உங்கள் வீட்டிற்கு கேமராவுடன் பாதுகாப்பு மாதம் ரூ.99 மட்டுமே.. ஏர்டெல் அறிமுகம் செய்த Airtel Xsafe சேவை..

|

பாரதி ஏர்டெல் நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விரிவான போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது. இதில் Airtel Xsafe என்ற சேவையும் அடங்கும். ஏர்டெல் பயனர்களின் வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பானதாகவும், அமைதியானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட நிறுவனத்திடமிருந்து இது ஒரு புதிய தீர்வாகும். ஏர்டெல் எக்ஸ்சேஃப் என்பது நிறுவனத்தின் பாதுகாப்பு சேவையாகும். இதன் கீழ் ஏர்டெல் பயனர்களுக்குப் பாதுகாப்பு கேமராக்களை மிகவும் மலிவான விலையில் நிறுவனம் இப்போது வழங்குகிறது. இந்த புதிய சேவையின் கீழ் ஏர்டெல் பயனர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

மாதத்திற்கு வெறும் ரூ.99 மட்டும் இருந்தால் போதுமா?

மாதத்திற்கு வெறும் ரூ.99 மட்டும் இருந்தால் போதுமா?

இந்த சேவையின் கீழ் ஏர்டெல் பயனர்களுக்குப் பாதுகாப்பு கேமராக்களை மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. சரியாகச் சொன்னால், மாதத்திற்கு வெறும் ரூ.99 அல்லது ஆண்டுக்கு ரூ.999 என்ற கட்டணத்தை மட்டும் நீங்கள் செலுத்தினால் போதுமானது. பயனர்கள் தங்கள் வீடுகள் அல்லது அலுவலகங்களுக்கு எத்தனை கேமராக்களை வேண்டுமானாலும் இந்த சேவையின் கீழ் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உங்கள் கேமரா எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கான செலவும் நிச்சயமாக அதிகரிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஏர்டெல் எக்ஸ்சேஃப் ஸ்மார்ட் அம்சங்கள்

ஏர்டெல் எக்ஸ்சேஃப் ஸ்மார்ட் அம்சங்கள்

ஏர்டெல் எக்ஸ்சேஃப் கேமராக்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்மார்ட் அம்சங்களைப் பார்ப்போம். ஏர்டெல் Xsafe கொண்டு வரும் பல அம்சங்கள் அட்டவணையில் உள்ளது, இருப்பினும் மிக முக்கியமான அம்சங்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளோம். ஆட்களை கண்டறிதல், முழு எச்டி வீடியோ, இருவழி பேச்சு, கிளவுட் ஸ்டோரேஜ், ரெக்கார்டு லைவ், வாழ்நாள் அழைப்பு மற்றும் கள ஆதரவு, வீடியோக்களைப் பதிவிறக்கம் மற்றும் பகிர்தல், சுற்றளவு மண்டலம், இயக்க உணர்திறன் கட்டுப்பாடு, ஒரே நேரத்தில் பார்ப்பது, இயக்கம் கண்டறிதல் மற்றும் இன்பில்ட் அலாரம் போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.

நிலவில் கண்ணாடி பந்துகளா? என்ன இது வித்தியாசமா இருக்கு? சீனாவின் லூனார் ரோவர் வெளியிட்ட படம்..நிலவில் கண்ணாடி பந்துகளா? என்ன இது வித்தியாசமா இருக்கு? சீனாவின் லூனார் ரோவர் வெளியிட்ட படம்..

ஏர்டெல் எக்ஸ்சேஃப் கீழ் எத்தனை கேமராக்கள் வருகிறது?

ஏர்டெல் எக்ஸ்சேஃப் கீழ் எத்தனை கேமராக்கள் வருகிறது?

ஏர்டெல் எக்ஸ்சேஃப் சேவையின் கீழ் இருந்து நீங்கள் எத்தனை கேமராவை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால், உங்களுக்கு நிறுவனம் மூன்று வகையான கேமராக்களை வழங்குகிறது. இதிலிருந்து உங்களுக்குத் தேவைப்படும் கேமராவை நீங்கள் வாங்கி பயன்பெறலாம். பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் எக்ஸ்சேஃப் சேவையின் கீழ் ஸ்டிக்கி கேம், 360 டிகிரி கேம் மற்றும் ஆக்டிவ் டிஃபென்ஸ் கேம் என்ற மூன்று கேமராக்களை வழங்குகிறது. இந்த மூன்று கேமராக்களும் வெவ்வேறு விலைப் புள்ளியில் வருகிறது.

ஏர்டெல் எக்ஸ்சேஃப் கேமராக்களின் விலை என்ன?

ஏர்டெல் எக்ஸ்சேஃப் கேமராக்களின் விலை என்ன?

ஏர்டெல் எக்ஸ்சேஃப் வழங்கும் முதல் நுழைவு நிலை கேமரா ஸ்டிக்கி கேம் என்ற கேமராவாகும். இந்த கேமரா உங்களுக்கு ரூ. 2499 விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கேமராக்களிலும் மிகவும் மலிவானது இந்த ஸ்டிக்கி கேம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பட்டியலில் அடுத்தபடியாக இருக்கும், 360 டிகிரி கேம் உங்களுக்கு ரூ. 2,999 விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இறுதியாகப் பட்டியலில் இருக்கும் கேமரா மாடல் என்றால், அது ஆக்டிவ் டிஃபென்ஸ் கேமராவாகும். இந்த கேமரா ஒவ்வொன்றும் ரூ. 4,499 என்ற விலையில் கிடைக்கிறது.

ஜியோ பம்பர் ரீசார்ஜ் திட்டம்: 1Gbps வேகத்தில் 6600GB டேட்டா.. Netflix, Prime Video மற்றும் Hotstar கூட இலவசம்ஜியோ பம்பர் ரீசார்ஜ் திட்டம்: 1Gbps வேகத்தில் 6600GB டேட்டா.. Netflix, Prime Video மற்றும் Hotstar கூட இலவசம்

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் உடன் வரும் சேவையா இது?

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் உடன் வரும் சேவையா இது?

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் எனப்படும் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைப் பிரிவையும் கொண்டுள்ளது. இந்தச் சேவையின் மூலம், பயனர்கள் தங்கள் கேமராக்கள் சிறப்பாகச் செயல்படுவதற்குத் தொடர்ச்சியான மற்றும் நம்பகமான இணைய இணைப்பு இருப்பதை உறுதிசெய்ய முடியும். இன்று உங்கள் பகுதியில் இந்தச் சேவை கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஏர்டெல் இதை நாட்டிலுள்ள அனைத்து நகரங்களுக்கும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.

மக்களின் கவனத்தை நிச்சயமாக இந்த Airtel Xsafe திட்டம் ஈர்க்குமா?

மக்களின் கவனத்தை நிச்சயமாக இந்த Airtel Xsafe திட்டம் ஈர்க்குமா?

டெல்லி பிராந்தியத்தில் ஏர்டெல் Xsafe இன் நம்பகத்தன்மையை டெல்கோ சோதனை செய்யத் தொடங்கியது. குறைந்தபட்சம் ஒரு கேமராவை வாங்காமல், நீங்கள் Airtel Xsafeஐ வாங்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். உண்மையில் உங்களுடைய வீடு பாதுகாப்பைப் பலப்படுத்த இப்படி ஒரு திட்டத்தை ஏர்டெல் அறிவித்திருப்பது சிறப்பான முடிவாகத் தெரிகிறது. மாதம் வெறும் ரூ. 99 செலவில் வீடு பாதுகாப்பிற்கு கேமரா கிடைக்கும் என்று சொன்னால் நம் மக்கள் வேண்டாம் என்றா சொல்லப்போகிறார்கள்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Keeping Users Safe For Only Rs 99 Per Month From Airtel Xsafe : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X