Home
News

அறிமுகம்: டேட்டா பிரியர்களை குறிவைத்து ஏர்டெல் ரூ.49/- மற்றும் ரூ.157/- பேக்ஸ்.!

Bharti Airtel, airtel, Brings Down the 1GB, of 4G Data Cost to Under Rs 50, Telecom, Technology, News, ஏர்டெல், டெலிகாம், இந்தியா, தொழில்நுட்பம், செய்திகள்

By Muthuraj

புதிய கட்டண திட்டங்களை தொகுப்பதை விட, ஏற்கனவே இருக்கும் திட்டங்களின் நன்மைகளை திருத்துவது ஒரு சிறப்பான வழிமுறை என்பதை நன்கு உணர்ந்துகொண்ட ஐடியாவின் பாணியை தவிடுபொடியாக்கும் வண்ணம் பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்நது புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அறிமுகம்: டேட்டா பிரியர்களை குறிவைத்து ரூ.49/- மற்றும் ரூ.157/- பேக்ஸ்

மூலம் : டெலிகாம்டால்க். இன்ஃபோ

போட்டியாளர்களை கடுமையாக எதிர்கொள்ளவும், தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் அதன் 2 புதிய பட்ஜெட் கட்டண திட்டங்களை அறிவித்துள்ளது.

சுவாரசியம் என்னவென்றால்

சுவாரசியம் என்னவென்றால்

பல காம்போ திட்டங்களை அறிமுகப்படுத்திய பின்னர், பார்தி ஏர்டெல் அறிவித்துள்ள இந்த 2 புதிய அறிமுகத்தின் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், நிறுவனத்தின் 1ஜிபி அளவிலான டேட்டாவிற்கான செலவு ரூ.50/-க்கும் குறைவான விலைநிர்ணயத்தை பெற்றுள்ளது.

திட்டங்களின் நன்மை

திட்டங்களின் நன்மை

இந்த புதிய திட்டங்கள் அதிக அளவிலான டேட்டா பயன்பாட்டாளர்களை குறிவைத்து வெளியாகியுள்ளது. ரூ.49/-
மற்றும் ரூ.157/- என்ற விலை நிர்ணயத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களின் நன்மைகளையும், அதன் செல்லுபடி காலத்தையும் மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய விவரங்களை காண்போம்.

மொத்தம் 27 நாட்களுக்கு செல்லுபடியாகும்

மொத்தம் 27 நாட்களுக்கு செல்லுபடியாகும்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.157/- திட்டமானது 3ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை மொத்தம் 27 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. அதாவது ஒரு ஜிபி டேட்டாவின் விலை நிர்ணயமானது ரூ.52.3/- என்றாகிறது.

தரவு நன்மைகளை மட்டுமே

தரவு நன்மைகளை மட்டுமே

இந்த புதிய ஏர்டெல் ரீசார்ஜ் வாய்ப்பானது, தொகுக்கப்பட்ட குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளைப் வழங்காது என்பதும், தரவு நன்மைகளை மட்டுமே வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ரீசார்ஜ் திட்டம் சில ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே காணப்படுகிறது.

'ஸ்பெஷல் ஆபர்ஸ்' என்ற பிரிவின் கீழ்

'ஸ்பெஷல் ஆபர்ஸ்' என்ற பிரிவின் கீழ்

திட்டத்தைப் பெற, பயனர்கள் தங்கள் சாதனங்களின் வழியாக மை ஏர்டெல் பயன்பாட்டை அணுக வேண்டும். இந்த பயன்பாட்டின் 'ஸ்பெஷல் ஆபர்ஸ்' என்ற பிரிவின் கீழ் இந்த திட்டம் தொகுக்கப்பட்டுள்ளது. மறுபுறம், கைமுறையாக தேடப்பட்ட போது, ​​ஒரு ரூ.157/- திட்டமும் கிடைக்கிறது.

கவனமாக படிக்குமாறு  பரிந்துரைக்கிறோம்

கவனமாக படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்

அந்த திட்டமனது வெறும் 5 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகிறது மற்றும் 2ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி தரவை வழங்குகிறது. எனவே இந்த ரூ.157/- பேக்கை ரீசார்ஜ் செய்யும் முன்னர் அதன் நன்மைகளை பற்றிய விவரங்களை கவனமாக படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

ஒரு சிறப்பு சலுகை

ஒரு சிறப்பு சலுகை

திறந்தவெளி திட்டமாக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி உட்பட பல பகுதிகளிலும் ஏர்டெல் வழங்கும் ரூ.157 ரீசார்ஜ் பேக் காணப்படுகிறது. ஆக, இது அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்களுக்கான ஒரு சிறப்பு சலுகையாக இருக்கலாம்.

ஏர்டெல் ரூ.49/- ரீசார்ஜ் பேக்

ஏர்டெல் ரூ.49/- ரீசார்ஜ் பேக்

ரூ.157/- திட்டமானது ஒட்டு நீண்ட கால பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மறுகையில் உள்ள ரூ.49/-
ஆனது உடனடி பயன்பாட்டிற்கானதாகும். ஏர்டெல் ரூ.49/- ரீசார்ஜ் பேக் ஆனது 1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வெறும் ஒரு நாள் மட்டுமே ஆகும்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Brings Down the 1GB of 4G Data Cost to Under Rs 50. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X