Home
News

வெறும் ரூ. 58க்கு 3ஜிபி டேட்டா.. டேட்டா வவுச்சர் கூட அமேசான் பிரைம் சந்தா வேண்டுமா? இது தான் திட்டம்..

சமீபத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் விதிக்கப்பட்ட கட்டண உயர்வுகள் வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியது மட்டுமின்றி, 4G டேட்டா வவுச்சர்களின் விலையும் உயர்த்தியுள்ளது. இருப்பினும், இந்த 4G டேட்டா வவுச்சர்கள் உங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை விடக் குறைவானதாக இருக்கிறது. டெல்கோக்கள் தங்கள் பயனர்களுக்குக் கூடுதல் கட்டணத்தில் வழங்கும் கூடுதல் டேட்டா பேக்குகள் பற்றி இங்குப் பார்க்கப்போகிறோம். இந்த டேட்டா வவுச்சர்களை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம், இதன் மூலம் என்ன நன்மைகள் என்ன விலையில் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

டேட்டா வவுச்சர்களை யாரெல்லாம், எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்?

டேட்டா வவுச்சர்களை யாரெல்லாம், எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்?

உங்களுடைய ரீசார்ஜ் திட்டத்துடன் வழங்கப்படும் தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால் இந்த டேட்டா வவுச்சர்களை நீங்கள் பயன்படுத்த முடியும். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் அதன் சந்தாதாரர்களுக்கு சில டேட்டா வவுச்சர்களை வழங்கி வருகிறது. இவற்றில் சில கூடுதல் நன்மைகளுடன் வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது. டேட்டா நுகர்வுக்கான பயனரின் தேவைக்கு ஏர்டெல் வழங்கும் 4ஜி டேட்டா வவுச்சர்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ளோம்.

4G டேட்டா வவுச்சர்கள் மற்றும் அதன் தெளிவான விவரங்கள்

4G டேட்டா வவுச்சர்கள் மற்றும் அதன் தெளிவான விவரங்கள்

ஏர்டெல் வழங்கும் முதல் டேட்டா வவுச்சர் ரூ. 58 விலை திட்டமாகும். இது ரூ. 58 விலையில் அதன் பயனர்களுக்கு மொத்தமாக 3ஜிபி இணையத் தரவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் பயனரால் பயன்பாட்டில் உள்ள பிற பேக்கிற்குச் சமம் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, ஆக்டிவ் பண்டில் மற்றும் ஸ்மார்ட் பேக் பயனர்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்கிறது. 3ஜிபி டேட்டா முடிந்ததும், பயனர்களிடமிருந்து ஒரு எம்பிக்கும் 50 பைசா என்று வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 98 டேட்டா வவுச்சர் இவ்வளவு நன்மையை வழங்குகிறதா?

ரூ. 98 டேட்டா வவுச்சர் இவ்வளவு நன்மையை வழங்குகிறதா?

ஏர்டெல்லின் பட்டியலில் உள்ள அடுத்த 4ஜி டேட்டா வவுச்சரின் விலை ரூ.98 திட்டமாகும். இந்த திட்டம் குறிப்பிடப்பட்ட விலையில் மொத்தம் 5ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இது டேட்டா வவுச்சராக இருப்பதால், இந்த திட்டத்தின் செல்லுபடியும் ஏற்கனவே இருக்கும் திட்டத்தைப் போலவே இருக்கும். இது தவிர, ரூ.98 டேட்டா வவுச்சர் Wynk Music Premium அணுகலுடன் வருகிறது. இது நிறுவனத்தின் சொந்த இசைப் பயன்பாடாகும். இது இசை, நேரடி இசை நிகழ்ச்சிகள், பாட்காஸ்ட்கள் மற்றும் பலவற்றை வழங்குகிறது. 5GB டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு பயனர்களுக்கு 50p/MB கட்டணம் வசூலிக்கப்படும்.

டேட்டா வவுச்சர் உடன் அமேசான் பிரைம் சந்தா கிடைக்கிறதா?

டேட்டா வவுச்சர் உடன் அமேசான் பிரைம் சந்தா கிடைக்கிறதா?

பட்டியலில் உள்ள அடுத்த திட்டம் ரூ.108 வவுச்சர் திட்டமாகும். இது ரூ.108 விலையில் 6ஜிபி இணையத் தரவை வழங்குகிறது. இது பயனரால் தற்போதுள்ள திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்துடன் ஒத்துப்போகிறது. ஆக்டிவ் பண்டில் பேக் மற்றும் ஸ்மார்ட் பேக் பயனர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். இது தவிரப் பயனர்கள் OTT இயங்குதளமான Amazon Prime வீடியோ மொபைல் பதிப்பையும் 30 நாட்களுக்கு அனுபவிக்க முடியும். இது இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 6ஜிபி டேட்டா முடிந்த பிறகு, பயனர்களுக்கு 50p/MB கட்டணம் வசூலிக்கப்படும்.

வெறும் ரூ.10 கூடுதலாகச் செலுத்தினால் இரட்டிப்பு டேட்டாவா?

