இந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர், உங்களின் ஜியோ சிம் குப்பைக்குள் போகும்.!

|

இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மூலம் நடத்தப்பட்ட இன்டிபென்டன்ட் டிரைவ் டெஸ்டில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி வேகம் பட்டையை கிளப்பியுள்ளது. இந்தோர், புபனேஷ்வர், நாக்பூர் மற்றும் மைசூர் ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்பட்ட இந்த 4ஜி ஸ்பீட் டெஸ்டின் முடிவுகளை டிராய் அறிக்கையாய் வெளியிட்டது.

இந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர், ஜியோ சிம் குப்பைக்குள் போகும்.!

அதன்படி, இந்த சோதனைகளை அக்டோபர் 9, 2017 முதல் டிசம்பர் 30, 2017 வரை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி 4ஜி பதிவிறக்க வேகமானது 8.125 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது.

ஜியோவின் சராசரி 4ஜி பதிவிறக்க வேகமானது.?

ஜியோவின் சராசரி 4ஜி பதிவிறக்க வேகமானது.?

மறுகையில் உள்ள, ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி 4ஜி பதிவிறக்க வேகமானது வெறும் 5.35 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இந்த டிரைவ் சோதனையில் பங்கேற்ற ஐடியா செல்லுலார் ஆனது 6.25 எம்பிபிஎஸ் என்கிற சராசரி பதிவிறக்க வேகத்தை பெற்று டிராய் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

வோடாபோனின் சராசரி பதிவிறக்க வேகமானது.?

வோடாபோனின் சராசரி பதிவிறக்க வேகமானது.?

உடனே ஜியோவிற்கு தான் மூன்றாவது இடம் என்று நினைக்க வேண்டாம். அந்த இடத்தை வோடபோன் (இந்தூர் தவிர) நிறுவனத்தின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வோடாபோனின் சராசரி பதிவிறக்க வேகமானது 6.5 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. டிராய் நடத்திய டவுண்லோட் ஸ்பீட் டெஸ்ட்டில் மட்டுமல்ல, அப்லோட் ஸ்பீட் டெஸ்ட்டிலும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ பின்தங்கியுள்ளது.

ஜியோவின் நிலைமை இன்னும் மோசம்.!

ஜியோவின் நிலைமை இன்னும் மோசம்.!

பதிவேற்றும் வேகம் சார்ந்த சோதனையில், ரிலையன்ஸ் ஜியோவின் நிலைமை இன்னும் மோசம் என்றே கூறலாம். அதாவது சராசரியாக 2.5 எம்பிபிஎஸ் என்கிற சராசரி பதிவேற்ற வேகம் பதிவாகியுள்ளது. மறுகையில் உள்ள ஐடியா செல்லுலார் ஆனது கூட ஒரு கெளரவமான 6.4 எம்பிபிஎஸ் என்கிற சராசரி வேகத்தை பதிவு செய்துள்ளது.

ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில்.?

ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில்.?

ஜியோவிற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைத்த ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில், அப்லோட் ஸ்பீட் டெஸ்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஐடியா செல்லுலாரை விட குறைவு. அதாவது 5.7 எம்பிபிஎஸ் என்கிற சராசரி பதிவேற்ற வேகம் பதிவாகியுள்ளது. இருப்பினும் அனைத்து சோதனைகளின் முடிவில், பார்தி ஏர்டெல் நிறுவனம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
மைசூரை பொறுத்தமட்டில்.!

மைசூரை பொறுத்தமட்டில்.!

இந்தோரில், சுமார் 600 கி.மீ பரப்பளவில் 5 ஹாட்ஸ்பாட்களின் வழியாக இந்த டிராய் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாக்பூரை பொறுத்தமட்டில், 10 ஹாட்ஸ்பாட்கள் கொண்டு சுமார் 630 கிமீ அளவிலும், மைசூரை பொறுத்தமட்டில் மொத்தம் 10 ஹாட்ஸ்பாட்கள் கொண்டு 320 கிமீ அளவிலான பரப்பளவிலும், இறுதியாக ஒடிசாவில் உள்ள புவனேஸ்வறில் 624 கிமீ பரப்பளவிலும் இந்த ஸ்பீட் டெஸ்ட் நிகழ்த்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Bharti Airtel Averages 8.1 Mbps in Trai’s 4G Drive Tests Conducted Across Mysore and Nagpur. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X