ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!

|

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சேவையைச் சிறப்பாக வழங்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக Airtel நிறுவனம் ஜியோவுடன் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது. இதற்காக ஏர்டெல் நிறுவனம் இப்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அமைதியாகத் தனது பட்டியலில் சேர்த்துள்ளது. நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால், இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை நீங்கள் ஒருமுறையாவது கட்டாயமாகப் பார்க்க வேண்டும்.

பிரீமியம் சேவையை வழங்குகிறதா ஏர்டெல்?

பிரீமியம் சேவையை வழங்குகிறதா ஏர்டெல்?

இந்த திட்டங்கள் நுகர்வோருக்கு நல்ல நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக, ஜியோவிடமிருந்து நீங்கள் பெறக்கூடிய விலையில் இவை இன்னும் மலிவாக இல்லை என்றாலும், ஏர்டெல் தன்னை பிரீமியம் பிளேயர் என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறது என்பதே உண்மை. ஏர்டெல் பிரீமியம் சேவையை வழங்குவதாலேயே, அதன் முன்னணி போட்டியாளரை விட அதிக கட்டணங்களை வசூலிக்கிறது என்று கூறப்படுகிறது.

ஏர்டெல் அறிமுகம் செய்த 2 புதிய திட்டங்கள்

ஏர்டெல் அறிமுகம் செய்த 2 புதிய திட்டங்கள்

பாரதி ஏர்டெல் இப்போது புதிதாக அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை நீங்கள் இன்று முதல் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். நாம் பேசும் இந்த இரண்டு புதிய திட்டங்களும் ரூ. 519 மற்றும் ரூ. 779 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இவற்றின் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த பலன்களைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க.

Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?Oppo மற்றும் OnePlus போன் விற்பனைக்கு தடை! Nokia வைத்த ஆப்பு! எதனால் இப்படி ஒரு சிக்கல்?

பாரதி ஏர்டெல்லின் ரூ.519 திட்டம்

பாரதி ஏர்டெல்லின் ரூ.519 திட்டம்

பாரதி ஏர்டெல்லின் ரூ.519 திட்டம், 60 நாட்கள் செல்லுபடியும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு நன்மை, தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இத்துடன் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளாக இலவச Apollo 24|7 Circle, இலவச Hellotunes, Wynk Music மற்றும் FASTagல் ரூ.100 கேஷ்பேக் ஆகியவை அடங்கும்.

பாரதி ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ 779 திட்டம்

பாரதி ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ரூ 779 திட்டம்

பாரதி ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள 2வது திட்டமானது, ரூ 779 விலையில் வருகிறது. இந்த ரூ 779 திட்டத்தின் பலன்கள் அப்படியே நாம் மேலே பார்த்த ரூ. 519 ரீசார்ஜ் திட்டத்தைப் போலவே இருக்கும். இதில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. எனவே ரூ.519 திட்டத்தில், ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் உங்களுக்கு ரூ.5.76 விலையில் கிடைக்கிறது. அதேபோல், இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த தினசரி செலவு ரூ.8.65 ஆக இருக்கிறது.

SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!

இந்த திட்டங்களின் தினசரி கட்டணம் இவ்வளவு தானா?

இந்த திட்டங்களின் தினசரி கட்டணம் இவ்வளவு தானா?

மேலும், ரூ.779 திட்டத்தில், ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் உங்களுக்கு ரூ. 5.77 செலவில் கிடைக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான ஒட்டுமொத்த தினசரி செலவு ரூ. 8.65 ஆக இருக்கும். இரண்டு திட்டங்களும் உண்மையில் ஏறக்குறைய ஒரே விலையில் வருகின்றன. எது எப்படியாக இருந்தாலும், இந்த 2 திட்டங்களும் ஜியோவுடன் போட்டியிட்டு வெற்றிபெறுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Airtel 5G எப்போது அறிமுகம்?

Airtel 5G எப்போது அறிமுகம்?

ஏர்டெல் நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி சேவையை இம்மாதமே துவங்கும் முன்னணி நிறுவனங்களாக ஜியோ மற்றும் ஏர்டெல் திகழ்கிறது. இந்த புதிய 5ஜி சேவை இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனங்கள் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாட்டில் உள்ள 1000+ நகரங்களில் இந்த 5ஜி சேவையை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்யவுள்ளது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Launches Two New Prepaid Plans Rs 519 and Rs 779 That You Can Get It From Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X