பார்தி ஏர்டெல் வழங்கும் புத்தம் புதிய போஸ்ட்பெயிட் திட்டம்.!
நேற்று தொடங்கி அடுத்த 51 நாட்களுக்கு நடக்கும் ஐபிஎல் 2018 போட்டிகளை இலவசமாக காண, ஏர்டெல் நிறுவனம் இந்த இலவச சலுகையை அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது,மேலும் இந்நிறுவனம் வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாட்டான ஏர்டெல் டிவி ஆப் வழியிலான ஒரு அட்டகாசமான இலவச சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இப்போது அறிவித்துள்ள புதிய போஸ்ட்பெயிட் திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும்.

பார்தி ஏர்டெல் தற்சமயம் ரூ.649 போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த அட்டகாசமான திட்டத்தில் 50ஜிபி டேட்டா வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான் பிரைம் வீடியோ, மியூஸிக் ஸ்ட்ரீமிங், லைவ் டிவி போன்ற பல்வேறு சேவைகளை பயன்படுத்த முடியும் என ஏர்டெல் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் நேற்று தொடங்கி அடுத்த 51 நாட்களுக்கு நடக்கும் ஐபிஎல் 2018 போட்டிகளை இலவசமாக காண, ஏர்டெல் நிறுவனம் இந்த இலவச சலுகையை அறிவித்துள்ளது. இந்த இலவச வாய்ப்பானது அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். நிகழும் ஐபிஎல் போட்டிகளின் வரம்பற்ற இலவச ஸ்ட்ரீமிங்கை பெற,ஒருவர் வெறுமனே ஏர்டெல் டிவி பயன்பாட்டின் புதிய அப்டேடட் பதிப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

அப்டேட் செய்த பின்னர், ஏர்டெல் டிவி ஆப்பில் உள்நுழைய ஒரு பிரத்யேக கிரிக்கெட் பகுதியை காண்பீர்கள், அதன் வழியாக இலவச சேவைகளை அணுகலாம். இந்த இலவச ஸ்ட்ரீமிங் சேவையை அனுபவிக்க, ஏர்டெல் டிவி பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பை நிறுவ வேண்டும் என்பது கட்டாயமாகும்.

குறிப்பாக இந்த ஆப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளதங்களிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஏர்டெல் அதன் பிராட்பேண்ட் இணைய சேவையிலும் புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ஐபிஎல் 2018 போட்டிகளை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது, எனவே வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்கள் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications