Home
News

வீடு தேடி வரும் இலவச சிம் கார்டு.. சிறந்த Airtel போஸ்ட்பெய்டு திட்டங்கள்.. குடும்பத்தினருக்கு இது ரொம்ப பெஸ்ட்

பாரதி ஏர்டெல் இந்தியாவின் சிறந்த போஸ்ட்பெய்ட் சேவை வழங்குனர்களில் ஒன்றாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காரணம், பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு எண்ணில் அடங்காத பல நன்மைகளைச் சிறந்த சலுகையுடன் வழங்கி வருகிறது. Airtel தொலைத்தொடர்பு நிறுவனமானது, இன்றைய ஆன்லைன் ஷாப்பிங் கலாச்சார வாழ்க்கைக்கு ஏற்றபடி, சிம் கார்டை கூட ஆன்லைனில் ஆர்டர் செய்து, அதை உங்கள் வீட்டிற்கு இலவசமாகவும் நேரடியாகவும் வழங்கும் திட்டத்தைப் பின்பற்றி வருகிறது. வீட்டில் இருந்தபடி நீங்கள் எப்படி சிம் கார்டு வாங்கலாம், எந்த திட்டம் சிறப்பானது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

இலவச சிம் கார்டு டெலிவரியுடன் போஸ்ட்பெய்டு நன்மையா?

இலவச சிம் கார்டு டெலிவரியுடன் போஸ்ட்பெய்டு நன்மையா?

ஏர்டெல் நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் சேவைகளைப் பயன்படுத்துகின்ற நாடு முழுவதும் ஏராளமான கார்ப்பரேட் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது, ஏர்டெல் நிறுவனம் இலவச சிம் கார்டு டெலிவரியுடன் வரும் இரண்டு சிறந்த விற்பனையாகும் போஸ்ட்பெய்ட் திட்டங்களைத் தனது பட்டியலில் வைத்துள்ளது. இந்த திட்டங்களில் எந்த திட்டம் தனிநபருக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதையும், குடும்பத்துடன் இருப்பவர்களுக்கு எந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

எந்த திட்டங்களுடன் இந்த இலவச சிம் கார்டு டெலிவரி நன்மை கிடைக்கிறது?

எந்த திட்டங்களுடன் இந்த இலவச சிம் கார்டு டெலிவரி நன்மை கிடைக்கிறது?

ஏர்டெல் நிறுவனம் இப்போது அதன் பயனர்களுக்கு இலவசமாக போஸ்ட்பெய்டு சிம் கார்டுகளை அவர்களின் வீட்டு வாசலுக்கே சென்றடையும் படி டெலிவரி செய்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிப்புப் படி, நிறுவனத்திடம் இப்போது நடைமுறையில் உள்ள இரண்டு திட்டங்களுடன் இந்த சிறப்பு வசதியை வழங்குகிறது. ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டத்தின் பட்டியலில் உள்ள ரூ. 499 மற்றும் ரூ. 999 திட்டங்களுடன் வருகிறது. இரண்டும் இயற்கையில் ஒரே மாதிரியானவை தான், ஆனால் விலை வேறுபாட்டை நியாயப்படுத்த முற்றிலும் மாறுபட்ட பலன்களை வழங்குகின்றன.

பாரதி ஏர்டெல் ரூ 499 போஸ்ட்பெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ 499 போஸ்ட்பெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ. 499 போஸ்ட்பெய்ட் திட்டம் நிறுவனம் வழங்கும் மிகவும் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டமாகும். பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 499 திட்டத்தில், பயனர்களுக்கு 75 ஜிபி மாதாந்திர டேட்டா கிடைக்கிறது. இதில் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் கிடைக்கிறது. இந்த வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் பயனர்களுக்குப் பல ஏர்டெல் தேங்க்ஸ் வெகுமதிகளுக்கான அணுகலைப் பெறுகிறார்கள்.

அமேசான் பிரைம்.. Airtel Xstream Premium நன்மை மற்றும் Disney+ Hotstar நன்மையும் கிடைக்குமா?

