ஏர்டெலில் வேலை பார்க்க ஆசையா? இரண்டு பணியிடங்களுக்கு ஆட்கள் தேடும் ஏர்டெல் நிறுவனம்..
இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில், பாரதி ஏர்டெல் தற்போது இரண்டு வேலை இடுகைகளுக்கு ஆட்களை நியமிக்கப் பார்க்கிறது. இதன் படி முதல் பணியிடம் சமூக ஊடக ஆய்வாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதேபோல், இரண்டாம் பணியிடம் ஆண்ட்ராய்டு டெவலப்பர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

இந்த இரண்டு வேலைகளும் எப்படியானது?
இரண்டு வேலைகளும் முழுநேர பணியாகும். இந்த பதவிக்காகப் பதிவிடும் வேட்பாளர் ஹரியானாவின் குருகிராமில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்திற்கு மாற வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க. இரண்டு வேலைகளும் தற்போது ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன, இந்த பதவிக்கு தகுதியான திறமைசாலிகளுக்கு பணியிடம் வழங்கப்படும் என்று ஏர்டெல் கூறியுள்ளது.

ஏர்டெல் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை விவரங்கள்
ஆண்ட்ராய்டு டெவலப்பர் பணியானது நடுத்தர மற்றும் மூத்த நிலை பணியிட வேலைக்கானது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் முக்கியப் பொறுப்புகள், AOSP/ Android TV மூலக் குறியீட்டை நன்கு அறிந்திருப்பதும், செயல்முறையை உருவாக்குவதும் ஆகும். மேலும், அந்த நபர் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை மென்பொருள் உருவாக்கத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு என்ன அடிப்படை தேவைகள் எல்லாம் முக்கியம்?
மேலும் வணிக நுகர்வோர் சாதனங்களுக்கான ஆண்ட்ராய்டு மற்றும் OS ஃபார்ம்வேர் அடிப்படையிலான மேம்பாட்டில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியிட வேலைக்குத் தேவையான திறன்கள் பற்றி பார்க்கையில், இவர்களுக்கு Java, Kotlin, C மற்றும் C++ மீது வலுவான புரிதல் மற்றும் செயல்திறன் வைத்திருக்க வேண்டும். Android Build System பற்றிய முழுமையான அறிவு, வடிவமைப்பு வடிவங்கள், தரவு கட்டமைப்புகள், சோதனை உந்துதல் மேம்பாடு,

எங்கு சென்று இந்த பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்?
போன்ற பலவற்றை உள்ளடக்கிய வலுவான பொருள் சார்ந்த வடிவமைப்பு திறன்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். வேட்பாளருக்குத் தேவையான கல்விப் பின்புலம் பின்வருவனவாகும்., கணினி அறிவியலில் BE அல்லது B.Tech அல்லது அதற்கு சமமான கல்வி நிலைப்பாட்டில் இருத்தல் வேண்டும். முன்னுரிமை உயர்மட்ட பொறியியல் பள்ளிகளில் இருந்து வருபவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும். முழுமையான விவரங்களுக்கு, நீங்கள் ஏர்டெல்லின் LinkedIn பக்கத்திற்குச் சென்று 'ஜாப்ஸ்' பிரிவின் கீழ் இந்த வேலையைத் தேடலாம்.

ஏர்டெல் சமூக ஊடக ஆய்வாளர் வேலைக்கான விவரங்கள்
ஏர்டெல் தேடும் சமூக ஊடக ஆய்வாளரின் வேலை மிகவும் எளிமையானது ஆனால் தேவையுடையதாக இருக்கும். நிறுவனத்தின் இடுகையின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் சமூக சேனல்கள் முழுவதும் வாடிக்கையாளர் தரவை ஆய்வு செய்து பகுப்பாய்வு செய்யவும் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளை உருவாக்கவும் வாடிக்கையாளர் அனுபவக் குழுவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த அறிக்கைகள் நுகர்வோருக்கு ஓம்னிசேனல் அனுபவத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும்.

மற்ற வேலை விவரங்கள் பற்றி அறிந்துகொள்ள எங்கு செல்வது?
LinkedIn மக்கள் அல்லது பயனர்கள் வேலை இடுகையின் மூலம் இந்த பணியிடத்திற்கான பதிவை மிகவும் வசதியாக அணுக அனுமதிக்கிறது. சமூக ஊடக ஆய்வாளரைப் பற்றிய மற்ற வேலை விவரங்கள் நிறுவனத்தின் இடுகையில் இல்லை என்பதனால், இப்போது எங்களால் விரிவாக விவரிக்க முடியவில்லை. ஏர்டெல்லின் லிங்க்ட்இன் சுயவிவரத்திலும் இந்த வேலை இடுகையை நீங்கள் காணலாம்.

திடீரெனெ விலை அதிகரித்த ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்
பாரதி ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டண உயர்வை சற்றுமுன் அறிவித்துள்ளது. தற்போதைய கட்டண உயர்வுகள், தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு ஒரு பயனருக்குச் சராசரி வருவாயான (ARPU) 200 ரூபாயை நெருங்கும் கனவை நனவாக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதன் கட்டணங்களை தற்போது உயர்த்தியுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனமும் இதனை தொடர்ந்து கட்டணத்தை அதிகரிக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி இந்த விலை புள்ளியில் தான் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கும்
நீங்கள் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் என்றால், கட்டாயம் இந்த புதிய விலை பட்டியலைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் இந்த விலை புள்ளியில் தான் உங்களுடைய ரீசார்ஜ் திட்டங்கள், ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கிடைத்த ரூ.79 விலை கொண்ட அடிப்படைத் திட்டமானது, இப்போது ரூ.99 என்ற விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

அடிப்படை திட்டத்தின் விலையில் மாற்றம்
கட்டண உயர்வுகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒவ்வொரு விவரமும் இங்கே முழுமையாகக் கூறப்பட்டுள்ளது. விலை அதிகரிப்புடன் ஏர்டெல் நிறுவனம் அதன் அடிப்படை திட்டத்துடன், ஏர்டெல் பயனர்களுக்கான நன்மைகளையும் அதிகரித்துள்ளது. ரூ.99 திட்டத்தில் (முன்பு ரூ.79) இப்போது முழுமையாக ரூ. 99 மதிப்புள்ள டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா ஆகியவை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.149 விலை திட்டம் இப்போது என்ன விலையில் கிடைக்கிறது
ஏர்டெல் நிறுவனம் தற்போது அதன் ரீசார்ஜ் திட்டத்துடன் விலை மற்றும் விபரங்களைத் தெளிவாகக் காண்பிக்கும் அட்டவணையை நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. இதன் படி முன்பு கிடைத்த ரூ.149 திட்டமானது இப்போது விலை அதிகரிப்பிற்குப் பின்னர் இனி ரூ.179 என்ற விலையில் கிடைக்கும். இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்கு 2ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications