Home
News

டேட்டா தீர்ந்துவிட்டதா? நள்ளிரவு வரை காத்திருக்க முடியலையா? வெறும் ரூ.19 முதல் 50ஜிபி வரை வாங்கலாம்..

என்னதான் நாம் தேடித்தேடி, நமக்குப் பொருத்தமான தினசரி டேட்டா கிடைக்கும் ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வு செய்தலும், என்றாவது ஒரு நாள் அல்லது பல நாள், தினசரி டேட்டா வரம்பை மீறிய அளவு பயன்பாட்டை நாம் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. நாம் தேர்வு செய்த திட்டத்துடன் வழங்கப்பட்ட தினசரி டேட்டா வரம்பு முடிந்த பின்னர், நள்ளிரவு அது மீண்டும் ரீடீம் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இது நம்மில் பலருக்கு எரிச்சலை உருவாகியிருக்கும். இனி இப்படியான சூழ்நிலையில் நீங்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை.

டேட்டா தீர்ந்துவிட்டதா? நள்ளிரவு வரை காத்திருக்க முடியலையா?

டேட்டா தீர்ந்துவிட்டதா? நள்ளிரவு வரை காத்திருக்க முடியலையா?

காரணம், இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டரான பாரதி ஏர்டெல் நிறுவனம், அதன் பயனர்களுக்கு வெறும் ரூ.19 முதல் 4ஜி டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. இந்த வவுச்சர்கள் மூலம், பயனர்கள் தினசரி பயன்படுத்தும் டேட்டாவின் அளவை அதிகரிக்க முடியும். உங்களிடம் ப்ரீபெய்ட் திட்டம் இருந்தால், அந்த நாளுக்கான FUP (நியாயமான-பயன்பாடு-கொள்கை) தரவு தீர்ந்துவிட்டால், இந்த 4G டேட்டா வவுச்சர்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதை மறக்க வேண்டாம்.

ஏர்டெல்லின் டேட்டா வவுச்சர் ரூ.19 முதல் கிடைக்கிறதா?

ஏர்டெல்லின் டேட்டா வவுச்சர் ரூ.19 முதல் கிடைக்கிறதா?

இதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், ஏர்டெல் வழங்கும் இந்த வவுச்சர்கள் மிகவும் மலிவான விலையில் அதிக நன்மைகள் கிடைக்கும் தடவை வெறும் ரூ.19 முதல் தொடங்கி வழங்குகின்றது. ஜியோவின் 4ஜி டேட்டா வவுச்சர்கள் ரூ.15 முதல் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டிற்கும் நடுவில் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை, ஆனால் நீங்கள் டேட்டா வவுச்சர்களை தொடர்ந்து வாங்கி பயன்படுத்துபவர்களில் ஒருவர் என்றால், ஜியோவின் வவுச்சர்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரூ.19 டேட்டா வவுச்சர் வழங்கும் நன்மை மற்றும் வேலிடிட்டி

ரூ.19 டேட்டா வவுச்சர் வழங்கும் நன்மை மற்றும் வேலிடிட்டி

எப்படியிருந்தாலும், ஏர்டெல் என்ன வழங்குகிறது என்பதை மையமாக வைத்துப் பார்க்கையில், நிறுவனம் வழங்கும் அடிப்படை டேட்டா வவுச்சர் திட்டமான ரூ.19 டேட்டா வவுச்சர் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும், இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் வெறும் ஒரு நாள் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. தினசரி டேட்டா வரம்பு முடிந்த பின் நள்ளிரவு வரை காத்திருக்க விரும்பாத பயனர்களுக்கு இந்த ரூ.19 டேட்டா வவுச்சர் ஒரு வரப்பிரசாதம். ஆனால், ஒரே நாள் வேலிடிட்டிக்குள் 1ஜிபி டேட்டா முழுவதையும் பயன்படுத்தவில்லை என்றால், அது காலாவதியாகிவிடும்.

ஏர்டெல் ரூ. 58, ரூ. 98, ரூ. 108, ரூ. 118, ரூ. 148 மற்றும் ரூ. 301 டேட்டா வவுச்சர்

ஏர்டெல் ரூ. 58, ரூ. 98, ரூ. 108, ரூ. 118, ரூ. 148 மற்றும் ரூ. 301 டேட்டா வவுச்சர்

பாரதி ஏர்டெல் வழங்கும் மற்ற 4ஜி டேட்டா வவுச்சர்கள் பற்றிப் பார்க்கையில், நிறுவனம் அதன் பயனர்களுக்கு ரூ.301 விலை வரை பல டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனம் ரூ. 58, ரூ. 98, ரூ. 108, ரூ. 118, ரூ. 148 மற்றும் ரூ. 301 வவுச்சர்களையும் வழங்குகிறது. இந்த வவுச்சர்களில் சில ஓவர்-தி-டாப் (OTT) சந்தாக்களையும் கொண்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது. ஏர்டெல் வழங்கும் ரூ. 58 வவுச்சர் 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் பயனரின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டத்துடன் தொடர்புடையது.

ஏர்டெல்லின் ரூ. 98 வவுச்சர் நன்மைகள்

ஏர்டெல்லின் ரூ. 98 வவுச்சர் நன்மைகள்

ஏர்டெல்லின் ரூ. 98 வவுச்சருடன், பயனர்கள் 5ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். மேலும், இதன் செல்லுபடியாகும் காலம் பயனரின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டமும் ஒன்றுதான். அதவது, பயனர் பயன்படுத்தும் அசல் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை இந்த டேட்டா வவுச்சர் பின்பற்றும். அடிப்படை ரூ.19 டேட்டா வவுச்சர் (1 நாள் செல்லுபடியாகும்) தவிர, ஏர்டெல் வழங்கும் மற்ற அனைத்து டேட்டா வவுச்சர்களும் பயனரின் செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்துடனே செயல்படுகிறது.

OTT நன்மை மற்றும் கூடுதல் நன்மையுடன் கிடைக்கும் டேட்டா வவுச்சர் இது தான்

OTT நன்மை மற்றும் கூடுதல் நன்மையுடன் கிடைக்கும் டேட்டா வவுச்சர் இது தான்

அடுத்தபடியாக, நிறுவனம் வழங்கும் டேட்டா வவுச்சர் பற்றி பார்க்கையில், இந்த திட்டம் OTT நன்மை மற்றும் கூடுதல் நன்மையுடன் வருகிறது. ஏர்டெல் பயனர்கள் இப்பொது, ரூ.108 வவுச்சருடன் 6ஜிபி டேட்டாவையும், இலவச அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சோதனையுடன் இலவச ஹெலோட்யூன்களையும் பெறுகிறார்கள். இந்த டேட்டா வவுச்சரின் செல்லுபடியாகும் காலமும் கூட, பயனர்களின் அடிப்படை திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ஒத்துப்போகிறது.

இரட்டிப்பு டேட்டா அளவு வழங்கும் ஏர்டெல் டேட்டா வவுச்சர் திட்டம்

இரட்டிப்பு டேட்டா அளவு வழங்கும் ஏர்டெல் டேட்டா வவுச்சர் திட்டம்

ஏர்டெல் வழங்கும் அடுத்த டேட்டா வவுச்சர் ரூ.118 வவுச்சர் ஆகும். உண்மையில் இந்த டேட்டா வவுச்சர் திட்டமானது முந்தைய வவுச்சரை விட இரட்டிப்பு நன்மையை வழங்குகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த ரூ.118 வவுச்சர் 12ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் பயனரின் அசல் திட்டத்தின் வேலிடிட்டி உடன் ஒத்துப்போகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இது ரூ.108 வவுச்சர் அதன் பயனர்களுக்கு வழங்குவதை விட இரட்டிப்பு டேட்டா அளவை வழங்குகிறது.

50ஜிபி டேட்டாவின் விலை இவ்வளவு கம்மியா?

50ஜிபி டேட்டாவின் விலை இவ்வளவு கம்மியா?

இறுதியாக இருக்கும் இரண்டு டேட்டா வவுச்சர்கள் ரூ.148 மற்றும் ரூ. 301 விலையில் கிடைக்கிறது. ரூ. 148 பேக் பயனர்களுக்கு Xstream மொபைல் பேக்கிற்கான இலவச சந்தாவுடன் 15GB டேட்டாவை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. கடைசியாக, ரூ.301 பேக் மூலம், பயனர்கள் Wynk Music Premium சந்தாவுடன் 50GB டேட்டாவைப் பெறுகிறார்கள். இவை அனைத்தும் பார்தி ஏர்டெல் வழங்கும் 4ஜி டேட்டா வவுச்சர் பிரிவின் கீழ் கிடைக்கிறது. நீங்கள் மிகவும் மலிவு விலை வவுச்சர்களைப் பெற விரும்பினால், ஜியோ என்ன வழங்குகிறது என்பதைப் பார்க்கவும்.

Best Mobiles in India

English summary
Bharti Airtel 4G Data Only Vouchers Start From Rs 19 Goes Up to Rs 301 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X