இனி டவர் பிரச்சனை இல்லை: ஏர்டெல் 12000 மொபைல் கோபுரங்களை அமைக்க திட்டம்.!
ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 82 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 246ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போட்டியாக அதிகமான மொபைல் கோபுரங்களை இந்தியாவில் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்சமயம் புதிய ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனம் 2018-19ம் ஆண்டில் 12,000 மொபைல் கோபுரங்களை அமைக்கும் எனத் தெரிவித்துள்ளது, குறிப்பாக மிக விரைவில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்வொர்க்
இந்த திட்டத்தின் மூலம். தமிழ்நாட்டிலுள்ள ஏர்டெல் மொபைல் போன் (கோபுரங்கள்) எண்ணிக்கை 30 சதவீதம் முதல் 52,000 வரை உயர்ந்து,
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை சேர்க்கும்.

தமிழ்நாட்டில் :
புராஜெக்ட் லீப்பின் ஒரு பகுதியாக, எங்கள் நெட்வொர்க் மாற்றம் முன்முயற்சியுடன், நாம் ஒரு உலகளாவிய சிறந்த திட்டத்தை கட்டமைப்பதில்
முதலீடுகளைத் (கோபுரங்கள்) தொடர்வோம். இந்த முதலீடுகள் தமிழ்நாட்டில் எங்கள் வலுவான உறுதிப்பாட்டை அடிக்கோடிடுகின்றன,
"என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் முரளி கூறினார்.

23 மில்லியன்
பார்தி ஏர்டெல் நிறுவனம் 23 மில்லியன் வாடிக்கையாளர்களை தமிழ்நாட்டில் கொண்டுள்ளது, மேலும் தற்சமயம் பல்வேறு புதிய திட்டங்களை
அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட்:
ஏர்டெல் ரூ.558/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 82 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்,
மொத்தமாக 246ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும்
தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.249/- திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுவந்தது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம்
28நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.448/- திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.448/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 114.8ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications