பைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்! ஜியோவுடன் போட்டியா?

நாட்டின் ப்ராட்பேண்ட் செயல்பாடுகளை ஊக்குவித்து, இந்தாண்டு ஒயர் கனெக்சன்களின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்தவுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த வருடத்தில் தனது பைபர் ப்ராட்பேண்ட் பிரிவை இருமடங்காக்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்-ம் அதிலிருந்து பின்வாங்கவில்லை. நாட்டின் ப்ராட்பேண்ட் செயல்பாடுகளை ஊக்குவித்து, இந்தாண்டு ஒயர் கனெக்சன்களின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்தவுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்! ஜியோவுடன் போட்டியா?

இந்த லட்சியத்தை அடைந்திடும் வகையில், ஒயர்டு துறையில் மிக அதிக முதலீடுகளை செய்யவுள்ளது ஏர்டெல். " ஹோம் ப்ராட்பேண்டிற்கான முதலீடுகளை அதிகரித்துள்ளோம். ஆண்டிற்கு 4,00,000 முதல் 5,00,000 வீடுகளுக்கு இணைப்பை வழங்குவோம். கடந்த வருடம் 2 மில்லியன் வீடுகளுக்கு ப்ராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது" என்கிறார் அந்நிறுவன அதிகாரி. இந்த வளர்ச்சியை தொடரும் விதத்தில், 2018-19 ஆம் ஆண்டில் 2 முதல் 4 மில்லியன் வீடுகள் இலக்காக வைக்கப்பட்டுள்ளன.

பைபரை வீடுகளுக்கு பகிரும் போது, ஆப்டிகல் பைபரை பயன்படுத்தி ஒவ்வொரு வாடிக்கையாளரின் வீட்டிற்கும் தனித்தனியாக பைபர் இணைப்பு வழங்குவதை ஹோம் பாஸ் என அழைக்கிறோம். டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முதன்மையான சந்தையை குறிவைத்து , இந்த ஹோம் பாஸை இருமடங்காக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவும் இந்த விளையாட்டில் ஏற்கனவே குதித்துவிட்டதால், இந்த போட்டியாளர்கள் பயனருக்கான சராசரி வருவாயில் (Average Revenue Per User) வீழ்ச்சியை சந்திக்கவுள்ளன.அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் முன்னோடி எனக் கூறிக்கொள்ளும் ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே மும்பை மற்றும் புது டெல்லியில் இந்த சேவைக்கான பரிசோதனையை துவங்கிவிட்டது. இவ்விரு நகரங்களிலும் வீட்டு இணைப்பிற்கான பாதுகாப்பு கட்டணமாக ரூ4,500 வசூலித்துள்ளது ஜியோ.

ஏர்டெல் நிறுவனம் இதுவரையில் ஹோம் ப்ராட்பேண்ட் -ல் குறைந்தபட்ச முதலீடே செய்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதலான 4 பில்லியன் டாலரில், இத்துறைக்கான முதலீடு சில நூறு கோடிகளே!

பைபர் ப்ராட்பேண்டை விரிவாக்கும் ஏர்டெல்! ஜியோவுடன் போட்டியா?


நடப்பு புள்ளிவிவரங்களின் படி, ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் 89 நகரங்களில் உள்ள 2.1 மில்லியன் பயனர்களுக்கு 100Mbps வேகத்தில் ப்ராட்பேண்ட் இணைப்பு தருகிறது. கடந்த காலாண்டில் ஹோம் சர்வீஸ் துறையில் , பயனருக்கான சராசரி வருவாயாக ரூ929 பெற்று 12.6% வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஏர்டெல். மேலும் ஹோம் சர்வீஸில் உள்ள 94% வாடிக்கையாளர்கள் ஏர்டெல் ப்ராட்பேண்ட் பயனர்கள் ஆவர்.

ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் ரூ2,990க்கு 300 Mbps வேகத்தில் 1200GB டேட்டா தரும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்கள் விங்க் மியுசிக் மற்றும் ஏர்டெல் டிவி போன்ற செயலிகளை இலவசமாக பயன்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Intensifies Fibre Broadband Expansion to Compete with Jio ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X