அமேசான் பிரைம்.. Airtel Xstream Premium நன்மை மற்றும் Disney+ Hotstar நன்மையும் கிடைக்குமா?

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கக் கூடிய ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளை பற்றி பார்க்கையில், போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோவிற்கான ஒரு வருட இலவச சந்தா கிடைக்கிறது. இந்த ஓவர்-தி-டாப் (OTT) சந்தா நன்மைக்காகவே இந்த திட்டம் பிரபலமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. Airtel Xstream Premium நன்மை கிடைக்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு Disney+ Hotstar போன்ற நன்மைகளுடன் இன்னும் பல நன்மைகள் கிடைக்கிறது. பயனர்கள் ரூ. 299 செலுத்திக் கூடுதல் இணைப்பைத் தேர்வு செய்யலாம்.

பாரதி ஏர்டெல் ரூ 999 போஸ்ட்பெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ 999 போஸ்ட்பெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல்லின் ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்டம் உண்மையில் குடும்பங்களுக்கானது. அதாவது நீங்கள் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்காக ஒட்டுமொத்தமாக மூன்று அல்லது அதற்கு மேலான இணைப்பைப் பெற விரும்பினால் நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்யலாம். அதேபோல், தெரியாதவர்களுக்கு ரூ. 499 திட்டம் தனிப்பட்ட பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு குடும்பமாக அல்லது மூன்று பேர் கொண்ட குழுவாக இருந்தால், உங்களுக்கு இந்த திட்டம் சிறப்பானது.

150 ஜிபி மாதாந்திர டேட்டா.. 200 ஜிபி வரையிலான ரோல்ஓவர்

150 ஜிபி மாதாந்திர டேட்டா.. 200 ஜிபி வரையிலான ரோல்ஓவர்

ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து ரூ. 999 விலையில் கிடைக்கும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு அருமையான வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில், பயனர்கள் 150 ஜிபி மாதாந்திர டேட்டாவுடன் 200 ஜிபி வரையிலான ரோல்ஓவர் வரம்பைப் பெறுகிறார்கள். பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள்.

OTT நன்மைகளை வழங்கும் பெஸ்ட் திட்டம்

OTT நன்மைகளை வழங்கும் பெஸ்ட் திட்டம்

ரூ. 999 திட்டமானது இரண்டு கூடுதல் வழக்கமான குரல் அழைப்பு இணைப்புகளுடன் வருகிறது. இந்தத் திட்டமும் அதன் பயனர்களுக்கு, அமேசான் பிரைம் வீடியோ சந்தாவிற்கான ஒரு வருட இணைப்பை வழங்குகிறது. இத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பல OTT நன்மைகளை உள்ளடக்கிய நன்மைகளுடன் வருகிறது.இத்துடன் இன்னும் கூடுதலாக Airtel தேங்க்ஸ் வெகுமதிகளுக்கான இலவச அணுகலுடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய போஸ்ட்பெய்டு இணைப்பை வாங்க என்ன செய்யவேண்டும்?

புதிய போஸ்ட்பெய்டு இணைப்பை வாங்க என்ன செய்யவேண்டும்?

இந்த இரண்டு சிறப்புத் திட்டங்களும் உங்களுக்குப் பிடித்திருந்தால் இவற்றை நீங்கள் எளிதாக வாங்கி பயன்படுத்தலாம். பாரதி ஏர்டெல்லிலிருந்து புதிய போஸ்ட்பெய்டு இணைப்பை வாங்க விரும்பினால், நீங்கள் ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லலாம் அல்லது ஏர்டெல்லின் அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடையைத் தொடர்புகொள்ளலாம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எடுத்த அதிரடி விலை உயர்வு நடவடிக்கை

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எடுத்த அதிரடி விலை உயர்வு நடவடிக்கை

தெரியாதவர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகாரப்பூர்வமாக அதிகரித்து, புதிய விலையில் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் துவங்கிவிட்டது. ஏர்டெல் நிறுவனம் தான் டெலிகாம் துறையில் முதன் முதலில் அதன் திட்டங்களின் விலை அதிகரிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Best Postpaid Plan Rs 499 And Rs 999 Comes With Free SIM Delivery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X