இன்று பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் அறிவித்த சிறப்பு சலுகைகளைப் பார்ப்போம்.!
பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், எஸ்எஸ்எம் போன் சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்குமுன்பு ஏர்டெல் அறிமுகம் செய்த சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.
இந்திய டெலிகாம் சந்தையில் தொடர்ந்து பல்வேநு புதிய திட்டங்கள் மற்றும் புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள். மேலும் இப்போது இந்நிறுவனம் புதிய சலுகைகளை அறிவத்துள்ளது
அது என்னவென்று பார்ப்போம்.

பிஎஸ்என்எல் இன்று அறிவித்த சலுகை என்னவென்றால், அந்நிறுவனத்தின் மை பிஎஸ்என்எல் ஆப் (My BSNL App) என்ற செயலியை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால் 1ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த தரவை 30நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.

ஏர்டெல்
அதேபோன்று ஏர்டெல் நிறுவனம் இன்று ரூ.419 திட்டத்தை அறிமுகம் செய்துள்ள, இந்த திட்டதில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 75நாட்களுக்கு வழங்கப்படுகிறது, மொத்தமாக 105ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், எஸ்எஸ்எம் போன் சலுகைகளும் இந்த திட்டத்தில்
வழங்கப்படுகிறது. இதற்குமுன்பு ஏர்டெல் அறிமுகம் செய்த சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வீதம் 14 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.289 /- ப்ரீபெயிட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.289 திட்டத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் வாடிக்கையாளர்கள் ரூ.289-க்கு ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி டேட்டா வீதம் 48நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது


Click it and Unblock the Notifications