ஏர்டெல் அதிரடி: வெறும் ரூ.9/-க்கு அன்லிமிடெட் நன்மைகள்; என்ஜாய் ஏர்டெல் வாசிகளே.!

இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் ஆனது, வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு.

|

சமீபத்தில் அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் இரண்டு மினி ரீசார்ஜ் தொகுப்புகளை அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து நிச்சயமாக பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார் அல்லது ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களும் அதே மாதிரியான ஒரு நாள் செல்லுபடியாகும் "மினி பேக்" திட்டங்களை அறிமுகப்படுத்துமென்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏர்டெல் அதிரடி: வெறும் ரூ.9/-க்கு அன்லிமிடெட் நன்மைகள்; என்ஜாய்.!

அந்த எதிர்பார்ப்பை சற்றும் குறை இல்லாமல் தீர்த்து வைத்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல். அதோடு மட்டுமின்றி பிஎஸ்என்எல்-ன் மினி ரீசார்ஜ் திட்டங்களை, ஏர்டெல் அறிவித்துள்ள ரூ.9/- திட்டமானது ஒன்றுமில்லாமல் செய்து விட்டது என்றே கூறலாம்.

ஏர்டெல் ரூ.9

ஏர்டெல் ரூ.9

ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் ப்ராமீஸ் திட்டத்தின் கீழ் ரூ.9/- என்கிற ஒரு நுழைவுநிலை திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19/- உடனும் போட்டியிடுகிறது மற்றும் நேற்று அறிமுகமான பிஎஸ்என்எல்-ன் ரூ.7/- மற்றும் ரூ.16/- உடனும் போட்டியிடுகிறது.

செல்லுபடி

செல்லுபடி

இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் ஆனது, வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு உடன் 100 எஸ்எம்எஸ்களையும் மற்றும் 100 எம்பி டேட்டாவையும் வழங்குகிறது.இந்த திட்டம் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோவை விட கூடுதலாக 80 எஸ்எம்எஸ்

ஜியோவை விட கூடுதலாக 80 எஸ்எம்எஸ்

இந்த புதிய திட்டமானது, வரம்பற்ற அழைப்புகள், 20 எஸ்எம்எஸ் மற்றும் 150எம்பி அளவிலான டேட்டாவை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.19/- திட்டத்தை தாக்குகிறது. ஜியோவின் ரூ.19/- ஆனது கூடுதலாக 50எம்பி அளவிலான தரவை வழங்கும் மறுகையில், ஏர்டெல் ஆனது அதன் ரூ.9/-ன் கீழ் ஜியோவை விட கூடுதலாக 80 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும்

ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும்

எல்லாவற்றிக்கும் மேலாக ஏர்டெல் நிறுவனத்திலிருந்து வரும் இந்த புதிய திட்டம் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும். அதாவது ஏர்டெல் அதன் செயல்பாடுகளை கொண்டுள்ள அனைத்து வட்டங்களிலும் இந்த திட்டம் கிடைக்கும் என்று பொருள்.

காம்போ ஆஃபர் பிரிவின் கீழ்

காம்போ ஆஃபர் பிரிவின் கீழ்

மும்பை, டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் இந்த ரூ.9/- என்கிற ரீசார்ஜ் அணுக கிடைக்கிறது. ஏர்டெல் வலைத்தளமானது காம்போ ஆஃபர் பிரிவின் கீழ் அனைத்து வட்டங்களிலும் இந்த புதிய கட்டணத் திட்டத்தை காட்சிப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.19

ஏர்டெல் ரூ.19

ரிலையன்ஸ் ஜியோவை போன்றே, பார்தி ஏர்டெல் நிறுவனமும் ரூ.19/- என்கிற கட்டணத் திட்டத்தை கொண்டுள்ளது. அந்த திட்டமானதும் ஒரு நாள் செல்லுபடியாக்கலுடன் அனைத்து கைபேசிகளுக்கான ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 200எம்பி அளவிலான 3ஜி / 4ஜி தரவு ஆகிய நன்மைகளை வழங்குகிறது

ஏர்டெல் ரூ.23

ஏர்டெல் ரூ.23

ஏர்டெல் ரூ.19/ திட்டமும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும். மற்றொரு திறந்தவெளி சந்தை திட்டம்ஜன ஏர்டெல் ரூ.23/- ஆனது அனைத்து கைபேசிகளுக்கான ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் 100எம்பி அளவிலான 3ஜி / 4ஜி தரவு ஆகிய நன்மைகளை இரண்டு நாட்களுக்கு வழங்குகிறது

பிஎஸ்என்எல் மினி ரீசார்ஜ்

பிஎஸ்என்எல் மினி ரீசார்ஜ்

நேற்று அறிவிக்கப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இரண்டு திட்டங்களுமே அதிவேக 3ஜி இணையத்தை வழங்கும் திட்டங்களாகும். அவைகள் ரூ.7 மற்றும் ரூ.16/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன.

மினி ரீசார்ஜ் ரூ.7/-ன் நன்மைகள்

மினி ரீசார்ஜ் ரூ.7/-ன் நன்மைகள்

நன்மைகளை பொறுத்தமட்டில், பிஎஸ்என்எல் ரூ.7/- ப்ரீபெய்ட் திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளிற்கு செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான இணைய தரவை வழங்கும். இதை தவிர இந்த பேக் வேறெந்த நன்மையையும் வழங்காது. மினி ரீசார்ஜ் ஆன ரூ.7/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.9/- வரை விலை மாற்றம் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மினி ரீசார்ஜ் ரூ.16/-ன் நன்மைகள்

மினி ரீசார்ஜ் ரூ.16/-ன் நன்மைகள்

இரண்டாவதாக, பிஎஸ்என்எல் ரூ.16/- ஆனதும் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் 2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவையு வழங்குகிறது. இமினி ரீசார்ஜ் ஆன ரூ.16/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.19/- வரை விலை மாற்றம் பெறலாம்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
1ஜிபி மற்றும் 2ஜிபி

1ஜிபி மற்றும் 2ஜிபி

இணைய பயன்பாட்டை மிகவும் குறைவாக கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த மினி திட்டங்கள் சிறந்த தேர்வாகும். மற்றும் தங்களது தினசரி இணைய வரம்புகள் தீர்ந்து கூடுதல் தரவு தேடும் பயனர்களுக்கு இந்த மினி பொதிகள் பயனளிக்கும்.
மிகவும் மலிவான விலையின்கீழ் 1ஜிபி மற்றும் 2ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல்-ன் இந்த மினி தொகுப்புகளை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ அல்லது பார்தி ஏர்டெல் நிறுவனமும் மினி தொகுப்புகளை அறிவிக்கலாம்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Intros Rs 9 Prepaid Tariff Plan With Unlimited Roaming Calls, 100 SMS and 100MB Data for One Day. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X