ஆஹா., பழையத் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்த ஏர்டெல்

|

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ, வோடபோன் நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது.

ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்

அதன்படி இந்நிறுவனத்தின் தனித்துவமான ஒரு திட்டம் என்றால் அது ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் என்றே கூறலாம். இந்த திட்டத்தை அதிகளவு மக்கள் தேர்வு செயவார்கள் என்றே கூறலாம் இதில் பல நன்மைகள் உள்ளது.

வேலிடிட்டி 28நாட்கள்

வேலிடிட்டி 28நாட்கள்

பாரதி ஏர்டெல் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசிர 2ஜிபி டேட்டா நன்மைகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். எனவே பயனர்கள் இந்த ரூ.349-ப்ரீபெய்ட் திட்டத்தில் 56ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளை பெறமுடியும்.

வரம்பற்ற அழைப்பு நன்மை

வரம்பற்ற அழைப்பு நன்மை

ரூ.349-ப்ரீபெய்ட் திட்டத்தின் டேட்டான நன்மையை தவிர வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் கிடைக்கறுது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்கிவருகிறது. ஆனால் ஜியோ நிறுவனம் மட்டும் கட்டணம் வசூல் செய்கிறது.

அடுத்த இலக்கு சூரியன்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்., எப்போது தெரியுமா?அடுத்த இலக்கு சூரியன்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்., எப்போது தெரியுமா?

அமேசான் ப்ரைம் வீடியோ வசதி

அமேசான் ப்ரைம் வீடியோ வசதி

ரூ.349-ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா நன்மைகள், வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மைகளை தவிர்த்து திரைப்படங்கள், மற்றும் டிவி தொடர்களை பார்பதற்காக அமேசான் ப்ரைம் வீடியோ வசதியும்,பின்பு அமேசான் ப்ரைமின் பிற நன்மைகளையும் பெறமுடியும்.

பாஸ்ட் டெலிவரி

பாஸ்ட் டெலிவரி

அதாவது அமேசான் பிரைம் மியூசிக் மற்றும் ப்ரைமின் வழக்கமான நன்மைகளான பாஸ்ட் டெலிவரி, அமேசான் விற்பனைக்கான பிரத்யேக அணுகல் போன்ற பல நன்மைகளை இந்த திட்டத்தில் பெறமுடியும்.

ரூ. 249 மற்றும் ரூ. 299 ப்ரீபெய்ட்

ரூ. 249 மற்றும் ரூ. 299 ப்ரீபெய்ட்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கட்டண உயர்வுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனத்தின் இதேபோல ரூ. 249 மற்றும் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டங்கள் இருந்தன, இது ஆயுள் காப்பீட்டு சலுகையுடனும், அமேசான் நன்மைகளுடன் வந்தன. பின்பு கட்டண உயர்வுக்கு பிறகு, குறிப்பிட்ட ஆயுள் காப்பீட்டு நன்மையானது ஏர்டெல் நிறுவனத்தால் அகற்றப்பட்டதாகத் தெரிகிறது என டெலிகாம் டால்க் அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இமேசான் ப்ரைம் நன்மை கிடைக்கும் ஒரே திட்டமாக ரூ.349- உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஜி-யில் அடியெடுத்து வைத்த ஓப்போ: விலை மற்றும் அம்சங்கள்!5 ஜி-யில் அடியெடுத்து வைத்த ஓப்போ: விலை மற்றும் அம்சங்கள்!

ரூ. 558 திட்டம் மீண்டும் அறிமுகம்

ரூ. 558 திட்டம் மீண்டும் அறிமுகம்

ரூ.558 திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் முந்தைய சலுகைகளை அப்படியே வழங்கியிருந்தாலும், திட்டத்துக்கான காலக்கட்டத்தை மட்டும் குறைத்திருக்கிறது. ரூ.558 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் முன்னதாக 82 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தினசரி 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் ஆகிய அதே சலுகைகளுடன் 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Source: telecomtalk.info

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bharti Airtel Brings Back old recharge plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X