Airtel வழங்கும் 5GB இலவச டேட்டா வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க போதும்.!
வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாத நபர்களை கூட நாம் இன்றைய காலகட்டத்தில் பார்க்கலாம். ஆனால், டேட்டா பேலன்ஸ் இல்லதா நபரை நாம் பார்க்கவே முடியாது. டேட்டா பேலன்ஸ் என்பது இப்போது அனைவருக்கும் தேவையான ஒரு முக்கியமான விஷயமாக மாறிவிட்டது. தினசரி டேட்டா நன்மையை நம்பி இருக்கும் நமக்கு 5ஜிபி டேட்டா இலவசமாக கிடைத்தால் வேண்டாமென்று சொல்லப்போகிறோம். ஆம், Airtel நிறுவனம் இப்போது அதன் பயனர்களுக்கு 5GB இலவச டேட்டாவை அறிவித்துள்ளது.

ஏர்டெல் வழங்கும் 5ஜிபி இலவச டேட்டா நன்மை
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான திகழும் ஏர்டெல் நிறுவனம், அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 5ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் கூப்பன் நன்மையை இப்போது வழங்குகிறது. இந்த இலவச 5ஜிபி டேட்டாவை ஏர்டெல் பயனர்கள் Airtel Thanks App மூலம் பெறலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த இலவச 5ஜிபி டேட்டாவை பெறுவதற்கு ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் மூலமாக மட்டுமே லாகின் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்தால் இந்த 5ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்?
அப்படி லாகின் செய்தால் மட்டுமே இந்த 5ஜிபி இலவச டேட்டா கிடைக்கும். தெரியாதவர்களுக்கு, ஏர்டெல் தேங்க்ஸ் என்பது பார்தி ஏர்டெல் வழங்கும் ஒரு தனித்துவமான ஆப்ஸ் ஆகும். இது ஏர்டெல் பயனர்களுக்கு ரிவர்ட் வழங்குவது, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை அணுகுவது, ரீசார்ஜ் செய்வது, பில்லுக்கு பணம் செலுத்துவது, ரீசார்ஜ் திட்டங்களை மாற்றுவது என்று பல சேவைகளை ஒரே ஆப்ஸில் வழங்குகிறது. கூகிள் பே வருவதற்கு முன் மக்கள் ஏர்டெல் பேங்க் சேவையை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.

எத்தனை இலவச டேட்டா கூப்பன்கள் வழங்கப்படும்?
சரி, இந்த 5ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். இந்த 5ஜிபி இலவச டேட்டா பயனர்களுக்கு மொத்தமாக வழங்கப்படாது என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். அதற்குப் பதிலாக, ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் உங்களுக்கு தலா 1ஜிபி அளவில் ஐந்து கூப்பன்களாக உங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் கணக்கில் கிரெடிட் செய்யும். இந்த 5ஜிபி டேட்டாவை பெற சில நிபந்தனைகளையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

யாருக்கெல்லாம் இந்த 5ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்?
பார்தி ஏர்டெல்லின் புதிய ப்ரீபெய்ட் இணைப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த 5ஜிபி இலவச டேட்டாவை நிறுவனம் வழங்கும். புதிய ஏர்டெல் இணைப்பைப் பெற்று, ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸை பதிவிறக்கம் செய்து, உங்கள் புதிய ஏர்டெல் எண் மூலம் உள்நுழைந்து பதிவு செய்யும் போது இந்த 5ஜிபி இலவச டேட்டா உங்களுக்கு கிடைக்கும். ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸில் லாகின் செய்த பின்னர், ஆப்ஸ் இன் உள் இருக்கும் கூப்பன்கள் பகுதிக்குச் சென்று இலவச டேட்டா கூப்பன்களைப் பெறலாம்.

எத்தனை நாட்களுக்குள் இந்த கூப்பனை பயன்படுத்த வேண்டும்?
இந்த ஆப்ஸ் இல் உள்ள புதிய எண்ணுடன் உள்நுழைந்தவுடன், ஒவ்வொரு புதிய பயனரும் 1ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் 5 கூப்பன்களை நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பயனர்கள் இந்த டேட்டா வவுச்சர் கூப்பன்களை 90 நாட்களுக்குள் க்ளைம் செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. இல்லையெனில், அவை காலாவதியாகிவிடும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல், ரூ.100 ரிவார்டாக கிடைக்கும் ஒரு சலுகையையும் ஏர்டெல் இப்போது வழங்கி வருகிறது.

இதை செய்தால் உங்களுக்கும் உங்கள் நம்பருக்கு ரூ.100 ரிவார்ட்-ஆ.!
ஏர்டெல் பயனர்கள் ஒவ்வொரு வெற்றிகரமான பரிந்துரையிலும் ரூ.100 சம்பாதிக்கலாம். ஏர்டெல் தேங்க்ஸ் மூலம், புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம்மிற்கான ரெஃபரல் லிங்க்-ஐ நண்பருக்கு அனுப்ப வேண்டும். அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து அவர் புதிய ஏர்டெல் சிம் வாங்கினால், பார்தி ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து ரூ.100 மதிப்பிலான தள்ளுபடி கூப்பன்கள் உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் சேர்த்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் மூலம் இன்னும் பல கேஷ்பேக் சலுகைகளையும் நிறுவனம் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications