Just In
- 1 hr ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 hr ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 2 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
- 3 hrs ago
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
Don't Miss
- News
"அமெரிக்கா - சீனா இடையே பயங்கர போர்".. 2025-ல் நிச்சயம் நடக்கும்.. அமெரிக்க விமானப்படை தளபதி கணிப்பு
- Movies
போட்டோ, பெயர் பயன்படுத்த தடை... அப்ப மட்டும் இப்படி சொல்லலையே: ரஜினியிடம் கேள்வியெழுப்பிய பிரபலம்
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இனி ரூ.100/-க்குள் "எல்லா" நன்மைகளும் கிடைக்கும்; ஏர்டெல் அதிரடி திருத்தம்.!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/- ரீசார்ஜ் திட்டத்திற்கு சரியான நெருக்கடி கொடுக்கும் வண்ணம், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் ரூ.100/-க்கும் குறைவான மதிப்பின்கீழான திட்டமொன்றை திருத்தி அமைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.93/- ரீசார்ஜ் திருத்தப்பட்டுள்ளது. அதென்ன திருத்தம்.? இனி இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன.? செல்லுபடி காலம் என்ன.? இந்த திட்டம் எப்படி ஜியோவின் ரூ.98/- உடன் போட்டியிடுகிறது.? என்பதை விரிவாக காண்போம்.

வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி அழைப்புகள்
முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான பார்தி ஏர்டெல் ஆனது அதன் ரூ.93 /- என்கிற கட்டணத் திட்டத்தை தேர்ந்தெடுத்த பயனாளர்களுக்கு திருத்தியுள்ளதுடன் இப்போது வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி அழைப்புகள், 100 எஸ்எம்எஸ்களுடன் டேட்டா நன்மையையும் வழங்குகிறது.

28 நாட்களுக்கு செல்லுபடி
ரீசார்ஜ் செய்யப்பட்ட தேதி முதல் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது அதன் செல்லுபடிக்கலத்தில் 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம்.

கிடைக்கும்தன்மை
இருப்பினும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள பெரும்பான்மையான பயனர்கள் இந்த கட்டண திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக உள்ளனர். மறுகையில் தில்லி, மும்பை மற்றும் பல வட்டாரங்களில் இதன் கிடைக்கும்தன்மையை பரிசோதித்தபோது தேர்ந்தெடுத்த பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

ஏர்டெல் இணையதளத்தில் மட்டுமே
எந்தவொரு வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும் இந்த ஏர்டெல் ரூ.93/- ஆனது ஏர்டெல் இணையதளத்தில் மட்டுமே காணப்படுகிறது. துரதிருஷ்டவசமாக, மைஏர்டெல் பயன்பாட்டில் காணப்படவில்லை.

இரண்டு மடங்கு டேட்டா
இந்த நடவடிக்கையானது ரிலையன்ஸ் ஜியோவின் சமீபத்திய நுழைவு நிலை திட்டமான ரூ.98/-க்கு எதிரானது என்பது வெளிப்படை. ஜியோவின் ரூ.98/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில் 2 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கி வருகிறது. அதாவது ஏர்டெல் ரூ.93/-ஐ விட இரண்டு மடங்கு டேட்டா வழங்குகிறது.

மைபிளான் இன்பினிட்டி திட்டங்களில் மீண்டும் அதிரடியான திருத்தம்
சமீபத்தில் பார்தி ஏர்டெல் தனது பிரபலமான மைபிளான் இன்பினிட்டி திட்டங்களில் மீண்டும் அதிரடியான திருத்தங்களை நிகழ்த்தியது. திருத்தம் கண்டுள்ள நான்கு மைபிளான் இன்பினிட்டி திட்டங்களில் ரூ.399/- கட்டணத் திட்டத்தை தவிர, மீதமுள்ள மூன்று திட்டங்களிலும் முன்பை விட மிகவும் சிறந்த தரவு நன்மைகளை வழங்கும்படி திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டன.

வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்பு
ஏர்டெல் ரூ.399/- திட்டமானது, அதன் தரவு மற்றும் குரல் அழைப்பு நலன்கள் என இரண்டு வகை நன்மைகளிலுமே திருத்தம் கண்டுள்ளது. இனி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399/- போஸ்ட்பெயிட் ஆனது மொத்தம் 20 ஜிபி அளவிலான டேட்டா உடன் வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்புகளையும் வழங்குகிறது.

20 ஜிபி
முதலில் இதே திட்டம் மாதத்திற்கு10 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற உள்வரும் ரோமிங் அழைப்புகளிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள நன்மைகளை வழங்கும்படி மாற்றப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரூ.399/- ஆனது அதன் ஒரு பில்லிங் சுழற்சிக்கு 20 ஜிபி தரவு, வரம்பற்ற உள்வரும், மற்றும் எந்த வரம்பும் இல்லாத ரோமிங் அழைப்புகளையும் வழங்கும். இருப்பினும் துரதிருஷ்டவசமாக, ரூ.399/- ஆனது அமேசான் பிரதம சந்தா போன்ற பிற நன்மைகள், இலவச ஆட்-ஆன்ஸ போன்ற நன்மைகளை வழங்கவில்லை.

90ஜிபி
திருத்தம் கண்டுள்ள மற்ற திட்டங்களைப் பற்றி பேசும்போது, ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499/- ஆனது இப்போது அதன் பில்லிங் சுழற்சியின் கீழ் 40ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.799/- என்கிற கட்டணத் திட்டமானது தற்போது 60ஜிபி தரவும் மற்றும் ரூ.1199/- என்கிற பெரிய பட்ஜெட் திட்டமானது தற்போது 90ஜிபி அளவிலான தரவும் வழங்குகிறது. இது முன்னர் 75ஜிபி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

300ஜிபி
திருத்தங்கள் தவிர்த்து, ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1,599/- என்கிற பிரீமியம் திட்டமானது அதன் பில்லிங் சுழற்சியில் 150 ஜிபி தரவு கொடுக்கிறது மற்றும் ரூ.1,999/- ஆனது 200ஜிபு தரவை வழங்குகிறது. இறுதியாக, ரூ.2,999/- என்கிற திட்டமானது ஒரு நம்பமுடியாத 300ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது.

வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார்
திருத்தங்கள் பெற்றதின் விளைவாக தொலைதொடர்புத் துறையிலுள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்களைவிட சிறந்த தரவு நன்மைகளை ஏர்டெல் வழங்கி வருகிறது. இருப்பினும் விரைவில், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவைகளையும் ஏர்டெல் உடன் பொருந்துமாறு தங்கள் பட்ஜெட் திட்டங்களை மாற்றியமைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இலவச அமேசான் ப்ரைம் சந்தா
இந்தத் திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இலவச அமேசான் ப்ரைம் சந்தா (முன்னர் குறிப்பிட்டபடி ரூ.399 திட்டம் தவிர), இலவச ஆட் ஆன்ஸ் (ரூ.799/- திட்டம் மற்றும் அதற்கு மேலான திட்டங்களில்) ஆகியவற்றையும் வழங்குகின்றன.

புதிய பயனர்களுக்கு மட்டுமே இருக்குமென்பது போலும் தெரிகிறது
ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளத்தில் ரூ.399/- திட்டத்திற்கான வரம்பற்ற வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகள் பற்றிய விருப்பம் காட்டப்படவில்லை, ஆனால் மைஏர்டெல் பயன்பாட்டில் காட்டுகிறது. மேலும் இந்த புதிய மாற்றம் நெட்வொர்க்கில் சேரும் புதிய பயனர்களுக்கு மட்டுமே இருக்குமென்பது போலும் தெரிகிறது.

உறுதிப்படுத்தலுக்காக நாம் காத்திருக்க வேண்டும்
ஆக ஏர்டெல் நிறுவனத்திலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலுக்காக நாம் காத்திருக்க வேண்டும். மேலும் அது சார்த்த தகவல் மற்றும் இதர டெலிகாம் நிறுவனங்களின் அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் வலைதளதத்துடன் இணைந்திருக்கவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470