அறிமுகம் : ஏர்டெல் ரூ.289/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் இப்போது புதிய ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் இணைய வேகம் சற்று குறைந்துள்ளது
என்று பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஏர்டெல் இப்போது ரூ.289/- ப்ரீபெயிட் திட்டத்தை தான் அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 48நாட்களுக்கு வழங்கப்படுகிறது, குறிப்பாக இலவச கால் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள்
ரூ.289 திட்டத்தில் வழங்கப்படுகின்றன. பின்பு இதற்கு முன்பு ஏர்டெல் அறிமுகம் செய்த சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் இன்று ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி 90எஸ்எமஎஸ், ரோமிங், இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. பின்பு இதற்கு முன்பு ஏர்டெல் அறிமுகம் செய்த சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.419 திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.419 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 75 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வீதம் 14 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications