அறிமுகம் : ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?
ஜியோ நிறுவனத்தின் ரூ.509/-திட்டதில் தினசரி 5ஜிபி வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ஜியோவிற்கு போட்டியா ஏர்டெல் நிறுவனம் கடந்த சில நாட்களில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு திட்டம் பல்வேறு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் ரூ. 149-/ திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100ஜிபி டேட்டா போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் ரூ.149/- திட்டத்தில் மொத்தமாக 42ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட்:
ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 82 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 246ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ:
ஜியோ நிறுவனத்தின் ரூ.509/-திட்டதில் தினசரி 5ஜிபி வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன்:
வோடபோன் நிறுவனம் ரூ.569/-திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா
வீதம் 84நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.249/- திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுவந்தது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.448/- திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.448/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 114.8ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.449/- திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 164ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள்,
ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏர்டெல் ரூ.509/- திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.509/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 90நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 126ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications