புதிய நாவிக்கேசன் அப்ளிகேசனை வழங்கும் ஏர்டெல்

Posted By: Karthikeyan
புதிய நாவிக்கேசன் அப்ளிகேசனை வழங்கும் ஏர்டெல்

இந்தியாவில் பரந்த அளவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கும் பாரதி ஏர்டெல் ஒரு புதிய நாவிக்கேசன் அப்ளிகேசனை நேற்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த நாவிக்கேசனுக்கு ஸ்மார்ட்ரைவ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த நாவிகேசனில் இருக்கும் மேப் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை பார்க்க முடியும் மற்றும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தையும் இந்த மேப்பைப் பார்த்து திட்டமிட முடியும்.

மேலும் இந்த ஸ்மார்ட்ரைவ் அப்ளிகேசன் பேசும் வசதி கொண்டது. எனவே இது உண்மையான தகவல்களை வழங்கும். மேலும் சாலைகளில் உள்ள போக்குவரத்து நிலவரத்தையும் இந்த அப்ளிக்கேசன் தெரிவிக்கும்.

அதோடு இந்த அப்ளிகேசன் முக்கியமான ரெஸ்டோரன்டுகள், தியேட்டர்கள் மற்றும் பெரிய ஷாப்பிங் மால்கள் போன்ற தகவல்களையும் தெரிவிக்கும். தற்போது இந்த அப்ளிகேசன் வசதி டெல்லி, என்சிஆர், மும்பை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் வரும் டிசம்பருக்கும் ஹைதராபாத், சென்னை மற்றும் புனா போன்ற நகரங்களுக்கும் இந்த அப்ளிகேசன் வசதி விரிவுபடுத்தப்படும்.

இந்த அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்ய ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் www.airtel.in/smartdrive என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அல்லது எஸ்எம்எஸ் ஸ்மார்ட் என்று டைப் செய்து 54321 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். அதன் மூலம் இந்த அப்ளிகேசனை பெறலாம்.

தற்போது இந்த அப்ளிகேசன் ஆன்ட்ராய்டு, ப்ளாக்பெரி, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களில் வழங்கப்படுகிறது. இந்த அப்ளிகேசன் நாள் ஒன்றுக்கு ரூ.10க்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.99க்கும் வழங்கப்படுகிறது.

மேலும் பலவதி வசதிகளையும் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot