நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!
ர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 82 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 246ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் ரூ.597/-என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை 168 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்பு ரூ.597/- திட்டத்தில் 10ஜிபி வரை இலவச டேட்டா கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் ரூ,98/- தான் இன்றுவரை சிறந்த நுழைவு நிலை கட்டண திட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதை தகர்க்கும் வண்ணம் ஏர்டெல் ரூ.99/-ல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 1ஜிபி டேட்டா வழங்கிய ரூ.98/- ஆனது இனி 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். உடன் வழக்கமான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் அணுக கிடைக்கும்.

28 நாட்கள்
இந்த திட்டத்தின் சிறந்த பகுதியாக இதன் செல்லுபடி திகழ்கிறது. இது ரீசார்ஜ் செய்த தேதியில் இருந்து 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த நன்மைகள் ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் ஒத்திருக்கிறது. அது வரம்பற்ற குரல் அழைப்புகள், 2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் மொத்தமாகவே 300 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்கும்.

ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட்:
ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 82 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 246ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.448/- திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.448/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 114.8ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.449/- திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 164ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications