Airtel: மொத்தமா 35 நாள் வேலிடிட்டி.. 4ஜிபி டேட்டா.. இலவச அன்லிமிடெட் நன்மை கூட இருக்கு.. என்ன திட்டம் என்ன வில
பாரதி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய ப்ரீபெய்ட்-ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வழங்கி வருகிறது. அந்த வரிசையில் நிறுவனம் இப்போது புதிதாக 35 நாட்கள் செல்லுபடியாகும், வேலிடிட்டி உடன் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்தகைய வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை இதுவரை எந்தவொரு தொலைதொடர்பு நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிதாக 35 நாள் வேலிடிட்டி (Airtel 35 days validity) உடன் அறிமுகம் செய்துள்ள திட்டத்தின் விலை என்ன? இதில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? இது யாருக்கு சிறந்தது என்பது போன்ற தகவலை பார்க்கலாம் வாங்க.

பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 35 நாள் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையுடன், அதிக செல்லுபடியாகும் வேலிடிட்டி திட்டத்தைத் தேடும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கானது (airtel prepaid). இந்தத் திட்டம் அவசரகாலத்தில் பயன்படுத்தக்கூடிய டேட்டா நன்மையையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்துடன் கிடைக்கும் டேட்டா நன்மை (data) போதவில்லை என்றால், பயனர்கள் கூடுதல் டேட்டா தேவைப்படும் போது, ஏர்டெல் டேட்டா வவுச்சர்கள் (airtel data vouchers) மூலம் ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம். இந்தத் திட்டமானது ரூ.289 என்ற விலையில் வருகிறது. இந்த திட்டத்துடன் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாமா?
பார்தி ஏர்டெல் ரூ 289 திட்டம்: (Bharti Airtel Rs 289 Plan)
பார்தி ஏர்டெல் வழங்கும் இந்த புதிய ரூ.289 திட்டம், அதன் பயனர்களுக்கு 4 ஜிபி டேட்டா நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை உடன் எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இது தினசரி 4 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இது தினசரி டேட்டா நன்மை கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டம் மொத்தமாக 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்க.

எனவே தினசரி டேட்டாவை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இது நிச்சயமாக உங்களுக்கானது அல்ல. இருப்பினும், உங்களுக்கு அதிக வேலிடிட்டியை குறைந்த கட்டணத்தில் பெற நீங்கள் விரும்பினால், இந்த திட்டம் நிச்சயம் உங்களுக்கானது. டேட்டா பற்றி கவலைப்படாத மற்றும் பெரும்பாலும் வைஃபை நெட்வொர்க்குகளை நம்பியிருக்கும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.
இந்த ஏர்டெல் ரூ. 289 திட்டம் ஒரு அடிப்படை ப்ரீபெய்ட் திட்டமாக இருப்பதால், கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், இதற்கு மேல் மற்ற டேட்டா வவுச்சர்களையும் நீங்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஏர்டெல் இந்த திட்டத்துடன் வரம்பற்ற 5G டேட்டா (5G data) சலுகையை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்லின் ரூ.289 திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) பலன்களை வழங்குகிறது. ஆனால், இதுவும் மொத்த SMS நன்மையாக, மொத்தம் 300 எஸ்எம்எஸ்களை மட்டும் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் இலவச நன்மைகளாக அபல்லோ 24|7 சர்க்கிள் நன்மை (Apollo 24|7 Circle), இலவச ஹலோடியூன்ஸ் (Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) உள்ளிட்ட கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
ஏர்டெல் வழங்கும் பிற செல்லுபடியாகும் திட்டங்களுடன் வருகிறது. ஆனால் நீங்கள் அதிக டேட்டா மற்றும் குறைவான செல்லுபடியை விரும்பினால், 25 ஜிபி லம்ப்சம் டேட்டாவுடன் வரும் ரூ.296 திட்டத்திற்கும் செல்லலாம். இதுவும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றம் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அதிக வேலிடிட்டியை குறைந்த விலையில் எதிர்பார்த்தால், இந்த திட்டம் உங்களுக்கானது.


Click it and Unblock the Notifications