வெறும் ரூ.10 கூடுதலாகச் செலுத்தினால் இரட்டிப்பு டேட்டாவா?

மேலே உள்ள திட்டம் பிடித்தவர்களின் உன்னிப்பான கவனத்திற்கு, நீங்கள் ரூ.108 டேட்டா வவுச்சரை தேர்வு செய்யும் நேரத்தில் கூடுதலாக வெறும் ரூ.10 செலுத்துவதன் மூலம், ரூ.118 விலையில் உங்களுக்கு இரட்டிப்பு டேட்டா நன்மை கிடைக்கிறது என்பதை மறக்காதீர்கள். மேலே உள்ள திட்டத்துடன் ஒப்பிடும் போது, ரூ. 118 திட்டத்துடன் இரட்டிப்பு டேட்டாவை இந்த 4G டேட்டா வவுச்சர் வழங்குகிறது.

ஆனால், இந்த நன்மைகள் கிடைக்காது.. கவனிக்க மறக்காதீர்..

ஆனால், இந்த நன்மைகள் கிடைக்காது.. கவனிக்க மறக்காதீர்..

ரூ. 118 விலையில், ஏர்டெல் 12ஜிபி இணையத் தரவை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் மேலே உள்ள விங்க் மியூசிக் மற்றும் அமேசான் போன்ற கூடுதல் நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. வழங்கப்படும் 12ஜிபி டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு பயனர்களுக்கு 50p/MB என்ற கட்டணம் விதிக்கப்படும்.

ரூ.148 4ஜி டேட்டா வவுச்சர்

ரூ.148 4ஜி டேட்டா வவுச்சர்

டெல்கோ வழங்கும் பட்டியலில் அடுத்தது ரூ.148 4ஜி டேட்டா வவுச்சர் திட்டமாகும். இத்திட்டம் 148 ரூபாய்க்கு, ஏர்டெல் பயனர்களுக்கு மொத்தம் 15 ஜிபி இணைய டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் பயனரால் ஏற்கனவே உள்ள மற்ற பேக்கின் செல்லுபடியாகும் காலத்துடன் ஒற்றுமையானது. ஆக்டிவ் பண்டில் மற்றும் ஸ்மார்ட் பேக் பயனர்களுக்கும் இந்தத் திட்டம் கிடைக்கிறது.

டேட்டா வவுச்சர் உடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் நன்மை

டேட்டா வவுச்சர் உடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் நன்மை

வழங்கப்படும் 15 ஜிபி டேட்டா முடிந்ததும், பயனர்கள் எந்த ஒரு எம்பிக்கும் 50 பைசா என்ற கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, இந்தத் திட்டம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அணுகலை வழங்குகிறது. இது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டில் உள்ள அனைத்து எக்ஸ்ஸ்ட்ரீம் சேனல்களுக்கும் 30 நாள் அணுகலை அனுமதிக்கிறது என்பது சிறப்பானது. வெறும் ரூ.148 விலையில் 15 ஜிபி டேட்டா கிடைப்பது அருமையான நன்மை தான்.

ரூ. 301 டேட்டா வவுச்சர் உடன் எவ்வளவு டேட்டாவா?

ரூ. 301 டேட்டா வவுச்சர் உடன் எவ்வளவு டேட்டாவா?

பட்டியலில் கடைசியாக அதிக விலையுள்ள 4G டேட்டா வவுச்சர் என்றால், இந்த திட்டம் ரூ. 301 விலையில் வருகிறது. இந்த டேட்டா வவுச்சர் ரூ. 301 விலையில் மொத்தம் 50 ஜிபி இணைய டேட்டாவை வழங்குகிறது. இந்த நன்மை ஏற்கனவே இருக்கும் திட்டத்தைப் போலவே செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்க. டேட்டா வவுச்சர்கள் அனைத்தும் உங்களின் அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி உடன் சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்படும் என்பதை மறக்காதீர்கள்.

உங்களுக்கு தேவையான டேட்டா வவவுச்சரை தேர்வு செய்யுங்கள் மக்களே

உங்களுக்கு தேவையான டேட்டா வவவுச்சரை தேர்வு செய்யுங்கள் மக்களே

இந்த ரூ. 301 திட்டத்தின் அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களைப் போலவே உள்ளன. மேலும், இந்தத் திட்டம் ஒரு கூடுதல் நன்மையை மட்டுமே வழங்குகிறது. அதுதான் Wynk மியூசிக் பிரீமியத்திற்கான அணுகல். உங்கள் அடிப்படை திட்டத்தை நீண்ட வேலிடிட்டி அல்லது 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி திட்டத்தை தேர்வு செய்துகொண்டு, அதற்கு மேல் உங்களுக்கு தேவையான டேட்டா வவவுச்சரை தேர்வு செய்துகொண்டால் தடையில்லாத டேட்டா பயனை நீங்கள் தடையில்லாமல் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel All 4G Data Recharge Vouchers With Amazon Prime Subscription : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X