Home
News

அறிமுகம் : ஏர்டெல் ரூ.219/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?

இந்த திட்டமானது ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் திறந்தவெளி சந்தை திட்டமான ரூ.199/- ப்ரீபெய்ட்டின் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் ரூ.219/- என்கிற புதிய ப்ரீபெய்ட் கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் திறந்தவெளி சந்தை திட்டமான ரூ.199/- ப்ரீபெய்ட்டின் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஏர்டெல் ரூ.199/-ன் அதே டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளுடன் சேர்த்து, கூடுதலாக இந்த ரூ.219/-ன் கீழ் வரம்பற்ற ஹலோ ட்யூன்ஸ் சலுகையும் கிடைக்கும். இதனை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு ஹலோ டியூன் அமைக்க முடியும்.

செல்லுபடியாகும் காலம்.?

செல்லுபடியாகும் காலம்.?

ஒட்டுமொத்த நன்மைகளை பொறுத்தவரை, ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அனைத்து புதிய ரூ.219/- ப்ரீபெய்ட் திட்டமானது, ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற வாய்ஸ் நன்மைகளை மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்குகிறது.

மொத்தம் 39.2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.!

மொத்தம் 39.2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.!

காம்போ நன்மைகளை தவிர்த்து (டேட்டா மற்றும் வாய்ஸ்) இந்த ரூ.219/- ஆனது தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் மேற்குறிப்பிட்டப்படி ஏர்டெல் ஹலோ ட்யூன் சந்தாவையும் வழங்கும். செல்லுபடியாகும் மொத்தம் காலமான 28 நாட்களில் இந்த திட்டத்தின் வழியாக 39.2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது.!

இரண்டு ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது.!

ஏர்டெல் நிறுவனம் அதன் ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களை தனித்தனியாகவும் வழங்கி வருகிறது. ஏர்டெல் தற்போது ரூ.36/- மற்றும் ரூ.146/- ஆகிய இரண்டு ஹலோ ட்யூன் சந்தா திட்டங்களைக் கொண்டுள்ளது. ரூ.36/- திட்டமானது, 28 நாட்கள் ஹலோ டியூன் சந்தாவை வழங்குகிறது. இதை ரீசார்ஜ் செய்ய ஏர்டெல் பயனர்கள் எந்தவொரு ஏர்டெல் ரீசார்ஜ் போர்ட்டிற்கும் செல்லலாம்.

ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம்.!

ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம்.!

தற்போது ரூ.219/- வழியாக ஏர்டெல் அதன் ஹலோ ட்யூன் சந்தா திட்டத்தை வரம்பற்ற காம்போ திட்டத்தினுள் இணைத்துள்ளது. ஹலோ ட்யூன் சந்தா தேவை இல்லை என்று கூறும் ஏர்டெல் பயனாளர்கள், ரூ.199/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் செல்லலாம். இது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பிற்குட்பட்ட குரல் அழைப்புகளையும், நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.!

3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா.!

முன்னதாக ஏர்டெல் அதன் ரூ.49/- திட்டத்தை அறிமுகம் செய்து இருந்தது. மொத்தம் 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் இந்த திட்டமானது ஒரு நாள் மட்டுமே என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்மையானது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்பதும், மற்ற பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஏர்டெல் சந்தாதாரர்கள் 'மைஏர்டெல்' பயன்பாடு அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்நுழைந்து, திட்டத்தின் செல்லுபடியை சரிபார்க்க மொபைல் எண்ணை உள்ளிடவும். உங்கள் எண் தகுதியானதாக இருக்கும் பட்சத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.

ஜியோவின் ரூ.49/-ன் நன்மைகள்.!

ஜியோவின் ரூ.49/-ன் நன்மைகள்.!

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.49/- ஆனது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.49/- திட்டத்திற்கு கடுமையான போராட்டத்தை வழங்குவதாக உள்ளது. ரிலைன்ஸ் ஜியோவின் ரூ.49/- என்கிற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, வெறும் 1ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஆனால் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. மற்றும் இந்த திட்டமானது ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Intros Rs 219 Prepaid Plan With Unlimited Calling and 39.2GB Data. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X