ஏர்டெல் ரூ.199, ரூ.349, ரூ.448, ரூ.509/-ல் அதிரடி திருத்தம்; ஜியோவிற்கு பெரும் நெருக்கடி.!

|

பார்தி ஏர்டெல் நிறுவனமானது ஜியோவிற்கு எதிரான மேலுமொரு அதிரடி திருத்தத்தை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரீபெயிட் ப்ராமிஸ் திட்டத்தின்கீழுள்ள பிரபலமான கட்டணத் திட்டங்களை புதுப்பித்துள்ளது.

ஏர்டெல் ரூ.199, 349, 448, 509/-ல் அதிரடி திருத்தம்; நெருக்கடியில் ஜியோ

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் போட்டியிடும் முனைப்பில் ​​ஏர்டெல் நிறுவனம் நான்கு திட்டங்கள் - ரூ.199, ரூ.349, ரூ 448, ரூ. 509 - திருத்தப்பட்டுள்ளது. அதென்ன திருத்தங்கள்.? இனி இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன.? இதன் முந்தைய நன்மைகள் என்ன.? ஒப்பீட்டில் எந்த நிறுவனத்தின் திட்டங்கள் அதிக நன்மைகளை வழங்குகிறது.? போன்றே பல கேள்விகளுக்கான பதில்களை ஆராய்வோம்.

1.4ஜிபி மற்றும் 2.5 ஜிபி

1.4ஜிபி மற்றும் 2.5 ஜிபி

இனி பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199, ரூ.448 மற்றும் ரூ.509/- ஆகிய மூன்று கட்டணத் திட்டங்களும் நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகின்றன. அதேசமயம் திருத்தப்பட்டுள்ள நான்காவது திட்டமான ரூ.349/- ஆனது, இனி நாள் ஒன்றிற்கு சராசரியாக 2.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

ப்ரீபெயிட் வாடிக்கையாளர்கள்

ப்ரீபெயிட் வாடிக்கையாளர்கள்

இந்த புதிய கட்டண திட்டங்கள் நாட்டில் பல வட்டாரங்களில் ஏற்கனவே உருட்டப்பட்டுவிட்டன. எனவே, இந்த திட்டங்களை ஏர்டெல் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்கள் அவர்களின் மைஏர்டெல் பயன்பாட்டின் வழியாக அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்யலாம்.

"கிட்டத்தட்ட" சமன் செய்துள்ளது

இந்த அதிரடி திருத்தமானது ரிலையன்ஸ் ஜியோவின் நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி தரவு வழங்கும் திட்டங்களான ரூ.198, ரூ.448 மற்றும் ரூ.498 ஆகியவற்றை கடுமையாக எதிர்க்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். உடன் இந்த திருத்தத்தின் வாயிலாக ஏர்டெல் நிறுவனமானது ஜியோவின் சிறந்த தரவு நன்மைகளை "கிட்டத்தட்ட" சமன் செய்துள்ளது.

மொத்தம் 39.2 ஜிபி அளவிலான டேட்டா

மொத்தம் 39.2 ஜிபி அளவிலான டேட்டா

இந்த மூன்று திட்டங்களும் செல்லுபடியாகும் முழு காலம் வரை ஒரு நாளைக்கு 1.4ஜிஇ தரவை வழங்குகின்றன. ரூ.199/- ஆனது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது முழு செல்லுபடியாகும் காலத்திற்கு மொத்தம் 39.2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குமென்று பொருள்.

ரூ.448 மற்றும் ரூ.509

ரூ.448 மற்றும் ரூ.509

ரூ.448/- ஆனது மொத்தம் 82 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது முழு செல்லுபடியாகும் காலத்திற்கு மொத்தம் 114.8 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் மற்றும் ரூ.509/- ஆனது மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதன் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு மொத்தம் 126 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

ஏர்டெல் ரூ.349

ஏர்டெல் ரூ.349

இந்த திருத்தத்துடன், ஏர்டெல் நிறுவனம் அதன் ஒரு ஜிபி டேட்டாவின் மதிப்பை கீழே இறக்கியது மட்டுமின்றி ரூ.4/- என்கிற ரிலையன்ஸ் ஜியோவின் டேட்டா மதிப்புடன் ஒற்றுப்போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. திருத்தம் கண்ட நான்காவது திட்டமான ஏர்டெல் ரூ.349/-ஐ பொறுத்தமட்டில், இனி நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்

வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்

ரீசார்ஜ் செய்யப்பட்ட தேதி முதல் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.349/- திட்டம் மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று திட்டங்களுமே அதற்கே உரிய செல்லுபடியாகும் காலம் வரையிலாக - வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் உள்ளடக்க பயன்பாடுகளுக்கான இலவச சந்தா ஆகிய நன்மைகளை வழங்குகின்றன.

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

மும்பை, ஆந்திரா, தெலுங்கானா, தில்லி போன்ற நிறுவனத்தின் பல பெரிய வட்டாரங்களில் இந்த திருத்தங்கள் உருட்டப்பட்டுள்ளன இருப்பினும் நிறுவனத்திடம் இருந்து இந்த மாற்றங்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, விரைவில் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 28 நாட்களுக்கு

மொத்தம் 28 நாட்களுக்கு

சில தினங்களுக்கு முன்னர் ஏர்டெல் அதன் ரூ.149/-ல் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கும் வண்ணம் புதுப்பித்தும், அந்த திட்டம் ஏர்டெல் ப்ரீபெயிட் சந்தாதாரர்களுக்காக இப்போது திறக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

70 நாட்களில் இருந்து 82 நாட்களுக்கு

70 நாட்களில் இருந்து 82 நாட்களுக்கு

தவிர நேற்று, ஏர்டெல் அதன் ரூ.399/- ப்ரீபெய்ட் திட்டத்த்தின் நன்மைகளை (சில வட்டாரங்களில்) 70 நாட்களில் இருந்து 82 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தது. இந்த திருத்தம் கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற வட்டாரங்களில் கிடைக்கிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

மூலம் : டெலிகாம்டால்க். இன்ஃபோ

Best Mobiles in India

English summary
Bharti Airtel Gives a Fitting Reply to Reliance Jio by Offering 1.4GB Data Per Day With the Rs 199, Rs 448 and Rs 509 Prepaid Tariff Plans. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X