அம்பானி கிளப்பிய பீதியில் மலிவு விலையில் 4ஜி போன் வெளியிடும் ஏர்டெல்.!
அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த பார்தி ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் ஜியோபோனுக்கு போட்டியாக புதிய 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது, மேலும் கடந்த சில மாதங்களில், ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது, இதனையடுத்து சேவை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து வருகிறது ஏர்டெல் நிறுவனம்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் லவா மற்றும் கார்பன் ஆகிய நிறுவனங்களுடன் 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்துகிறது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

தீபாவளி:
அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த பார்தி ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, மேலும் 4ஜி ஸ்மார்ட்போனை தயாரிக்க சில கைபேசி தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது ஏர்டெல் நிறுவனம்.

ஜியோபோன் :
ஜியோபோன் செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் பீட்டா சோதனை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது, இந்த ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 வரை டெபாசிட் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

72 சதவிகிதம்:
இந்த ஆண்டின் மே மாதத்தில், ஏர்டெல் நிறுவனம் அதன் காலாண்டு லாபத்தில் 72 சதவிகிதம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,ஏர்டெல் வருவாய் கணிசமாக குறைந்துள்ளது.

டெலிகாம்:
இந்தியாவின் டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வருகையால் ஏர்டெல் வருமானம் குறைந்தது. ஜியோ கடந்த செப்டம்பரில் தனது இலவச சேவைகளை துவக்கியது, ஆரம்பத்தில் மூன்று மாதங்கள் கட்டணம் இன்றி பல சலுகைகளை வழங்கியது.

ரிலையன்ஸ் ஜியோ :
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வருமானம் முதல் அனைத்தும் வேகத்துடன் வளர்ச்சியடைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி கூறுகையில் ஜியோ 100 நாட்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைச் சந்தித்துள்ளது என கூறினார்.

ரூ.2500:
தற்போது ஏர்டெல் கூறியுள்ள அறிக்கையில் ரூ.2500 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications