எது எப்படியோ நமக்கு லாபம்தான்: 6ஜிபி டேட்டா வரை இலவசம்- ஏர்டெல் பயனர்களே ரெடியா?
பாரதி ஏர்டெல் சில ரீசார்ஜ் திட்டங்களில் தங்களது பயனர்களுக்கு இலவச ரீசார்ஜ் கூப்பன்களை வழங்கி வருகிறது. கீழே வழங்கப்பட்டுள்ள திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு இலவச கூப்பன்கள் தானாகவே கிடைக்கிறது.

ஏர்டெல் சலுகைகள்
பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து பிரபல டெலிகாம் நிறுவனங்களுக்கும் கடும் சவாலாக இருப்பது ஜியோ.

போட்டிப்போட்டு சலுகைகளோடு திட்டங்கள்
ஜியோவை சமாளித்து பயனர்களை அதிகரிக்க பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஏர்டெல்., தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல சலுகைகளை அறிவித்து வருகிறது.

இலவச டேட்டா கூப்பன்கள்
பாரதி ஏர்டெல் தற்போது இலவச தரவு கூப்பன் சலுகைகள் அறிவித்துள்ளது. இதில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் 6ஜிபி வரை இலவச டேட்டாவை பெற முடியும். ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தினசரி தரவு திட்டத்தை ரூ.219 என்ற விலையில் இருந்து வழங்கி வருகிறது.

டேட்டா வவுச்சர்கள் எப்படி பெறுவது
இலவச டேட்டா கூப்பன் சலுகையுள்ள திட்டங்களை வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும்போது 1ஜிபி டேட்டாவில் தொடங்கி வவுச்சர்களை வழங்குகிறது. வாடிக்கையாளர் வரம்பற்ற காம்போ பேக்கை தேர்வு செய்யும்போது 28 நாட்கள் திட்டத்தில் 1ஜிபி டேட்டா மதிப்புள்ள ஒரு கூப்பனை வழங்குகிறது.

ரீசார்ஜ் திட்ட விவரங்கள்
அதேபோல் 56 நாட்கள், 86 நாட்கள் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது 4 மற்றும் 6 வவுச்சர்களை பெறலாம். இதில் கிடைக்கும் ரீசார்ஜ் திட்ட சலுகை குறித்து பார்க்கலாம். ரூ.219, ரூ.249, ரூ.279, ரூ.289, ரூ.298, ரூ.349, ரூ.398 மற்றும் ரூ.448 உள்ளிட்ட திட்டங்களில் கூப்பன் வவுச்சர்கள் கிடைக்கும்.

ஆறு 1ஜிபி டேட்டா வவுச்சர் கூப்பன்கள்
28 நாட்கள் திட்டத்தில் 1ஜிபி டேட்டா கூப்பனை வழங்குகிறது. ரூ.399, ரூ.449, ரூ.558 மற்றும் ரூ.599 ஆகிய திட்டத்தில் தலா நான்கு 1ஜிபி டேட்டா கூப்பன்களை வழங்குகிறது. ரூ.598 மற்றும் ரூ.698 ஆகிய 56 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களில் ஆறு 1ஜிபி டேட்டா வவுச்சர் கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

சலுகைக்கு தகுதி பெறவேண்டிய வாடிக்கையாளர்கள் பாரதி ஏர்டெல்லின் தேங்க்ஸ் பயன்பாடு மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடானது கூகுள் ப்ளேஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக இலவசமாக பதிவிறக்கம் செய்து ரீசார்ஜ் செய்யலாம்.

ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டில் எனது கூப்பன்கள் என்ற தொகுப்பில் ரீசார்ஜ் செய்யும்போது 1ஜிபி டேட்டா கூப்பனை ஒவ்வொன்றாக பெறலாம். இந்த கூப்பனை செயல்படுத்தும்போது எந்த நேரத்தில் ரீசார்ஜ் செய்தாலும் காலை 12 மணிக்கு காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications