Home
News

இந்தியாவில் 4ஜி நெட்வொர்க்கில் கலக்கும் ஏர்டெல்!

By Super
இந்தியாவில் 4ஜி நெட்வொர்க்கில் கலக்கும் ஏர்டெல்!

புகழ் பெற்ற நிறுவனமான ஏர்டெல், 4ஜி தொழில் நுட்ப சேவையை கொல்கத்தாவில் துவங்கி உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக தொலைதொடர்பு சேவையில் முன்நிலை வகித்து வருகிறது ஏர்டெல் நிறுவனம். இந்நிலையில் புதிய 4ஜி நெட்வொர்க் (டிடி-எல்டிஇ) சேவையை உருவாக்கி தந்துள்ளது.

இந்த சேவை வசதி கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அதிகம் பெயர் பெற்ற தொழில் நுட்பமான 4ஜி நெட்வொர்க் சேவை வசதியினை, கொல்கத்தாவில் தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபில் துவங்கி வைத்துள்ளார். கொல்கத்தாவில் ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ள இந்த 4ஜி தொழில் நுட்பத்தில் உள்ள முக்கிய வசதிகளை பற்றியும் பார்ப்போம்.

இந்த 4ஜி தொழில் நுட்பம், 3ஜி தொழில் நுட்ப வசதியைவிட 5 மடங்கு அதி வேகம் கொண்டது. 3ஜி தொழில் நுட்பத்தில் ஒரு நொடிக்கு 21 எம்பி வரை டவுன்லோட் செய்ய முடியும்.

இதே 4ஜி நெட்வொர்க் வசதியில் ஒரு நொடிக்கு 100 எம்பி வரை எளிதாக டவுன்லோட் செய்ய முடியும். இந்த 4ஜி தொழில் நுட்ப சேவையில் சிறந்த வீடியோ கான்ஃபிரன்ஸிங் தொழில் நுட்பத்தினை பெறலாம். 4ஜி தொழில் நுட்பத்தினை இனி பெங்களூர், பூனே மற்றும் சன்டிகார் ஆகிய இடங்களிலும் வழங்கு உள்ளது ஏர்டெல் நிறுவனம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X