தினசரி 1.4ஜிபி டேட்டா-75நாட்களுக்கு, குறைந்த விலையில் ஏர்டெல் திட்டம் அறிமுகம்.!
ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி ரூ.399 மற்றும் ரூ.448 திட்டத்தில் அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது ஏர்டெல்
நிறுவனம்.

மேலும் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விரைவில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது ஏர்டெல் அறிமுகம் செய்த திட்டங்களின்
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.419 திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ரூ.419 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 75 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற
சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.399 திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.399 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இதற்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வீதம் 14 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications