Airtel to Jio: ஜம்ப் அடிக்கும் பயனர்கள்! மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்பு!

|

இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்கள் கட்டண முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டு அதன் திட்டங்களின் விலையை அதிகரித்தது. இந்த கட்டண உயர்வினால் இம்முறை பெரிய அளவிலான இழப்பு ஏர்டெல் தலையில் விழுந்துள்ளது.

சுமார் 1,035 கோடி ரூபாய் இழப்பு

சுமார் 1,035 கோடி ரூபாய் இழப்பு

ஆம், பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது மூன்றாம் காலாண்டில் சுமார் 1,035 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இதனால் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் சற்று கடுப்பில் இருக்கிறார். இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைமை அதிகாரியானஅம்பானி, இதனால் சற்று ஹேப்பி தான் என்று வட்டாரம் சொல்கிறது.

அதிகரிப்பு லாபம் இருந்தும் இழப்பு கண்ட ஏர்டெல்

அதிகரிப்பு லாபம் இருந்தும் இழப்பு கண்ட ஏர்டெல்

பாரதி ஏர்டெல் நிறுவனம், 4 ஜி பயனர்கள் மற்றும் தரவு போக்குவரத்தில் மிக உயர்ந்த காலாண்டு அதிகரிப்பு லாபத்தைக் கண்டுள்ளது. இருப்பினும், பாரதி ஏர்டெல் நிறுவனம், தனது மூன்றாம் காலாண்டில் சுமார் 1,035 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இதனால் இழப்புகள் காரணமாக மீண்டும் கட்டண உயர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

99 ஸ்மார்ட்போன்களை வைத்து Google-க்கு தண்ணிகாட்டிய ஓவியர்! எல்லாம் சிவப்பா மாறிடுச்சு!99 ஸ்மார்ட்போன்களை வைத்து Google-க்கு தண்ணிகாட்டிய ஓவியர்! எல்லாம் சிவப்பா மாறிடுச்சு!

கோபால் விட்டல் என்ன சொன்னார் தெரியுமா?

கோபால் விட்டல் என்ன சொன்னார் தெரியுமா?

எதிர்பார்த்தது போல் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறியதாவது, "டிசம்பர் 2019 இல் மேற்கொள்ளப்பட்ட கட்டண திருத்தம் தொழில்துறையின் நிதி ஆரோக்கியத்தைச் சரிசெய்வதற்கான வரவேற்கத்தக்கப் படியாக இருந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தொழில்துறை முதலீடு செய்வதற்குச் சுங்கவரி மேலும் உயர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு கட்டண உயர்வா? மிரளும் வாடிக்கையாளர்கள்

மீண்டும் ஒரு கட்டண உயர்வா? மிரளும் வாடிக்கையாளர்கள்

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறியதை வைத்து பார்க்கும்பொழுது, நிச்சயம் மீண்டும் ஏர்டெல் விலை பட்டியலில் மீண்டும் ஒரு கட்டண உயர்வு உள்ளதென்பது உறுதியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு எத்தனை சதவீதம் உயர்த்தப்படும், எப்பொழுது நடைமுறைபடுத்தப்படும் என்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

திடீரென அக்கவுண்டில் ரூ.30 கோடி வந்தா என்ன செய்வீங்க: பூவிற்கும் பெண்ணின் கணக்கில் திடீரென அக்கவுண்டில் ரூ.30 கோடி வந்தா என்ன செய்வீங்க: பூவிற்கும் பெண்ணின் கணக்கில் "ரூ.30 கோடி" வரவு

இந்திய அரசுக்கு அபராதம் செலுத்திய ஏர்டெல்

இந்திய அரசுக்கு அபராதம் செலுத்திய ஏர்டெல்

கடந்த டிசம்பர், 2019-ல், வோடபோன், ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏஜிஆர்(AGR) நிலுவைத் தொகை தொடர்பாக இந்திய அரசுக்கு அபராதம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது, அதனைத் தொடர்ந்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை அதிகப்பட்டது. அதிகரிக்கப்பட்ட விலை காரணமாக பல ஏர்டெல் பயனர்கள் கடுப்பாகினர்.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போர்ட் செய்யும் வாடிக்கையாளர்கள்

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போர்ட் செய்யும் வாடிக்கையாளர்கள்

இதன் விளைவாக, பல ஏர்டெல் பயனர்கள் தங்கள் எண்ணை ரிலையன்ஸ் ஜியோவுக்கு போர்ட் செய்யத் துவங்கி, அவர்களின் நெட்வொர்க்கை மாற்றிக்கொண்டனர். இந்நிலைப்பாட்டில் இரண்டாம் கட்ட விலை உயர்வுக்கு ஏர்டெல் நிறுவனம் தயாராகி வருகிறது என்பது அதன் பயனர்களுக்குக் கூடுதல் ஆத்திரத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சொன்னா கேட்கனும்., தூக்கிட்டு போயிட்டான்ல., செல்பிக்கு போஸ் கொடுத்த பெண் பறிபோன செல்போன்- வீடியோசொன்னா கேட்கனும்., தூக்கிட்டு போயிட்டான்ல., செல்பிக்கு போஸ் கொடுத்த பெண் பறிபோன செல்போன்- வீடியோ

ஏர்டெல் எப்படி இதை கையாளப்போகிறது

ஏர்டெல் எப்படி இதை கையாளப்போகிறது

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 1,035 கோடி இழப்பு, மீண்டும் கட்டண உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. இரண்டாம் கட்ட விலை உயர்வினால் நிச்சயம் இன்னும் பல ஏர்டெல் பயனர்கள் தங்கள் கணக்கை வேறு சில நெட்வொர்க் சேவைகளுக்கு மாற்றம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் இதை எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Incurred A Massive Loss So It May Increase It's Plan Prices Again : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X