ஏர்டெல் வழங்கும் ரூ. 6000 மதிப்புள்ள நன்மைகள்.. நிபந்தனைகளை படிக்க மறக்காதீர்கள் அதான் முக்கியமே..

|

பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியில் மும்முரமாகக் களமிறங்கி வருகிறது. பண்டிகை காலம் நெருங்குவதை முன்னிட்டு இந்தியாவில் ஏராளமான விற்பனைகள் சிறப்புத் தள்ளுபடியுடன் நடைபெற துவங்கியுள்ளது. இப்போது, ஏர்டெல் நிறுவனமும் அதன் சலுகையைத் தனது பயனர்களுக்காக தற்போது அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தற்போது அதன் பயனர்களுக்கு ரூ. 12,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ .6,000 மதிப்புள்ள நன்மைகளை வழங்குகிறது.

150 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுடன் அபார விற்பனை

150 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுடன் அபார விற்பனை

ஏர்டெல் பயனர்களுக்கு இந்த நன்மையை வழங்குவதற்காக முன்னணி பிராண்டுகளின் 150-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர் தனது தரப்பிலிருந்து சந்திக்க வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளன. சலுகை பொருந்தும் வகையில், புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர் ரூ .249 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள நிறுவனத்தில் ப்ரீபெய்ட் பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் 36 மாதங்கள் (3 ஆண்டுகள்) வரை தொடர்ந்து நடக்க வேண்டும்.

ரூ. 6,000 நன்மையை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ரூ. 6,000 நன்மையை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பாரதி ஏர்டெல் 3 ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக ரூ. 6,000 நன்மையை உங்களுக்கு வழங்குகிறது. பாரதி ஏர்டெல் 36 மாத காலப் பகுதியில் சுமார் 6,000 ரூபாய் கேஷ்பேக் நன்மையை இரண்டு பகுதிகளாக வழங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாகப் பயனர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் ரூ. 249 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ப்ரீபெய்ட் பேக் மூலம் 18 மாதங்கள் தொடர்ச்சியான ரீசார்ஜ்களை முடிக்கும்போது ரூ .2,000 முதல் கேஷ்பேக் வழங்கப்படும்.

வாட்ஸ்அப்பிற்கு நேரம் சரியில்லை.. டெலிகிராமுக்கு குரு உச்சத்தில இருக்கு.. ஒரே நாளில் 70 மில்லியன் பயனர்கள்..வாட்ஸ்அப்பிற்கு நேரம் சரியில்லை.. டெலிகிராமுக்கு குரு உச்சத்தில இருக்கு.. ஒரே நாளில் 70 மில்லியன் பயனர்கள்..

கூடுதலாக ரூ. 4,800 மதிப்புள்ள டிஸ்பிளே மாற்று நன்மையையும் கிடைக்கிறதா?

கூடுதலாக ரூ. 4,800 மதிப்புள்ள டிஸ்பிளே மாற்று நன்மையையும் கிடைக்கிறதா?

மேலும், ரூ. 49,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 36 மாதங்கள் ரீசார்ஜ் செய்யும் காலத்தை முடித்தவுடன் பயனர்களுக்கு ரூ. 4,000 என்ற எஞ்சிய தொகை வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதுமட்டுமின்றி, ஏர்டெல் ரூ. 4,800 மதிப்புள்ள இலவச டிஸ்பிளே மாற்று நன்மையையும் வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. ரூ. 12,000-க்கு கீழ் அல்லது அதற்கு மேல் விலை கொண்ட ஸ்மார்ட்போனுக்கு டிஸ்பிளேவை பெறுவதற்கான தோராயமான செலவு ரூ. 4,800 ஆகும்.

ஏர்டெல் தேங்க்ஸ் உடன் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஏர்டெல் தேங்க்ஸ் உடன் கிடைக்கும் நன்மைகள் என்ன?

பாரதி ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் பேக்குகளுடன், பயனர்களுக்கு இலவச ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளைப் பெற உரிமை உண்டு, இதில் இலவச வின்க் மியூசிக் சந்தா, அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு ஒரு மாதத்திற்கான இலவச சோதனை மற்றும் பாஸ்ட் டேக் கேஷ் பேக் நன்மை போன்ற பல இலவச நன்மைகள் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் கேஷ்பேக் நன்மையை வழங்க, பாரதி ஏர்டெல் இந்தியாவின் சில முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் ஏர்டெல் கூட்டுச் சேர்ந்துள்ளது.

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்- விண்கலத்தை அனுப்பி சிறுகோளை திசை திருப்பும் நாசா: டார்ட் ஆரம்பம்!பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்- விண்கலத்தை அனுப்பி சிறுகோளை திசை திருப்பும் நாசா: டார்ட் ஆரம்பம்!

எந்த பிராண்டின் ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையின் கீழ் கிடைக்கிறது?

எந்த பிராண்டின் ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையின் கீழ் கிடைக்கிறது?

இந்த ஸ்மார்ட்போன் சலுகை நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயை ஊக்குவிக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இந்த பட்டியலில் சாம்சங், சியோமி, விவோ, ஒப்போ, ரியல்மி, நோக்கியா, ஐடெல், லாவா, இன்பினிக்ஸ், டெக்னோ, லெனோவா மற்றும் மோட்டோரோலா போன்ற முன்னணி நிறுவனங்களின் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வாங்குவதற்கு கிடைக்கிறது.

இந்த 12 பிராண்ட் இல் உங்கள் தேர்வு எது?

இந்த 12 பிராண்ட் இல் உங்கள் தேர்வு எது?

இந்த 12 பிராண்ட்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமான பிராண்டை தேர்வு செய்து, அதிலிருந்து உங்களுக்குப் பிடித்த புதிய பிராண்ட் ஸ்மார்ட்போன் மாடல்களை வாங்கி பயன்பெறுங்கள். மேலும் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்போன் தொடர்பான செய்திகளுக்கு எங்களின் கிஸ்பாட் பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Is Now Offering Up to Rs 6000 Benefits With Purchasing New Smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X