ஜியோவை ஓரங்கட்டிய ஏர்டெல்: ஏர்டெல் பயனர்களை அசைக்கமுடியாமல் திணறும் ஜியோ!

|

தொலைத்தொடர்பு சந்தைகளில் தடம் பதித்த குறுகிய காலங்களில் ஜியோ அசுர வளர்ச்சி அடைந்தது. பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் குறைவான விலையிலேயே திட்டங்களை வழங்கி வருகிறது. ஜியோ குறைந்த விலையில் அதிக சலுகைகளோடு திட்டங்களை வழங்குகிறது.

ஏர்டெல் பயனர்கள் அதிக ஆர்வம்

ஏர்டெல் பயனர்கள் அதிக ஆர்வம்

இருப்பினும் ஜியோவை ஒப்பிடுகையில் ஏர்டெல் மீது பயனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதில் ஜியோவை ஏர்டெல் முன்னணியில் இருக்கிறது. அதேபோல் இந்த பிரிவில் இரு நிறுவனங்களின் திட்டங்களின் விலைகளுக்கும் பெரிய மாறுபாடு இல்லை என்றே கூறலாம்.

குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

கடந்த டிசம்பர் மாத கணக்கீட்டின்படி ஏர்டெல் தனது நெட்வொர்க்கில் 0.7 மில்லியன் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களை இணைத்தது. ஏர்டெல் ஆறு மாதங்களில் 1.4 மில்லியன் பயனர்களை இணைத்துள்ளது. புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஜியோ அதிக கவனம் செலுத்தவில்லை என தகவல்கள் தெரிவிக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ கடந்த செப்டம்பரில் ஐந்து போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களானது ரூ.399, ரூ.599, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1,499 ஆகிய விலையில் கிடைக்கிறது. பிற தொலைத்தொடர்பு நிறுவன பயனர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இருப்பினும் ஏர்டெல்லை ஜியோவால் முந்த முடியவில்லை.

ஜியோ புதிய போஸ்ட்பெய்ட் திட்டம்

ஜியோ புதிய போஸ்ட்பெய்ட் திட்டம்

ஜியோவின் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் 75 ஜிபி, 100 ஜிபி, 150 ஜிபி, 200 ஜிபி மற்றும் 250 ஜிபி ஆகிய தரவுகளை வழங்குகின்றன. ஜியோ குறிப்பிட்டுள்ள அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களும் வரம்பற்ற அழைப்பு, மெசேஜ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. மேலும் இந்த திட்டங்களோடு நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஜபி சந்தாக்களை வழங்குகிறது.

WhatsApp புதிய அப்டேட்: காண்டாக்ட் உடன் ஷேர் செய்யும் வீடியோவை இனி 'மியூட்' செய்யலாம்.. எப்படி தெரியுமா?WhatsApp புதிய அப்டேட்: காண்டாக்ட் உடன் ஷேர் செய்யும் வீடியோவை இனி 'மியூட்' செய்யலாம்.. எப்படி தெரியுமா?

போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் ஜியோவை பின்னுக்கு தள்ளியுள்ளது என்றே கூறலாம். ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் பொதுவாகவே நிறுவனங்களை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். எனவே போஸ்ட்பெய்ட் திட்டங்களில் விலையை பொருட்படுத்துவதில்லை என கூறப்படுகிறது. இதுவே ஏர்டெல் முன்னோக்கி செல்ல காரணமாக இருக்கிறது.

போஸ்ட்பெய்ட் திட்டங்கள் விலை

போஸ்ட்பெய்ட் திட்டங்கள் விலை

அதோடு திட்டங்கள் பிரிவிலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் விதமாகவே சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களின் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.399, ரூ.499, ரூ.749, ரூ.999 மற்றும் ரூ.1599 ஆகிய விலையில் வழங்குகிறது. இந்த திட்டங்கள் 40 ஜிபி, 75 ஜிபி, 125 ஜிபி, 150 ஜிபி ஆகிய விலையில் அன்லிமிடெட் சேவைகளை வழங்குகின்றன. ஜியோவின் திட்டங்களை விட ஏர்டெல் திட்டங்கள் விலை சற்று அதிகமாக இருந்தாலும் ஏர்டெல் திட்டங்கள் பயனர்களை திருப்திப்படுத்தி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Increases Postpaid Plan Customers: Jio Postpaid Market Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X