18 மாதங்களுக்கு முன் ரூ.255/-க்கு; இப்போது வெறும் ரூ.98/-க்கு.! ஏர்டெல் ஆடிய ஆட்டமென்ன.?!

|

டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு இடையேயான கட்டண யுத்தமானது - மிகவும் வேகமான முறையில் - உச்சகட்டத்தை எட்டுகிறது என்றே கூறலாம். அதற்கு அனுதினமும் புத்தம் புதிய விலையில், போட்டித்தனமாய் மிக்க புதிய திட்டங்கள் அறிமுகமாகிக்கொண்டே வருவதே சாட்சியாகும்.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராக என்னதான் ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் அவர்களுக்கே உரிய திட்டங்களை அறிவித்தாலும் கூட ஒவ்வொரு முறையும், பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு வெற்றியாளராகவே திகழ்கிறது.

புதிய மற்றும் மிகவும் ஈர்க்கக்கூடிய கட்டண திட்டம்.!

புதிய மற்றும் மிகவும் ஈர்க்கக்கூடிய கட்டண திட்டம்.!

அதற்கு மேலுமொரு எடுத்துக்காட்டாய் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் ஒரு புதிய மற்றும் மிகவும் ஈர்க்கக்கூடிய கட்டண திட்டமொன்றை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

ரூ.98/- திட்டத்தை அறிவித்துள்ளது

ரூ.98/- திட்டத்தை அறிவித்துள்ளது

இந்த புதிய திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனமானது 5ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை ரூ.100/-க்கும் குறைவான விலை நிர்ணயத்தில் வழங்குகிறதென்பது கூடுதல் சிறப்பம்சம். அதாவது ஏர்டெல் அதன் ரூ.98/- திட்டத்தை அறிவித்துள்ளது.

5 ஜிபி அளவிலான டேட்டா

5 ஜிபி அளவிலான டேட்டா

ப்ரீபெய்ட் தரவுத் திட்டமான ரூ,98/- ஆனது ரீசார்ஜ் செய்த நாளில் இருந்து மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். நன்மைகளை பொறுத்தமட்டில் இந்த திட்டம் 5 ஜிபி அளவிலான டேட்டாவை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது.

குரல் அழைப்பு சலுகையும் வழங்காது

குரல் அழைப்பு சலுகையும் வழங்காது

18 மாதங்களுக்கு முன்பு, இதே அளவிலான டேட்டா சுமார் ரூ.255/- ஆக இருந்தது என்பதையும் இது ஒரு தரவு-நன்மை மட்டுமே வழங்கும் திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த ரூ.98/- ஆனது எந்தவிதமான குரல் அழைப்பு சலுகையும் வழங்காது என்று அர்த்தம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே

தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே

வழக்கம் போல், இந்த ரூ,98/- ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. தற்போது வரையிலாக இந்த திட்டம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் கிடைப்பதை டெலிகாம்டால்க். இன்ஃபோ உறுதி செய்துள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
ஐந்து முறைக்கு மேல் ரீசார்ஜ் செய்ய முடியாது

ஐந்து முறைக்கு மேல் ரீசார்ஜ் செய்ய முடியாது

மேலும் இந்த திட்டத்தை ஒரு எண்ணில் ஐந்து முறைக்கு மேல் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதும், அதுவே டெல்லி வட்டத்தரத்தில் ஒரு முறை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் செய்திகளுடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel is Offering 5GB of Data for Prepaid Subscribers Under Rs 100 for 28 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X