லிமிட்டே இல்லை.. Airtel ஹெவி டேட்டா பிளான்ஸ்.. எண்டே இல்லாமல் என்னவேனாலும் பாக்கலாம்..
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விலை புள்ளிகளில் பல்வேறு நன்மைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை (prepaid plans) வழங்கி வருகிறது. குறிப்பாக, ஹெவி டேட்டா யூஸர்களுக்காக நிறுவனம் சிறந்த டேட்டா திட்டங்களையும் (heavy data plans) வழங்குகிறது.
ஹெவி டேட்டா பயனர்களுக்கு தினசரி வரம்பு ஒரு கட்டுப்பாடாக அமைகிறது. கட்டுப்பாடும் எதுவும் இல்லாமல், ஒரு வட்டத்திற்குள் அடைந்திருக்க விரும்பாத வடிக்கையாளர்களுக்காக இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் சிறந்த ஏர்டெல் டேட்டா பிளான்ஸ் (Airtel data plans) திட்டங்களை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். இன்னும் எளிமையாகச் சொன்னால், இது மொத்தமாக டேட்டாவை வழங்கும் 'பல்க் டேட்டா' திட்டங்களாகும்.

ஏர்டெல் 296 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 296 prepaid plan):
ஏர்டெல் ரூ. 296 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி வரம்புகள் இல்லாத என்ட்ரி-லெவல் திட்டமாகும். இது தினசரி டேட்டா பயன்பாட்டு வரம்பு இல்லாமல் பயன்படுத்த விரும்பும் நபர்களுக்கு சிறந்ததாகும். இந்த திட்டத்துடன் 25ஜிபி டேட்டா (25GB data) கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS உடன் வருகிறது. டேட்டா வரம்பை முடித்த பிறகு, மதிப்பு அடிப்படையிலான கட்டணம் 50p/MB என்று வசூலிக்கப்படும்.
இதன் வேலிடிட்டி 30 நாட்கள் செல்லுபடியாகும். Airtel பயனர்கள் 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் வரம்பற்ற 5G அன்லிமிடெட் நன்மையையும் கிடைக்கிறது. இத்துடன் 3 மாத அப்போலோ 24/7 (Apollo 24 7 circle) நன்மை, இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விண்ட் மியூசிக் (Wynk Music) நன்மை போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
ஏர்டெல் 489 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 489 Prepaid Plan):
ஏர்டெல் 498 திட்டம் ஏர்டெல் பயனர்களுக்கான அடுத்த விருப்பமாகும். இது அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை, 50 ஜிபி டேட்டா (50GB data plan) நன்மையுடன் வருகிறது. இது 300 SMS நன்மை உடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையையும் இலவசமாக வழங்குகிறது. இது 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இதுவும் ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) நன்மையுடன் வருகிறது.
ஏர்டெல் 509 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 509 Prepaid Plan):
ஏர்டெல் 509 ப்ரீபெய்ட் திட்டம் 1 மாத செல்லுபடியாகும் பிரிவில் தினசரி வரம்பு இல்லாத திட்டத்தை விரும்பும் பயனர்களுக்கு 60 ஜிபி டேட்டாவை (60 GB Data) வழங்குகிறது. இந்தத் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், 300 SMS போன்றவற்றை 1 மாதத்திற்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இத்துடன் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையுடன் வருகிறது. இதுவும் அன்லிமிடெட் 5G இலவச டேட்டா நன்மையுடன் வருகிறது.
இது 3-மாத அப்போலோ 24/7 சர்க்கிள் (Apollo 24 by 7 Circle Subscription) உடன் வருகிறது. இலவச ஹலோடியூன்ஸ் (Hellotunes) மற்றும் விண்ட் மியூசிக் (Wynk Music) போன்ற சந்தாவுக்கான அணுகல் உடன் வருகிறது. தீவிரமான டேட்டா பயனர்களுக்கு இந்த திட்டங்கள் மிகவும் சிறப்பானது. இந்த திட்டங்களில் எந்த திட்டம் உங்களுக்கு பிடித்தமானதாக உள்ளதென்று கமெண்டில் பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








