் பயனர்களுக்கு இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகின்றன. இது அமேசான் பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக் மற்றும் பல போன்ற அனைத்து அமேசான் பயன்பாடுகளையும் அணுகப் பயனர்களை அனுமதிக்கும்.

அமேசான் பிரைமின் வருடாந்திர சந்தா எவ்வளவு தெரியுமா?

அமேசான் பிரைமின் வருடாந்திர சந்தா எவ்வளவு தெரியுமா?

இருப்பினும், ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில், அமேசான் பிரைம் சந்தாவின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்களாகும். அதே சமயம் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில், வேலிடிட்டி 84 நாட்களாக அதிகரிக்கிறது. இது திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடியாகும். அமேசான் பிரைமின் வருடாந்திர சந்தா பயனர்களுக்கு ரூ.1,499 செலவாகிறது. அதே சமயம் மாதாந்திர மற்றும் காலாண்டு சந்தாக்களுக்கு பயனர்கள் முறையே ரூ.179 மற்றும் ரூ.459 செலுத்த வேண்டும். நேர்மையாகச் சொல்வதானால், மற்ற ஆபரேட்டர்களும் இதைச் செய்யாமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.

வெறும் ரூ. 53,850 விலைக்கு கெத்தான ஆப்பிள் ஐபோன் 13 வாங்கலாமா? எப்படி இந்த சலுகையை பெறுவது?வெறும் ரூ. 53,850 விலைக்கு கெத்தான ஆப்பிள் ஐபோன் 13 வாங்கலாமா? எப்படி இந்த சலுகையை பெறுவது?

Best Mobiles in India

English summary
Bharti Airtel Offers This Best Benefit With Prepaid Plans That Jio Vi and BSNL Dont : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X