Home
News

ஏர்டெல் வழங்கும் 30 ஜிபி ப்ரீ டேட்டா; யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

பார்தி ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தையும், டிவி விளம்பரத்தையும் அறிவித்துள்ளது

By Muthuraj

பார்தி ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தையும், டிவி விளம்பரத்தையும் அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 1 ஜிபி டேட்டா என்கிற கணக்கில் மொத்தம் 30 நாட்களுக்கு 30 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். மறுகையில் உள்ள ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பில்லிங் சுழற்சியின் கீழ் மொத்தமாக 30 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

ஏர்டெல் வழங்கும் 30 ஜிபி ப்ரீ டேட்டா; யாருக்கெல்லாம் கிடைக்கும்.?

இந்த வாய்ப்பின் சிறந்த பகுதியாக டேட்டா ரோல் ஓவர் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது முதல் பில்லிங் சுழற்சியில் பயன்படுத்தப்படாத டேட்டாவை அடுத்த அடுத்த மாத சுழற்சிக்கு பரிமாற்றிக் கொள்ளலாம். சரி இந்த வாய்ப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்.? இதை அணுகி 30ஜிபி அளவிலான இலவச டேட்டாவை பெறுவது எப்படி.?

​30 ஜிபி அளவிலான இலவச டேட்டா.!

​30 ஜிபி அளவிலான இலவச டேட்டா.!

ஏர்டெல் அறிவித்துள்ள இந்த விளம்பர திட்டத்தின் வழியாக, ஒரு ஏர்டெல் பயனர் தன்னை 4ஜி ஸ்மார்ட்போனிற்கு மேம்படுத்தி கொள்வதின் வழியாக ஏர்டெல் நிறுவனம் வழங்கும் 30ஜிபி அளவிலான இலவச டேட்டாவை பெற முடியும். எளிமையான வார்த்தையில், 2ஜி அல்லது 3ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பயனர்கள், 4ஜி ஸ்மார்ட்போனிற்கு மாறும்போது​, ஏர்டெல் வழங்கும் ​30 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை அணுகும் வாய்ப்பை பெறுவார்கள்.

இலவச எண் 51111-ஐ என்பதை டயல் செய்யவும்.!

இலவச எண் 51111-ஐ என்பதை டயல் செய்யவும்.!

ஒரு தொலைக்காட்சி விளம்பர உருவத்தில், பரந்தளவில் விளம்பரப்படுத்தப்படும் இந்த ஏர்டெல் வாய்ப்பை பெறுவதற்கான தகுதி உங்களிடம் உள்ளதா என்பதை கண்டறிய ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் / ப்ரீபெயிட் வாடிக்கையாளர்கள், இலவச எண் 51111-ஐ என்பதை டயல் செய்வதின் அறிந்துகொள்ள முடியும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
கோரிக்கை ஏற்கப்பட்ட 24 மணி நேரத்தில் ப்ரீ டேட்டா கிடைக்கும்.!

கோரிக்கை ஏற்கப்பட்ட 24 மணி நேரத்தில் ப்ரீ டேட்டா கிடைக்கும்.!

அல்லது மைஏர்டெல் பயன்பாடு வழியாக குறிப்பிடப்பட்டுள்ள இலவச டேட்டா நன்மைகளை கோரலாம். தகுதியானவர்களுகளின் கோரிக்கை ஏற்கப்பட்ட 24 மணி நேரத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் 30 ஜிபி ப்ரீ டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேரா பெஹலா ஸ்மார்ட்போன் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.!

மேரா பெஹலா ஸ்மார்ட்போன் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.!

இந்த 30 ஜிபி ப்ரீ டேட்டா திட்டமானது, ஏர்டெல் நிறுவனத்தின் மேரா பெஹலா ஸ்மார்ட்போன் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதும், மேரா பெஹலா ஸ்மார்ட்போன் திட்டமானது பல்வேறு மொபைல் பிராண்டுகளுடன் இணைந்து ஏர்டெல் நிறுவனம் பணியாற்றி வரும் ஒரு திட்டமாகும் என்பதும், பார்தி ஏர்டெல் நிறுவனமானது ஏற்கனவே சாம்சங், இன்டெக்ஸ், கார்பன், லாவா, செல்கோன், மோட்டோரோலா, லெனோவா, நோக்கியா, ஐடெல், ஜென் மற்றும் லெபோன் உடன் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel is Offering 30GB Free Data for Users Upgrading to 4G Smartphones. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X