Home
News

Airtel-க்கு கும்பிடு.. 3 நாட்கள் இலவச டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. வயநாடு நிலச்சரிவு.. யூசர்களுக்கு கை கொடுத்தது!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கஸ்டமர்களுக்கு உதவும் நோக்குடன் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) 3 நாட்களுக்கு இலவச சேவைகளை வழங்குகிறது. இலவச வாய்ஸ் கால்கள் (Free Voice Calls), நாளொன்றுக்கு 1 ஜிபி இலவச டேட்டா (1GB Free Data) மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது. இந்த 3 நாட்கள் இலவச சேவைகள் யாருக்கெல்லாம் கிடைக்கும். இந்த சலுகையை பெறுவதற்கு ஏர்டெல் கஸ்டமர்கள் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் கேரள மாநிலத்தின் வயநாட்டில் (Wayanad) சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்ட கஸ்டமர்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் அவர்களது காலாவதியான திட்டங்களிலும் இலவச சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியது கிடையாது.

கண்கலங்கிய Airtel.. 3 நாட்கள் இலவச டேட்டா! வாய்ஸ் கால்கள்! உதவிக்கரம்!

ஆகவே, இந்த ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு (Prepaid Customers) நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். மேலும், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் 3 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த மூன்று நாட்கள் இலவச சலுகையானது, ஏற்கனவே ரீசார்ஜ் செய்து பயன்படுத்திய திட்டத்தின் வேலிடிட்டி முடிந்த பிறகும், ரீசார்ஜ் செய்யாமலேயே கிடைக்க கூடியதாகும். ஆகவே, இதற்கு எந்த வித அணுகலும் இதற்கு தேவையில்லை. வேலிடிட்டி முடிந்த கஸ்டமர்களுக்கு பார்தி ஏர்டெல் நிறுவனமே நேரடியாக இந்த சலுகைகளை கொடுக்க இருக்கிறது.

அதே நேரத்தில் வயநாடு நிலர்ச்சரிவில் (Wayanad Landslides) பாதிக்கப்பட்ட ஏர்டெல் போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு (Airtel Postpaid Customers), அவர்களது மொபைல் பில் செலுத்தும் காலக்கெடுவை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கேரளாவில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் 52 சில்லறை விற்பனை கடைகள், இப்போது நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் உள்ளூர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் உதவிக் கரம் நீட்டி இருக்கிறது. பார்தி ஏர்டெல்லின் இந்த முயற்சி நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற மற்ற முக்கிய டெலிகாம் நிறுவனங்களும் இலவச சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவலுக்காக, கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நாடு முழுவதிலும் இருந்து நிவாரணப் பணிகளுக்கு உதவி கரம் நீட்டப்படுகிறது. தமிழ்நாட்டின் பேரிடர் மீட்புக்குழு உதவிக்காக வயநாடு சென்றுள்ளது.

அதேபோல தமிழ்நாடு அரசானது, கேரள மாநிலத்திற்கு ரூ 5 கோடி நிதி உதவி அளிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதுபோலவே, பார்தி ஏர்டெல் நிறுவனம், பாதிக்கப்பட்ட கஸ்டமர்களுக்கு வேலிடிட்டி முடிந்தாலும், கட்டணமில்லாமல் மூன்று நாட்களுக்கு இலவச வாய்ஸ் கால்கள், 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bharti Airtel Announces Free Unlimited Calls 1GB Data For Three Days Wayanad Landslides Measures
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X